1. The Death by Water -The Waste Land by T. S. Eliot
  2. ஹையாசிந்த் மலர்கள் நீ எனக்குத் தந்தாய் சென்ற ஆண்டு
    என்னை ஹையாசிந்த் பெண் என்றழைத்தார்கள்
    ஒருநாள் ஹையாசிந்த் தோட்டத்திலிருந்து தாமதமாய் வந்தோம்...
    உன் கைகள் நிறைந்தும்-முடியெல்லாம் நனைந்தும்
    என்னால் பேச முடியவில்லை என் பார்வை மங்கியது
    நான் இருந்தேனா இறந்தேனா ஒன்றும் தெரியவில்லை
    வெளிச்சத்தின் இதயத்தைப் பார்த்தேன் அமைதி
  3. சோசோஸ்டரிஸ் ஒரு புகழ்பெற்ற குறி சொல்லும் சீமாட்டி
    -கடும் மூக்கடைப்பில்-இருப்பினும் ஐரோப்பாவிலேயே
    மிக அறிவாற்றல் மிக்கவள்-கொடிய சீட்டுக்கட்டை வைத்து
    என்னிடம் சொன்னாள்:
    'உனது சீட்டில் மூழ்கி இறந்துபோன அந்தக்காலப் படகு மாலுமி
    (முத்து முத்தாய்ப் போன கண்கள் பார் )
    அடுத்து பெல்லடோனா--அழகிய பெண்
    பாறையில் அமர்ந்த மடோனா
    இப்போது மூன்று கோல்களுடன் ஒருவன்
    இங்கே சக்கரம்
    இங்கே ஒற்றைக்கண் வியாபாரி
    இந்தச் சீட்டு வெறுமை அவனே தன் முதுகில் சுமந்து
    நான் பார்க்க அனுமதிக்கவில்லை
    தூக்கிலிடப்பட்டவனை நான் பார்க்கவில்லை
    நீரில் மூழ்கி இறக்க அஞ்சவேண்டும்
  4. கூட்டங்கூட்டமாய் மனிதர்கள் வட்டமாகவும்
    நன்றி உனக்கு நீ அன்பான திருமதி ஈக்விட்டோனைப்
    பார்த்தால் நானே ஜாதகம் கொண்டுவருவேன்
    என்று சொல் -கவனமுடன் இருக்கவேண்டிய காலமிது
  5. மாயா நகரம்
    பழுப்புநிற உறைபனியில் வைகறையில்
    ஒருகூட்டம் லண்டன் பாலத்தைகே கடந்தபோது
    நிறைய பேர்கள்-நான் நினைத்ததில்லை -இவ்வளவுபேர்கள்
    இல்லாமல் போவார்கள் என்று-சிறியதும் எப்போதாவது
    விடும் பெருமூச்சுக்கள் -ஒவ்வொருவனும் அவன் கண்களை
    நிலைகுத்தித் தரையைப் பார்த்து நடந்தான்
    மேடுகளிலும் சரியும் அரசன் வில்லியம் தெரு மட்டும்
    அன்னை மேரி உல்நாத் வைக்கப்பட்ட காலத்திற்கு
    இறந்த சப்தமாகக் கடைசி ஒன்பது மணிக்கு
  6. அங்கே எனக்குத் தெரிந்த ஒருவனைப்பார்த்தேன்
    நிறுத்தினேன் அழுத்தவாறே "ஸ்டெட்சன்
    மைலேவில் என்னுடன் கப்பலில் இருந்தாய்
    சென்ற ஆண்டு நீ புதைத்த உடல் உன் தோட்டத்தில்
    முளைவிட்டு விட்டதா ?இவ்வருடம் பூக்குமா?
    அல்லது திடீர் உறைபனி அதன்படுக்கையைத்தீண்டுமா?
    அல்லது நாயை அங்கிருந்து விரட்டினரா-மனிதனின் தோழன் அவன்
    மீண்டும் தன நகங்களால் தோண்டி எடுப்பான்
    'நயவஞ்சகமானவனே என் பிரெஞ்சு சகோதரனே

Comments

Popular posts from this blog