(based on )Ode on Grecian Urn by John Keats
நீதான் நிசப்தத்தின் கன்னிகழியா மணமகள்
மெல்லநகரும் காலத்திற்கும் மௌனத்திற்கும் வளர்ப்புச் சிசு-
பசுமையின் வரலாற்றாசானே உனைவிடவும்
அழகிய கதை சொல்லி எக்கவிதை இசைக்கும்?
உன் வடிவம்தாங்கிஇருக்கும் காவிய ஏடுகள்தாம் என்ன?
ஆங்கே தென்படுவோர் தேவர்களா மனிதர்களா-இருவருமா?
ஆற்கடிப் பள்ளத்தாக்கா -டெம்பிளுள்ளோரா?
எவரே அந்த மனிதர்கள்-கடவுளர்கள்?கன்னியரின் நடமாட்டங்கள்?
எத்தகைய காம லீலைகள் ? எப்படியான போராட்டத் தவிப்புகள்?
என்னென்ன ஊதுகுழல்கள்?,மத்தளங்கள்?அடடா-என்ன களியாட்டங்கள்?
கேட்ட பாடல்கள் இனிமையானவையே-ஆயினும் கேளாததோ
மிகமிக இனிமைதான்-எனவே மென் குழல்களே ஊதுங்கள்
இவ்வுணர்ச்சிமிகுச் செவிகட்கு அன்று-இன்னும் மனதுக்கு உவந்த
ஊதுகுழலே வடித்திடுவீர் வரம்பற்ற காற்றில்கலக்கும் கீதங்களை-
கவர்ச்சிமிகு இளைஞர்காள் மரங்களடியைவிட்டு எங்கு செல்வீர்
உம் பாடல்களை விடுத்து?அம்மரங்களும் உதிரா இலைகளுடன் என்றும்!
வீரமிகு காதலர்காள்-முடியாது முடியாது உம்மால் முத்தமிட-
வெல்வதுபோல் தோன்றிடினும் -முடியாது-ஆயினும் வருந்தற்க-
உன் காதலி ஒருநாளும் மூப்படையாள்-உமக்கும் இல்லை சுகம்-
எனினும் என்றென்றும் நீ காதலிப்பாய்-அவள் அழகும் குன்றாதே!
ஆ மகிழ்ச்சியும் ஆனந்தமும் பொங்கும் மரக்கிளைகளே!உங்களால் உதிர்க்கமுடியாது
உங்கள் இலைகளை-வசந்தகாலத்திற்கும் விடை கொடுக்க இயலாது-
இளைப்பாறுதலின்றி இனிமையானப் பண்ணிசைக்கும் பாவலரே-
என்றென்றும் நீவீர் நல்கிடுவீர் புத்தம் புதுப் மெட்டுக்களை!
மென்மேலும் கூடிவரும் இன்பமே-இடையறா இனிமை தரும் காதலே!
என்றும் உளது சுகமே -எப்போதும் கலவி இன்பம் -
எப்போதும் இன்பத்தில் எப்போதும் இளமையில்!
மனிதக் காதலுக்கு மேம்பட்ட உணர்வுகள் இடையறா உண்டு
அதில் வாடா இதயமே-தெவிட்டா இன்பமே நாளும்!
ஆனால் இங்கோ-சூடேறும் நெற்றியும் உலரும் நாக்குமே மிஞ்சும்.
யார் இவர்கள் பலிபீடத்திற்கு வருவோர்கள்?
எந்தப் பலிபீடம் அது-ஓ ரகசிய பூசாரியே-
அந்தப் பலிமாடுதான் வானை நோக்கிக் கத்துகிறதே!
அவைதாம் பட்டிலும் மாலைகளிலும் அலங்காரத்தில்!
எந்த சிற்றூர் அது-நதியோரம்-கடலருகே -மலையோரம் -
அமைதிமிகு கோட்டையுடன் கட்டப்பட்டு காண்கிறேன் ?
எனினும் அச்சிறு நகரதெருக்களெல்லாம் வெறிச்சோடி-
பேரமைதியே என்றும் நிலவும் இடமாக-ஓர் ஆத்மா கூட இன்றி?
திரும்பிவருவோர் எவருமிலர் என்று எவர் உரைப்பார்?
தொன்மைப் படிமமே!அழகின் வெளிப்பாடே!பளிங்கிலான
காளையரையும் கன்னியரையும் செதுக்கிவைத்திருக்கிறாயே-
காட்டுமரக் கிளைகளால் ,மிதிபட்டகொடிகளால் கட்டப்பட்டு:
பேரமைதியின் வடிவமே-நிலையாமையைப் போல் துன்புறுத்தும்
சிந்தனைகளால் துளைக்கிறாய் எம்மை! இறுக்கமிகு பாண்டமே-
முதுமை எங்களை வீணாக்கிவிடலாம்-மற்ற துயருக்கிடையே-
நீ என்றும் உலவிடுவாய் -எங்களுக்கு நல்ல தோழனாய்-சொல்வாய்-
"அழகுதான் உண்மை-உண்மையே அழகு-அவ்வளவுதான்
உனக்குத் தெரியும் -தெரியவேண்டுவதும் இப்புவியில்!"

Comments

Popular posts from this blog