BASED ON -ELEGY WRITTEN IN A COUNTRY CHURCHYARD BY THOMAS GRAY
முடிகின்ற நாளை அறிவித்து மணி ஒலி எழுப்பியது
மேய்ச்சலை முடித்தே கத்தும் ஆவினம் திரும்பின
ஏர் உழவர் தம் இல்லம் நோக்கி களைப்புடன் வந்தனர்
இருட்டும் உலகமும் என்...னிடம் இப்போது மிஞ்சியது

பார்வையிலிருந்து ஒளிர்ந்த காட்சி மெல்ல மறைகிறது
எங்கெங்கும் காற்றில் நிரம்பிநின்றது அருள் பேரமைதி
தட்டாம்பூச்சியின் கூச்சல்களும் பறத்தலுமே எஞ்சியது
மயக்க நிலையே தாலாட்டுது தொலைதூரக் காட்சிகளை

ஐவிகொடிபடர்ந்த அந்த ஆலயக்கோபுரஉச்சியில் மட்டும்
முணுமுணுத்த ஆந்தை ஒன்று நிலவுக்குப் புகார் செய்தது
ஏதோ அதன் ரஹஸ்ய அறையினுள் அத்துமீறியதாம்
அதன் அக்காலம்தொட்டுவரும் வீட்டில் கேடு வந்துற்றதாம்

அந்தக் கரடுமுரடான எல்ம்ஸ் மரங்கள் கீழ் , யூமர நிழலில்
புற்கள் படர்ந்த மண் மேடு மேடாய்க் குவிந்து இருந்தன
ஒவ்வொருவரும் தத்தம் இடத்தில் வெகுகாலமாக இருந்தனர்
எம் முன்னோர்கள்தாம்-ஊர்நாட்டார் -எம் குடிலிலிருந்து சென்றார்

நறுமணம்பரப்பும் இனிய காலைத் தென்றல் காற்று
வைக்கோல் கூடுகளிலிருந்து ஒலியெழுப்பும் ஸ்வால்லோ
சேவல்களின் கொக்கரக்கோ மற்றும் மேய்ப்பனின் குழலொலி
இவையாவும் இவர்களின் படுக்கையிலிருந்து எழுப்பாது இனி

தகிக்கும் கணப்புகள் அவர்களை சுட்டெரிக்காது
எந்த சுறுசுறுப்பான இல்லாளும் அன்பைக் சொரியார்
எந்தக் குழந்தையும் ஓடிஓடித்தந்தையின் வரவு கூறார்
அவர்தம் முழங்காலில் ஏறி விரும்பும் முத்தம் தாரார்

என்றென்றும் வயல்களில் அறுவடை இவர்களே செய்வர்
ஏரின் உதவியில் நிலத்தில் விதைகள் இனிதே விதைப்பர்
குதூகலமாய்க் கொண்டாடி நிலத்தில் கூடி உழைப்பர்
உறுதியான வெட்டுதலில் காடுகள் விளைநிலமாயிற்று

பேராண்மை அன்று அவர்கள் உழைப்பை உதாசீனிப்பதும்
அவர் இல்ல மகிழ்வுகள், மறைபடும் விதிகளை மிதிப்பதும்
பேராற்றல் ஒருபோதும் அவர்கள் சிரிப்பை வெறுக்க எண்ணாது
எளியவர்களின் சீரியபணிகளை என்றுமே எள்ளல் ஆகாது

பெருமை ஏன் அரச சால்வையினால் டம்பம் ஏன் பலத்தால்
வழங்கிய அழகு அனைத்தும் சேர்த்த செல்வம் எல்லாம்
காத்திருக்கும் தவிர்க்கமுடியா அந்த ஓர் மணித்துளிக்கு
புகழின் வழிகள் யாவும் நம்மை இடுகாட்டுக்கே இட்டுச்செல்லும்

பெருமை பீற்றுவோரே எதற்கும் கற்பிக்காதீர் நோக்கம் ஏதும்
இவ்வேழைகளின் கல்லறை பளிங்கில் இல்லாதது குறித்து
தேவாலய நீள்வரிசைகளும் அலங்கார வளைவுகள் எங்கும்
எதிரொலிக்கும் சங்கீதமே முழங்கும் இவர்கள் உயர்வுதனை

அறிவு தனது பக்கங்களைக் கரையான்போல் அரித்து
உழைப்போரின் கண்களில் காணாமல் மறைத்தது
கடும் இல்லாமை அவர்கள் சீரிய சினத்தை அடக்கியது
அதுவே அவர் அன்பு ஆத்ம ராகங்களை உறைய வைத்தது

பற்பல ஸ்படிகக் கற்கள் ஒளி சிந்திச் சுடர்விடும்
இருண்ட அளக்கவொண்ணா ஆழ்கடல் தாங்கிடும்
பற்பல மணம் மிகு மலர்கள் பிறந்து சிரிக்கும் யாரறிவார்
அவை தம் இனிமையையெல்லாம் பாலையில் வீணடிக்கும்.

Comments
Post a Comment