based on Shakespeare's The Tempest ..
அங்கம்-1-காட்சி- 2
மிராண்டா: அன்புத் தந்தையே ,உங்கள் மந்திரக்கலையால் இக்கடலைக் கதறவிட்டிருந்தால் -அதை நிறுத்துங்கள்! வானம் கரிய தாரைக்கடலில் கலக்கிறது-பொங்கிவரும் நெருப்புச் சீற்றத்தால் கடல் வானத்தையே தொட்டுவிடும்போல் உள்ளது.அங்கே துயருறும் உயிர்களைக்கண்டு நான் வருந்துகிறேன்-அழகான கப்பல் -அதனுள்ளே இருந்த அனைத்து மனிதர்களுடன் -கடலில் மூழ்கி தூள் தூளாகிவிட்டதே!அவர்களது கூக்குரல் என் இதயத்தைப் பிளக்கிறது-பாவம் அவர்கள் மறைந்துவிட்டார்கள்!நான் மட்டும் சக்தி உடைய கடவுளாக இருந்தால் ,இக்கடலையே வற்றவைத்திருப்பேன்,கப்பலுக்கு மனிதர்களுக்கும் எவ்வித சேதாரமும் ஏற்பட்டிருக்காது.
ப்ராஸ்பெரோ: அமைதியாய் இரு! இரக்கமுள்ள இதயத்திடம் எவ்விதத் தீங்கும் கப்பலுக்கு வரவில்லை என்று சொல்.
மிராண்டா: மிக மோசமான நாள் இது!
ப்ராஸ்பெரோ:ஒரு தீங்கும் நேரவில்லை என்றே நான் உன்னிடம் சொல்கிறேன்...அன்பான என் பெண்ணே!உனக்காகத்தான் இவற்றையெல்லாம் நான் செய்தேன்.நீ யார் -நான் யார் என்பெதெல்லாம் உனக்குத் தெரியாது.-எங்கிருந்து வருகிறேன் நான்? வெறும் ப்ரொஸ்பேரோ மட்டுமா நான்?இந்தச் சிறிய வீட்டில் உனது சிறந்த தந்தையாய் மட்டுமே பார்த்துவருகிறாய் என்பதெல்லாம் உண்மை இல்லை!
மிராண்டா: அதிகம் தெரிய ஆசைதான்-அந்த எண்ணத்திற்கு மேல் சிந்திக்க முற்படவில்லையே?
ப்ராஸ்பெரோ:இன்னும் விளக்கமாக இவை எல்லாம் பற்றிக்கூறும் நேரம் வந்துவிட்டது.இந்த மந்திர ஆடையை என்மீதிருந்து எடுத்துவிடு
மிராண்டா மந்திர ஆடையை அகற்றுகிறாள்.
மிராண்டா மந்திர ஆடையை அகற்றுகிறாள்.
ப்ராஸ்பெரோ:ஓ மந்திரக் கலையே--சற்றே அங்கு இரு-.மிராண்டா ,உன் கண்களைத் துடைத்துக்கொள்!சாந்தமாய் இரு.உன் இரக்க உணர்வின் அஸ்திவாரத்தையே தொட்டுவிட்ட கப்பல் சீரழிவு என் மந்திரக்கலையின் அம்சமே!திட்டமிட்டது தான்- அவர்களுக்கு எவ்விதத் தீங்கும் வராமல்-ஒருமுடிகூட உதிராமல் -பாதுகாப்புடன் நடத்தப்பட்டதால் -கப்பல் மூழ்கியது.உட்கார் -இனி உனக்கு நிறையத் தெரிய வேண்டி உள்ளது
இருவரும் அமர்கின்றனர்..
இருவரும் அமர்கின்றனர்..
மிராண்டா:முன்பேகூட நம்மைப்பற்றிச் சொல்ல நீங்கள் துவங்கியுடன்-நான் சரமாரியாய்க் கேள்விகள் கேட்க-நீங்கள் "இப்போது வேண்டாம்" என்று நிறுத்தினீர்களே!
ப்ராஸ்பெரோ: இப்போது அந்த நேரம் வந்துவிட்டது.நன்றாகக் கவனமுடன் கேள்,இந்தக்குகைக்கு வருமுன் நீ என்ன நினைவில் வைத்திருக்கிறாய்? -சொல்லமுடியாது உன்னால் என்றே எண்ணுகிறேன்-அப்போதே உனக்கு மூன்று வயதுக்குள்தான்!
மிராண்டா: என்னால் கொஞ்சம் நினைவு கூரமுடியும் அப்பா!
ப்ராஸ்பெரோ: என்னென்று-ஏதேனும் வீட்டை வைத்து-மனிதர்களைக் குறித்து-அல்லது வேறென்ன வடிவம் உன் நினைவுக்கு வருகிறதோ-சொல் பார்ப்போம்.
மிராண்டா:வெகு காலத்திற்குமுன்-கனவுபோல் தோன்றுகிறது-நாலைந்து பணிப்பெண்கள் என்னைப்பார்த்துக்கொள்ளவில்லை?
ப்ராஸ்பெரோ:ஆம்-அதற்குமேலும்தான்!எப்படி உன் நினைவில் இது நிற்கிறது?வேறு என்னென்ன அந்த நினைவுகளின் இருண்டகாலத்தில் நடந்தன?அவை வந்தால்-நீ எப்படி இங்கே வந்தாய் என்பதையும் கூறமுடியும்.
மிராண்டா:ஓ , அது என் நினைவுக்கு வரவில்லையே!
ப்ராஸ்பெரோ:பன்னிரண்டு ஆண்டுகளுக்குமுன்-மகளே-பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்-உன் தந்தை மிலன் நாட்டுச் சீமான்-இளைய அரசனும்-சக்திவாய்ந்தவன்.
மிராண்டா: அய்யா -நீங்கள் என் தந்தை இல்லையா என்ன?
ப்ராஸ்பெரோ: உன் தாய்-நல்ல குணவதி-நீயே அவளது மகள்-உன் தாய் தந்தையரின் ஒரே வாரிசு நீ.
மிராண்டா:ஓ! இந்தக் கொடுமையான சதி அல்லது ஏதோ ஆசிர்வாதத்தில் இங்கு வந்து சேர்ந்தோம்-அப்பா?
ப்ராஸ்பெரோ: இரண்டும்தான்-இரண்டும்தான் மகளே!நம்மை ஆட்சியிலிருந்து சதிகாரக்கும்பல் துரத்தியது-இப்படி ஓர் தீவுக்கு வந்து இருக்க நேர்ந்ததும்-நன்மைக்கு என எண்ணுகிறேன்.
மிராண்டா:என் இதயம் பிளக்கிறதுபோலுள்ளது-தங்களை இவைகளை நினைவுகூரவைப்பது--மேலும் சொல்லுங்கள்!
Comments
Post a Comment