நான் நினைக்கிறேன் , சற்றே திரும்பி விலங்குகளுடன் வாழ
அவைகள் படபடப்பின்றி திருப்தியுடன் உள்ளன
நின்றே-அவைகளை நெடுநேரம் பார்க்கிறேன்
வியர்க்க வியர்க்க அவை உழைப்பதில்லை
அவைகள் தம் நிலை குறித்துப் புலம்புவதில்லை
இரவில் விழித்துத் தம் பாவங்கள் பற்றி அழுவதில்லை
கடவுளுக்குக் செய்யும் கடன் குறித்துப்பேசி
என்னை நோயாளி ஆக்குவதில்லை
ஒன்றுகூட அதிருப்தியாய் இல்லை
மனமுடைந்தும் நான் பார்த்ததேயில்லை
எப்பொருளையும் தனக்கே சுருட்டும்
பைத்தியமும் இல்லவே இல்லை
இன்னொரு விலங்குமுன் மண்டி இடுவதில்லை
ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த
மூதாதையருக்கு வணக்கம் செய்ததில்லை
எந்த மிருகமும் மரியாதைக்குரியதோ
பூமியை வெறுப்பதாகவோ என்றுமே இல்லை.
Walt Whitman.

Comments

Popular posts from this blog