ஒரு தேவதையின் அரவணைப்பில்...
அஞ்சாமைக்குப் பழக்கப்படாததால்
ஆனந்தத்திற்கு அந்நியராய்
தனிமைக்கூடுகளில் சுருண்டுப்போய் வசித்தோம்-
உயர்ந்த புனித ஆலயத்தை விட்டு வெளியேறி
அன்பு எம் பார்வையில் பட்டு
வாழ்க்கையில் விடுபட்டு வாழலானோம்
அன்பு வந்ததே-
அதனுடன் பரவசங்கள் பலவும்
பழைய இனியநினைவுகளும்
அந்தக்கால வலிமிகு வரலாறுகளும் வந்தனவே.
எனினும் அச்சம் தவிர்த்து -
அன்பால் பயத்தின் சங்கிலிகளை
எங்கள் ஆத்மாக்களிலிருந்து விடுவித்தோம்.
எமது அச்ச உணர்வினை வெறுக்கத்துவங்கினோம்
பீறிட்டு வந்த அன்பெனும்
ஜோதியின்வெளிப்பாட்டில்
அஞ்சாமையை எதிர்கொண்டோம் -
அப்போதே பார்த்தோம் -
அன்புதான் நாங்கள் தரும் விலை
இன்றும் , என்றும் என- ஏனெனில்-
அதுவே எங்களுக்கு பூரண விடுதலை அளிக்கும்.
Adapted from MAYA ANGELOU'S TOUCHED BY AN ANGEL

Comments

Popular posts from this blog