நான் சிறுவனாய் இருந்த காலத்திலிருந்தே கலெக்டர்'ஸ் ஆபிஸ் டு திருப்பரங்குன்றம் பஸ்ஸில் ஏறி முருகப்பெருமானைத் தரிசித்து வந்திருக்கிறேன்.பின்னாளில் மூட்டா தோட்டத்திலுருந்தபோது பல நாட்கள் சென்று முருகன் அருளைப்பெற விழைந்திருக்கிறேன்.பெரிய ' ஓ 'வடிவத்தில், வெண்ணீறணிந்து தூரத்திலிருந்து பார்க்கையிலே கூட மனம் கவரும் மருகன் அவன்.இன்னும் சொல்லவேண்டுமானால் நாற்பத்து எட்டு நாட்கள் மலையைச் சுற்றி வந்துதான் மூட்டா தோட்டத்து இடமே எங்களுக்கு கிடைத்தது.கோவினுள் நுழையும்போது கருப்பண்ண சாமியை கும்பிட்டுவிட்டு -விநாயகரை வணங்கி-நெடிய இரண்டாம் கட்ட நிலையைக் கடந்து மேலே சென்று பரந்துபட்ட நிலைக்கு வருவோம். இடதுபுறம் கோயில் குளத்தில் இறங்கி, உப்பு,மிளகு, வெல்லம் பொட்டலங்கள் வாங்கி தோஷ நிவர்த்தி செய்துவிட்டு,.அடுத்த கட்ட நிலைக்கு பல படிகள் ஏறி வந்து-கொடிமரத்தின்முன் விழுந்து வணங்கி பிரார்த்தனை செய்வோம்.கூட்டமில்லாப்பொழுதில் மிகப் பேரமைதியை நாம் அங்கெ உணரமுடியும்.இன்னும் மேலே சென்றால் -வலதுபுறம் கோவர்தனாம்பிகையை வணங்கிவிட்டு-மெயின் சன்னதிக்கு ஏறி வருகிறோம்.ஐந்து அற்புத மூலவர் விக்ரகங்களை ஒன்றன் பின் ஒன்றாகக் கண்டு பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.பெரிய விநாயகர்.வலப்புறம் சத்தியகிரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் விளங்கும் சிவலிங்கக் காட்சி.இடப்புறம் துர்க்கை.-அருமையான தோற்றப் பொலிவுடன்.அவருக்கு இடப்புறம் அண்ணல் -அழகன்,மயில் வாகனத்தில் அழகி தெய்வயானையுடன் மணக்கோலத்தில் -பார்த்துப்பார்த்துப் பரவசம் அடைகிறோம்.அவருக்கு வலப்புறம் பவளக்கனிவாய்ப்பெருமாள் என்ற திவ்விய நாமத்துடன் மகா Vishnu..வேறு என்னவேண்டும்! ஓம் சரவண பவ என்று உச்சரித்து எண்ணற்ற மனா நிம்மதி அடைகிறோம்-கூட்டமாக இருப்பின்-அரோஹரா சப்த கோஷம், உடலும் உள்ளமும் சிலிர்க்கவைக்கும் அற்புதக் கணங்கள் அவை.
மெல்ல மெல்லப் படியிறங்கி கீழ்நிலையில் தெய்வானையை முருகன் மணக்கும் சிற்ப எழிலைத்தரிசித்து விட்டு, வலப்புறம் இறங்கி மலையைச் சுற்றத் துவங்குகிறோம்-ஏனெனில் இது குடவரைக் கோயில் ஆனதால் பிரதக்ஷிணம் மேலே செய்ய அமைப்பு இல்லை.அதனாலென்ன மலை வலம் வந்தால் போயிற்று.ஷஷ்டிக் கவசமும்,காயத்ரியும் உச்சரித்தவாறே மெல்ல நடக்கிறோம்-சிறிது நேரத்தில் ஊரின் சந்தடிகள் குறைந்து-அருமையான இயற்கை எழில் நமக்குக் கிடைக்கிறது.பச்சைப்பசேல் வயல் வெளிகள், உயர்ந்த நெடுமரங்கள் இடப்புறம், மலையின் கரிய அல்லது பழுப்புநிறமான பாறைகள் மறுபுறம் -திடீரென்று பறந்து செல்லும் மயில் கூட்டங்கள் , அவைகள் எழுப்பும் விசித்திர ஒலிகள்-எதோ நாம் புதிய இடமொன்றிற்கு வந்துவிட்ட பேரமைதி நிலை! மீண்டும் நகர் நோக்கித் திரும்புகையில் சில குகைகளுக்குள் நுழைந்து சற்றே த்யானத்தில் திளைக்கிறோம்-அப்படி ஒரு மோனநிலை.புறப்பட்ட இடத்திற்கே வரும்போது -இரண்டு மைல்கள்தான் நடந்திருப்போம்.
மற்றொரு நாள் -அன்று சிவராத்திரி-மலைவலத்தை முடித்துவிட்டு-முன்புறம் மலைக்குமேல் ஏறும் படிகள் வழியாக -ஏறி ஏறி -ஒரு சிறிய தர்க்கா வைக்கடந்து அழகிய காசி விஸ்வநாதர் கருவறையைக் காண்கிறோம்-அற்புதமான மடு ஒன்று அருகே-ஸ்படிகம்போல் நீருடன்-'மாசில் வீணையும் மாலை மதியமும்' பாடி வழிபாடு செய்கிறோம்-இளைப்பாறுகிறோம்-எதிரே தெரியும் நகரின் சிறிய தோற்றங்களில் மனதைப் பறிகொடுக்கிறோம்.கீழே இறங்கி வருகையில் எல்லையில்லா இன்பம் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துவது உறுதி. Madurai O Madurai (16)
மற்றொரு நாள் -அன்று சிவராத்திரி-மலைவலத்தை முடித்துவிட்டு-முன்புறம் மலைக்குமேல் ஏறும் படிகள் வழியாக -ஏறி ஏறி -ஒரு சிறிய தர்க்கா வைக்கடந்து அழகிய காசி விஸ்வநாதர் கருவறையைக் காண்கிறோம்-அற்புதமான மடு ஒன்று அருகே-ஸ்படிகம்போல் நீருடன்-'மாசில் வீணையும் மாலை மதியமும்' பாடி வழிபாடு செய்கிறோம்-இளைப்பாறுகிறோம்-எதிரே தெரியும் நகரின் சிறிய தோற்றங்களில் மனதைப் பறிகொடுக்கிறோம்.கீழே இறங்கி வருகையில் எல்லையில்லா இன்பம் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துவது உறுதி. Madurai O Madurai (16)
Comments
Post a Comment