(TO JS /07 M 378
இந்தப்பளிங்குக் கல்லறை
அரசால் எழுப்பப்பட்டது )
அவனுக்கு எதிராக எந்த அலுவலகத் தாக்கீதுமில்லை எனக் கணக்கெடுப்புத்துறை கூறிற்று
அவனது நடத்தைக் குறித்து அனைத்துத் தகவல்களும் ஒத்துப்போகின்றன
இக்காலப் பொருள்படி -பழைய மதிப்பீடுகளில் -அவன் ஒரு மஹான் -
ஏனெனில் அவன் செய்ததெல்லாம் சமுதாய மேம்பாடுகளுக்காகவே
யுத்தகாலம் தவிர அவன் பணியிலிருந்து ஓய்வெடுப்பதுவரை அவனது
தொழிற்சாலையில் ஒருமுறைகூடப் பணிநீக்கம் செய்யப்படவில்லை-
அவன் தனது பட்ஜ்மோட்டார் நிறுவனர்களிடம் த்ருப்திதரும் முறையில்
பணியாற்றி இருக்கிறான்-என்றுமே வேண்டாதவனாகவோ அல்லது
விசித்திரமான எண்ணங்களைக் கூறியதாகவோ எந்தப்புகாரும் இல்லை-
ஒழுங்காகவே சங்கத்திற்குக் கொடுக்கவேண்டிய சந்தாவையும் செலுத்தி இருக்கிறார்-
(நமது தகவல்படி அந்த சங்கம் சரியானதே )
நமது சமூக உளவியல் நோக்கர்கள் கூற்றுப்படி அவன் அனைவருக்கும் தெரிந்தவனாகவும்
போதிய அளவே குடிப்பவனாகவும் இருந்து வந்திருக்கிறான்-
இதழியல் துறைப்படி-தினமும் நாளிதழ் வாங்கிப் படித்துள்ளான்-
சாதாரணவகையிலேயேதான் விளம்பரங்களை விமர்சித்துள்ளான்-
அவனது பெயரில் எடுக்கப்பட்ட பத்திரங்கள்படி காப்பீடு செய்துள்ளான்.
அவன் உடல்நிலை குறித்த தகவல்படி ஒரே ஒருமுறைதான் மருத்துவச்சாலையில்
அனுமதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பியுள்ளான்-தயாரிப்பு ஆராய்ச்சி மற்றும்
உயர்நிலை வாழ்வுத்துறை கூற்றுப்படி தவணை முறைப் பற்றிய நல்லெண்ணம் உண்டு
ஒரு நவீன மனிதனுக்கு வேண்டிய அனைத்தும்-ஒலிபெருக்கி ,வானொலி,குளிர்சாதனப்பெட்டி-
அனைத்தையும் அவன் பயன்படுத்தி இருக்கிறான் -மக்கள் கருத்து ஆய்வாளர்கள் அவன்
காலத்திற்கேற்ப -சமாதான காலங்களில் அதற்கேற்பவும் ,யுத்தகாலங்களில் போரிட்டும்
அவன் செய்துவந்துள்ளான்-திருமணம் செய்து ஐந்து குழந்தைகளை கொடுத்துள்ளான்-
மக்கள்கட்டுப்பாட்டுத்துறையின் விதிகளின்படி அது சரியான தந்தையின் பங்களிப்பே ஆகும் -
ஆசிரியர்கள் தகவல்படி குழந்தைகளின் கல்வியில் அவன் குறுக்கீடு செய்ததில்லை-
அவன் பூரண விடுதலையுடன் இருந்தானா?
அவன் மகிழ்ச்சிமிகுந்தவனாக இருந்தானா?
என்றே கேள்விகளெல்லாம் அபத்தம் !
ஏனெனில் அப்படி ஏதும் தவறிருப்பின்
அது நமக்குத் தெரிந்திருக்கும்!
based on UNKNOWN CITIZEN by W.H. AUDEN.
The Unknown Citizen by W.H. Auden is a satiric poem. It describes an average citizen in a government-controlled state. In many big cities, there is a monument to the Unknown Soldier that stands for the thousands of unknown soldiers who die for their country. The title of Auden’s poem parodies this.( Wystan Hugh Auden.)

Comments

Popular posts from this blog