- Based on The Waste Land by T.S. Eliot
- ஏப்ரல் மிகமிகக் கொடுமையான மாதம்
பாழ்நிலத்திலிருந்து மலர் மலர்வதும்
நினைவும் ஆசையும் கூடுவதும்-கூடி...
வசந்த மழையில் காய்ந்த வேர்கள் துளிர்ப்பதும் - குளிர்காலம் நம்மை வெதுவெதுப்பாக வைத்தது
பூமி எங்கணும்பனியில் மரத்துப்போய்
வறண்ட வேர்கள் கிளெர்ந்தெழுவதாக - கோடைகாலம் வியக்கவைத்தது நம்மை
ஸ்டாஅன்பேர்கேர்சீ ஏரிக்கு வந்தடைந்தோம்
மழையில் பயணித்தே கோலனடில் தங்கி
சூரிய ஒளியில் ஹாப்கர்டென் சேர்ந்தோம்
காபி குடித்து ஒரு மணிநேரம் பேசினோம்
"ருஷியன் இல்லை நான்,லிதுனியாவிலிருந்து வந்த
உண்மையான ஜெர்மன்" - இளவரசன் வீட்டில் -சிறுமியாக இருந்தபோது
சொந்தக்காரன் ஸ்லட்டில் கூட்டிச் சென்றான்
நான் பயந்தேன்-அவன் அரவணைத்து-மேரி,
மேரி-இறுகப்பற்றிக்கொள்"-என்றான்-கீழே சென்றோம்
பனிமலையில்-எத்தகைய சுதந்திரம்!
இரவெல்லாம் படித்தேன்,தெற்கே குளிரில் பயணித்தேன் - எந்தவேர்களைப்பிடித்துள்ளோம் என்ன கிளைகள் வளர
உதவாப்பாறையிலிருந்து?மனுஷபுத்திரனே
உன்னால் கூற இயலாது -உனக்குத் தெரிந்ததெல்லாம்
துண்டுதுண்டாக சில வடிவங்கள் ,எங்கே சூரியக்கதிர்கள்
விழுந்து,பட்ட மரங்கள் எந்த நிழலும் தராதோ-எப்பூச்சியும்
ஆறுதல் தராதோ
வெறும் பாறை மட்டும் , நீரின் ஒலியும் இருக்காதோ-
அதோ நிழல்படியும் சிகப்புப் பாறையின்கீழ்
(இந்த நிழலில்-சிகப்புப்பாறையின்கீழ் வா)
இவையிரண்டிலுமிருந்து பிறிதொன்றைக்காட்டுகிறேன்
காலையில் உன் நிழல் நீண்டுவரும் பின்னால்
மற்றும் மாலையில் எழும்பிவரும் முன்னால்
பயம் என்பதைக் கையளவுத் தூசியில் காட்டுவேன் - to be continued...
- By 1921, stuck in a boring bank job and an unhappy marriage, Eliot had a bit of a mental breakdown. As he took leave from Lloyds Bank to recover, he began to reflect on the desolation of post-war European culture. He saw it as a spiritually empty society that had veered too far away from its traditions. It was a level of despair without precedent, and to address it Eliot had to write a poem unlike any other that came before it. In 1922, Eliot founded a literary journal called Criterion, and in its first issue he published the result of his efforts—The Waste Land.(Shmoops)
ReplyForward
|
Comments
Post a Comment