எப்போது சிவாஜியைப் படத்தில் பார்த்தேன் ?பாகப்பிரிவினை தான் முதல் படம்-ஒன்பது வயதில் என்னபுரியாது?ஆனால் ஏன்பிறந்தாய் மகனே-என் அக்காவின் திருமண நலங்கில்பாடித் திட்டு அப்பாவிடம் வாங்கிய அனுபவம் இருக்கிறதே!பாவமன்னிப்பும் பார்த்துவிட்டு உருகித்தான்போனேன்-பாசமலர் பார்க்கமுடியாமல் ஓடிவந்துவிட்டேன்.பாலும் பழமும் பின்னாளில் பார்த்துவிட்டு வீட்டில் உடல்நலம் குன்றிப் படுத்த அப்பாவுக்கு உதவிசெய்வது முக்கியம் என்று உணர்ந்தேன்.புதியபறவையும் அப்புறம்தான் பார்த்தேன்-பார்த்தசாரதி சாரின் தந்தையார் நடத்தி வந்த தத்தனேரி-ஜெமினி டாக்கீஸில்!டூரிங் தியேட்டர் அது.நவராத்திரியும் அங்கேதான்-எல்லாம் ஓசியில்!பிழிய வைத்துவிடும் துன்பியல் படங்கள் அவை-வீட்டில் துயரமான நாட்களில் அருமருந்தாக சிவாஜிபடங்கள் இருந்தன-ஆனால் எம் ஜியார்பட ரசிகர்களே முரடர்களாகவும் வம்பு செய்பவர்களாகவும் இருந்தனர்-சிவாஜி ரசிகர்களெல்லாம் நளினமாகவும் நாகரீகமாகவும் இருந்தனர்(என்னுடைய அனுமானம்).
எத்தனை எம்ஜியார் சிவாஜி படங்கள் பத்தாவதிலிருந்து ?முப்பது வயதுவரைதான் -அப்புறம் சினிமா மயக்கம் என்னை விட்டுவிட்டது-போராட்டக் களம்தான் ஈர்த்தது--ஆனாலும் நியாயம் நேர்மை என்று சினிமாக்கள் நல்லதையும் புகட்டியதைக் கண்டிப்பாக சொல்லியாகவேண்டும்-சிவாஜிக்கு வயதாகிப் படம் பார்க்கவே பிடிக்கவில்லை-ரஜினி கமல் முகங்களில் சிவாஜி எம்ஜியாருக்கு இருந்த முதிர்ச்சி இல்லை (அப்போது!).சினிமாவே சிறுபிள்ளைத்தனமாகப் பட்டது பாக்யராஜ் படத்தில் தான்-பாரதிராஜாவும் பாலசந்தரும் ஸ்ரீதருக்குப் பின் கவர்ந்தனர்-சிவாஜியின் திரிசூலம் படவிழாவில் தமுக்கத்தில்-நண்பன் ஜெயராமனோடு..ஏற்கனவே தங்கப்பதக்கம் போன்ற அவரது நாடகங்களும் பார்த்து பரவசத்திலிருந்தோம்.ஜெயலலிதாவுடன் கலாட்டாக்கல்யாணம் பார்த்து அகமகிழ்ந்துபோனோம்!எங்கிருந்தோ வந்தாள்-சுமதி என் சுந்தரி எல்லாம் கேட்கவே வேண்டாம்-அந்த வாலிபப்பருவத்துக்குத் தீனிபோட்ட அருமையான படங்கள்-பள்ளிக்கூடத்திலேயே திருவிளையாடல் தொடங்கி கந்தன் கருணை வரை வந்த புராணப் படங்கள் கல்லூரிநாட்களிலும் தொடர்ந்து வந்தன-
அந்த நாட்களில் பாட்டே கதியாகக் கிடப்போம்-சிவந்தமண் -ஊட்டிவரை உறவெல்லாம் உள்ளத்தைக் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பாடல்கள் நிறைந்தது-தில்லானா மோகனாம்பாளும் வியட்நாம் வீடும் கவுரவமும் கட்டிப் போட்டன!
சிவாஜி சாரைச் சந்திப்பேன் என்று திட்டமெல்லாம் இல்லாமலேயே
`சித்தித்தது ! அவரது வீடு வழியாக நடந்துபோகையில் 'உள்ளே போய்ப் பாருங்க"என்றே வாயிற்காவலாளி சொல்ல -ஓடிச் சென்று அன்னை இல்லத்தில் இம்மாபெரும் கலைஞரைச் சந்தித்தது மறக்கவே முடியாது-யாருடனோ கையில் சிகரெட்டுடன் பேசிக்கொண்டிருந்த அவர் என்னைப்பார்த்ததும் எழுந்திருந்து ஓர் உறுமலுடன் வர-என் மனதில் வாய்த்த பிம்பம் சிதறியது-அவ்வளவு அண்மையில்-கண்கள் ஒளி எங்கே-?கருத்துக்காணப்பட்டஉதடுகள்!!-என்னையுமறியாமல் ஆங்கிலத்தில்,"Having been your fan ever since I started seeing movies I thought that I must meet you to pay my respect SiR"என்று சொன்னவுடன் எத்தனை மாற்றம் அவரது நடத்தையில்!நாம் பார்த்து ரசித்த gentleman சிவாஜி-மிகவும் கனிவுடனும் அன்புடனும்!'இங்கே உட்காருங்கள் 'என்றார் அருகில் ஓர் இருக்கையைக் காட்டி- தொடர்ந்து யாரோ ஒரு காங்கிரஸ்காரருடன் பேசிக்கொண்டிருந்தார்-என்னையும் அடிக்கடிப் பார்த்து' "வேறு ஒண்ணும் இல்லிங்களா?'என்று கேட்டுக்கொண்டிருந்தார்-உங்களோடு ஒரு நாள் பழகி உங்களை பற்றி ஆங்கிலத்தில் உங்கள் உள்ளே இருக்கும் ரசிகனை வெளிக்கொணர ஆசை என்று எப்படிச் சொல்வேன்-அவர் முதலில்நடந்துகொண்டவிதம் அதைச் சொல்லமுடியாமல் தடுத்தது எனது துர்பாக்கியம்.அப்போது இவர் பார்க்கிறவர்களை நன்கு கவனித்து கிரகிக்கும் தன்மை கொண்டவர் என்ற கருத்து நினைவுக்கு வந்ததால் நான் அமர்ந்த நிலையைச் சற்றே மாற்றி ஒருவித யோகிக் போஸில் அமர்ந்தேனோ இல்லையோ-அவரது தீப்பொறிக் கண்கள் சரேலெனதிரும்பி என்னைக் குத்திட்டுப் பார்க்கத் தொடங்கினார்-இரண்டுமூன்றுமுறை மீண்டும் அதேபோல் "வேறொன்னும் இல்லிங்களா? என்று கேட்டுவிட்டு-நான் மறுக்க மறுக்கக் காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார்....அந்தநாள் ஞாபகம் !

Comments
Post a Comment