1. Based on The Waste Land by T.S. Eliot
  2. 2...A Game of Chess
  3. பளபளவென பளிங்கிலான சிம்மாசனத்தில் ராணிபோல் ...
    அவள் ஏந்திய கண்ணாடிக்கலத்திற்கு மேற்புறம்
    திராட்சைகொடிகள் படர்ந்து தங்க நிறக்காமனும்
    (மற்றோர் கலத்தின் மேற்புறம் அவன் கண்கள் பொத்தி)
    இரட்டிப்பு ஜ்வலிப்பில் ஏழுகிளைகளோடு மெழுகு விளக்கும்
    அலங்கரிக்க மேசையெங்கும் ஒளி பரப்பும் அற்புதம்
    அவளது நகைகள் மின்னி அந்த இடமே ஒளிர்ந்தது
    பட்டாடை போர்த்தியபெட்டிக்களும் குவிந்தன
    தந்தங்களென்ன தகதக என்று மின்னும் பாத்திரங்கள்
    கூட்டுச்சேர்க்கையில் நறுமணத்தைல வாசம்
    உணர்வுகளையெல்லாம் மயங்கச் செய்யும் சூழல்
    ஜன்னல்வழிவரும் காற்றும் மணக்க ஓங்கித் திமிறி
    எரியும் மெழுகு விளக்குகள் அவை தரும் பலவகை
    வண்ணப்புகைகளும் -மேற்புற சுவரின் சிற்பங்கள்
    செப்புதகடுகளும் கடல் மரத்தில் கடைந்த உத்திரங்களும்
    பச்சை ஆரஞ்சு நிறங்களில் பற்பல மணிகளின் நுட்பங்கள்
    அவைகளின் மங்கலான ஒளியில் தனித்துத்தெரியும்
    செதுக்கிய டால்பின் நீந்திவரும் எழில் காட்சிகள்
  4. அக்காலப்புராதனத் திரைச் சீலைகள் காட்சியில்
    வெளியே ஜன்னல்வழித்தெரியும் பசுமை போல்
    பிலோமெல் கதறக்கதற நுகரப்பட்டாள் டெரஸ் போன்ற
    கொடூர ரோமானிய அரசனால் என்ற சிற்பமும்
    எனினும் நைட்டிங்கேல் பறவை அழுதது ஒலித்தது
    எல்லாப் பாலைவனத்தில் பிசிறின்றிக் கேட்டது
    உலகம் இன்னும் கொடுமையாக ஜக் ஜக் என
    ஆபாசமாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது
  5. காலத்தின் உதிர்ந்த மெலிந்த கழிகள்
    சுவர்களில் சொல்லப்பட்டன,முறைக்கும் வடிவங்கள்
    எகிறிஎட்டிப் பார்த்தன ,அமைதியின் அறைகள்
    காலடி ஓசைகள் கலந்துவந்தன படிக்கட்டுகளில்
    தீயின் வெளிச்சத்தில் கோதுகின்ற தலைமுடியை
    அவள் சீவி அவை விரிந்து குதித்தன எரிதழலாய்
    சொற்களாய்ச் சுடர்விட்டு காட்டுத்தன அமைதி அதற்குப்பின்
  6. A Game of Chess
    You are transported to the glittery room of a lavish woman, and you notice that hanging from the wall is an image of "the change of Philomel," a woman from Greek myth who was raped by King Tereus and then changed into a nightingale. Some anxious person says that their nerves are bad, and asks you to stay the night. This is followed by a couple of fragments vaguely asking you what you know and remember. The section finishes with a scene of two women chatting and trying to sneak in a few more drinks before closing time at the bar.
    -(Shmoops)
    Based on The Waste Land by T.S. Eliot

Comments

Popular posts from this blog