சொல்லாதே என்னிடம் சோக கீதங்களில்
வாழ்க்கை ஒரு வெற்றுக்கனவு என்று-
சோம்பி இருப்பான் வாழ்வு என்றோ மடிந்திடும்
வாழ்க்கை என்பது தோன்றி மறைவதா என்ன.
வாழ்வு என்றும் நிஜமானது-நிலைத்திருப்பது
கல்லறை ஒன்றும் அதன் குறிக்கோள் அன்று
மண் தான் நீ, மண்ணுக்கே திரும்பி விடுவாய்
என்று சொல்லப்படுவது உன் ஆத்மாவிற்கு அல்ல
கலந்திருப்பது, துக்கப்படுவதுமே மட்டும் இல்லை
வாழ்வு ,முடிவான விதியோ, வழியோ மட்டும் இல்லை
செயல்பட்டுக்கொண்டே இருப்பதே - நாளை என்பதெல்லாம் -
இன்றிலிருந்துக் கற்று உயர்ந்து போவதே என்றுணர்.
கலைகள் முடிவற்றவை, காலமோ கடந்து செல்வது
நம் இதயமோ வலிமையுடன், அச்சமற்று இருப்பினும்
அவ்வப்போது அதில் இறுதிப்பறை ஒலியும் கேட்கிறதே -
கடைசிப்பயணம் எனும் இடுகாட்டு ஊர்வலச் சத்தமாய்
உலகமே பரந்த போர்க்களம் என்பதே உண்மை
தற்சமயம் வந்து போகும் வெற்றிடம் இல்லை அது
ஊமையராய் வாழ்ந்து, மந்தையராய்த் திரிய வேண்டாம்!
வீரனாய்க் களத்தில் என்றும்போராடு எந்நாளும்!
வருங்காலம் ஏதுமில்லை- அது மிக இனிமையாய் இருந்தாலும்
இறந்த காலமெல்லாம் மண்ணோடு மண்ணாய் மடியட்டும்
செயல்படு ,செயல் படு ,ஒவ்வொரு நொடியும் நிகழ்காலத்தில் -
இதயத்தை நம்பியும் , மேலுறையும் இறையை நம்பியும்!
உயர்ந்த மாந்தரின் வாழ்க்கையெல்லாம் சொல்வதெனில்
நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் உயர்ந்திடலாம் என்பதே
செல்லுகின்றபோதும் முடிவாக , நமக்குப் பின்னால் -நம் காலடித் தடங்களை பதித்தே பூவுலகில் மறைவோம்!
From A PSALM OF LIFE BY LONGFELLOW.

Comments

Popular posts from this blog