பிரான்சிஸ் கார்ன்போர்ட்
அனைத்து ஆத்மாக்கள் இரவு
என் காதலன் என்னிடம் திரும்பிவந்தான்
நவம்பரில் மரத்தடியே
தங்க இடமின்றி -ஒளியின்றி
என் தோள்கள்மீது கை வைத்தான்
என்னை விந்தையாகவோ வயகானவளாகவோ நினைக்கவில்லை-
நானும் அவ்விதமே அவனை எண்ணினேன்
ஆன் ஸ்தீவன்சன்
நினைக்காதே
எனக்குத் தெரியாதென்று
நீ என்னுடன்பேசும்போது
உன் மனதுக் கை
தெரியாததுபோல்
என்மீது ஏறி வருகிறது
நினைக்காதே
அது எனக்குத் தெரியாதென்று
உனக்கே தெரியும்
நான் சொல்வதெல்லாம்
நெய்யும் ஆடையைப் பற்றி
from Hamlet of Shakespeare..
ஹேம்லட் : சொற்கள், சொற்கள், சொற்கள்
பொலோனியஸ்:எதைப்பற்றி, பிரபுவே?
ஹேம்லட்:யார் யாருக்கிடையே?
பொலோ:நீங்கள் சொன்ன சொற்கள் எதை பற்றி?
ஹேம்லட்:பொய்கள் அய்யா ...வம்புப்பிடித்த எழுத்தாளன் சொல்கிறான்;வயதானால் வெள்ளைத் தாடி இருக்குமாம்,அவர்கள் முகங்கள் சுருங்கியும் ,கண்கள் பீளையைச் சொரிந்தும் ;எந்த ஞானமும் இன்றியும் ,பலவீன தொடைகளும் கொண்டும்-இதையெல்லாம் நம்பினாலும் ,இப்படியெல்லாம் எழுதுவது நேர்மையற்ற செயல் -நீங்களே ஒருநாள் மூப்படைவீர்-ஒரு நண்டு பின்நோக்கிச் செய்வதுபோல் பயணிப்பீர்...
பொலோ ;(தனக்குள்);இது மனநோயாயினும் ஓர் முறையோடு உள்ளது (ஹாம்லெட்டிடம்);வெளியில் வருகிறீர்களா பிரபுவே-
ஹேம்லட்:எனது கல்லறைக்கு ..
பொலோ:அது இவ்வுலகைவிட்டுச் செல்கையில் ...(தனக்குள்):இவனது பதில்கள் எத்தகைய பொருள்கொண்டுள்ளன சில நேரங்களில் -இத்தகைய மகிழ்ச்சி பித்தர்களுக்கே உரியது-அறிவும் தெளிவும் உடையவனால்கூட இப்படிப் புனைய வராது.

Comments

Popular posts from this blog