நான் உன்னை நேசிக்கவில்லை ஏனெனில் -உன்னை மட்டுமே நேசிக்கிறேன்
உன்னை நேசிப்பதிலிருந்து நேசிக்காமலும் இருக்கிறேன்
உனக்காக காத்திருந்து காத்திராமலும் இருக்கிறேன்
எனது இதயம் குளிர்ச்சியிலிருந்து உஷ்ணமாய் ஆகிறது
நான் உன்னை மட்டும் நேசிக்கிறேன் ஏனெனில் உன் ஒருத்தியையே நான் நேசிக்கிறேன்
உன்னை வெறுக்கிறேன் ஆழமாகவும் -வெறுத்துக்கொண்டே
தலை வணங்குவேன்-என் மாறுபடும் நேசிப்பின் அளவுகோல்
உன்னைப்பார்க்காவிடினும் கண்மூடித்தனமாய் நேசிப்பதுதான்
ஜனவரி மாத ஆதவனின் ஒளியில் என் இதயம்
அதன் கடுமையான கதிர்களால் விழுங்கப்பட்டு
எனது உண்மையான அமைதியும் களவுபோகும்
கதையின் இக்கட்டத்தில் நான் தான் மறைந்துவிடுவேன்
நான் ஒருவனே-உன்னை நேசிப்பதால் தான் மறைந்துவிடுவேன்
ஏனெனில் உன்னை வெப்பத்திலும் எனது ரத்த அணுக்கள்
ஒவ்வொன்றிலும் நேசிப்பதால் ,
Based on Pablo Neruda's I do not love you except because I love you.
புலியே புலியே ஒளிர்ந்திடும் புலியே
காட்டிடை இரவினில் ஒளிர்ந்திடும் புலியே
செய்யமுடியா எந்தக்கரம் -எந்தக்கண்
உனது அச்சம் தரும் அளவான உடலைப் படைத்தது?
தொலைவிலுள்ள பூமியிலா விண்ணிலா -
எங்கிருந்து கொணர்ந்தது உன் சுட்டும் விழிச்சுடர்?
எந்த இறக்கைகளில் வானளாவப் பறந்தான் உனைச் செய்தோன்?
எந்தக்கையினால் உன்தீயான தேகம் படைத்தான்?
என்ன நெஞ்சுரம் வேண்டும்?என்ன கலையம்சம் வேண்டும்?
உன் வலிமைமிகு இதயத்தைப் பொருத்திவைக்க?
எந்த உளியினால் ?எந்தச் சங்கிலியினால்?
எந்த ஊது உலையில் உன் மூளை உருவாயிற்று?
எந்த உரலில்?எத்தகைய உலுக்கும் பிடியில்?
எந்த தைரியத்தையும் பயங்கரத்தையும் இணைத்து?
விண்மீன்கள் தங்கள் ஈட்டிகளை எரிந்தன
மேலுலகமே அவர்தம் கண்ணீரால் நிரம்பின
ஆக்கியோன்தான் புன்னகையுடன் உனைப் படைத்தானா?
ஆட்டுக்குட்டியைச் செய்தோனே உன்னையும் செய்தானா?
புலியே புலியே ஒளிர்ந்திடும் புலியே
காட்டிடை இரவினில் ஒளிர்ந்திடும் புலியே
செய்யமுடியா எந்தக்கரம் -எந்தக்கண்
உனது அச்சம் தரும் அளவான உடலைப் படைத்தது?
Based on Tyger Tyger by William Blake.
To understand "The Tyger" fully, you need to know Blake's symbols. One of the central themes in his major works is that of the Creator as a blacksmith. This is both God the Creator (personified in Blake's myth as Los) and Blake himself (again with Los as his alter-ego.) Blake identified God's creative process with the work of an artist. And it is art that brings creation to its fulfillment -- by showing the world as it is, by sharpening perception, by giving form to ideas.
Blake's story of creation differs from the Genesis account. The familiar world was created only after a cosmic catastrophe. When the life of the spirit was reduced to a sea of atoms, the Creator set a limit below which it could not deteriorate farther, and began creating the world of nature. The longer books that Blake wrote describe Los's creation of animals and people within the world of nature. One particularly powerful passage in "Milton" describes Los's family weaving the bodies of each unborn child.--by Ed Friedlander, M.D.

Comments

Popular posts from this blog