" நரைகூடிக் கிழப்பருவம் எய்தி.."
வயதாகிக் கிழவனாவது என்னவெனில்?
உன் உருவம் அதன் வடிவழகை இழப்பதா,
கண்கள் தம் ஒளியைக் களைவதா?
அழகு தன் மலர்க்ரீடத்தை மறப்பதா?
ஆம், ஆனால் இவைகள் மட்டுமே அன்று-
நம் வலிமையை நமக்கு உணர்த்துவதா
நம் மலர்ச்சிமட்டுமல்ல-திண்மை -தளர்ச்சியும் -
வாழ்க்கையே சாந்தமாயும் அமைதியாயும்
ஆகவனின் மறையும் காட்சியாய் இருக்கவும் -
பொன்போன்ற நாளின் வீழ்ச்சியாமோ
உலகை உச்சியிலிருந்து பார்க்கவோ
ஞான திருஷ்டி கூடி நடப்பதை நவில்வதோ அல்ல
இதயமெலாம் அதிர்ந்து மயங்கவோ மற்றும்
அழுது, சென்றநாட்களின் பூரணத்தை உணர்வதோ
தொலைந்துபோன வருடங்களால் வருந்துவதோ?
முடிவற்றுச் செல்லும் நாட்களைக் கழிப்பதா
யவ்வனம் எப்படியென கணமும் அறியாததா
வெப்பமிகு சரியான நிகழ்கால வயோதிகத்தில்
ஒவ்வோர் மாதமும் அயர்ச்சிமிகு வலியில்
வாடித் தவிப்பதோ இந்த முதுமை?
இப்படியெல்லாம் துன்புற்றிருப்பதா என்று
உணர்வதே-அதில்பாதியாவதுப் புரிந்தால்-
இதயத்தின் இடுக்குகளில் எஞ்சியுள்ள
காயங்களூடே மாறிவிட்ட நினைவுகளால்
உணர்ந்ததுமட்டுமல்ல புலப்படுதுவதே முதுமை
கட்டக் கடைசிக் காலத்தில் --
உள்ளுக்குள் உறைந்து உலர்ந்துபோய்
நாமே நமக்கு காட்சிப் பொருளாய் மாறி
வாழ்ந்தபோது ஏசிய அதே உலகம்
நம் வெற்று ஆவியைப் புகழ்வது கேட்போம்.
On Growing Old...by Matthew Arnold-
An adaptation in Tamil...

Comments

Popular posts from this blog