Posts

Showing posts from May, 2017
நானாகவே இருக்கிறேன்... என்ன செய்தும் அந்த சிந்தனை அவனை விடவில்லை .ஜெயமோகன் கதைகளை  எடுத்தான், படித்தான் -மனம் ஒட்டவில்லை. லதாவின் பழைய பாடல்களைக் கேட்டான்;  கேட்டு முடித்தபின் மீண்டும் அதே எண்ணம் .வெளியே காலாற நடந்து தெருக்கோடி வரை நடந்தான்-அது நீண்ட வீதி. முனையில் நன்கு சாலைகள் சந்திப்பு.திரும்ப வீட்டுக்குள் நுழைந்தான் .சற்றே மனம் லேசாகிவிட்டது. அப்பாடா என்று  ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடிக்கொண்டிருந்தான் . அதென்ன இவ்வளவுப் பூக்கள், மஞ்சளும் சிகப்பும் வெள்ளைக் கலரில்.என்ன அழகான தோட்டம் , எப்படிவந்தேன் இங்கு ? பறந்து வந்தேனா என்ன-வழியெல்லாம் மேகக்  கூட்டங்கள்-எதிலும் உரசல் வேறு இல்லாமல்..சிரிப்பாக வந்தது.ஏன் இங்கு ஒருவருமே இல்லை. எவ்வளவு அழகான நீரூற்று. அந்தி வானமும் -பிறை நிலவும் கூட. ஏதேதோ மந்திரங்கள் அவனைச் சுற்றிச்  சுற்றி வந்து எல்லையில்லாமல் பிரசாந்தி நிலையை ஏறக்குறைய அடைந்து விட்டான். கையசைப்பில் அவனுக்கு உணவு கிடைத்தது -விதம் விதமாக-நல்ல பழச் சாறு -தேவாமிர்தம் இதானோ?  ஒருதூக்கம் போடத் தோன்றியது.உடனே தூங்கி யும் போனான். எழுந்தால்  அவனுக்கே நம்பமுடியவில்லை-நிறைய ஜனங்கள் அங