கடல் நிசப்தமாயுள்ளது இன்றிரவு
அலைகள் நிரம்பி நிலவு ஊறித் ததும்பி
ஜலசந்தியில்-பிரெஞ்சுக்கடலோரம்
விளக்கு ஒளிர்ந்தே ஒழிந்ததது -இங்கிலாந்து
மலைச் சிகரங்கள் நிமிர்ந்தும், ஒளியிலும்,பரந்தும்-...
அந்தப்பேரமைதி படர்ந்த வளைகுடாவில்-
அலைகள் நிரம்பி நிலவு ஊறித் ததும்பி
ஜலசந்தியில்-பிரெஞ்சுக்கடலோரம்
விளக்கு ஒளிர்ந்தே ஒழிந்ததது -இங்கிலாந்து
மலைச் சிகரங்கள் நிமிர்ந்தும், ஒளியிலும்,பரந்தும்-...
அந்தப்பேரமைதி படர்ந்த வளைகுடாவில்-
ஜன்னலருகே வா, இனிமையான இரவுக் காற்று வீசும்
இவையெல்லாம் நீண்ட கடலோரத்தில் கடல்நீரில்
நிலவுபட்டு வெளுத்த மணற்பரப்பில்தான் -
கவனி, கரடுமுரடான கூழாங்கற்கள் உரசல்களை-
அலைகள்தாம் வீசியடிக்கின்றன -
வெளியிலிருந்து உள்ளேயும்
உள்ளிருந்து மேட்டுக் கரையோரத்திலும்-
வந்துவிடும் மறைந்தும், மீண்டும் வந்து
மெதுவான ஓசை நயத்தில் வற்றா சோககீதம்
இசைத்துக்கொண்டு -
இவையெல்லாம் நீண்ட கடலோரத்தில் கடல்நீரில்
நிலவுபட்டு வெளுத்த மணற்பரப்பில்தான் -
கவனி, கரடுமுரடான கூழாங்கற்கள் உரசல்களை-
அலைகள்தாம் வீசியடிக்கின்றன -
வெளியிலிருந்து உள்ளேயும்
உள்ளிருந்து மேட்டுக் கரையோரத்திலும்-
வந்துவிடும் மறைந்தும், மீண்டும் வந்து
மெதுவான ஓசை நயத்தில் வற்றா சோககீதம்
இசைத்துக்கொண்டு -
சோபோக்ளீஸ் வெகுகாலத்திற்குமுன்
ஈஜியன் கரையில் கேட்டிருப்பான்
அது அவன் மனதினுள் கலங்கியும்
தேய்ந்தும் மறுபடியும் கிளெர்ந்தெழும்
மனிதத் துன்பியலை நினைவூட்டும் -
நாமும்கூட அவ்வோசையில் எண்ணியிருப்போம்
தொலைவிலுள்ள வட கடல் அலைகளில்-
ஈஜியன் கரையில் கேட்டிருப்பான்
அது அவன் மனதினுள் கலங்கியும்
தேய்ந்தும் மறுபடியும் கிளெர்ந்தெழும்
மனிதத் துன்பியலை நினைவூட்டும் -
நாமும்கூட அவ்வோசையில் எண்ணியிருப்போம்
தொலைவிலுள்ள வட கடல் அலைகளில்-
கடலளவு நம்பிக்கை
ஒருகாலத்தில் முழுமையாய்
உலகம் முழுவதும்
இடுப்பில் கட்டப்பட்ட ஒளிமிகு
அரைஞாண் கயிராய்ச் சுற்றியிருக்கும் -
ஆனால் இன்றோ நான் கேட்பது
அதன் சோகமயமான நெடிய
உள்வாங்கும் கூச்சல்களையே -
பின்செல்லும் இரவுக்காற்றின் மூச்சு போல்
பரந்து விரிந்துள்ள ஓரங்களில் நிரவியுள்ள
நிர்வாணத்தில் தென்படும் கிளிஞ்சல்களைத்தான்.
ஒருகாலத்தில் முழுமையாய்
உலகம் முழுவதும்
இடுப்பில் கட்டப்பட்ட ஒளிமிகு
அரைஞாண் கயிராய்ச் சுற்றியிருக்கும் -
ஆனால் இன்றோ நான் கேட்பது
அதன் சோகமயமான நெடிய
உள்வாங்கும் கூச்சல்களையே -
பின்செல்லும் இரவுக்காற்றின் மூச்சு போல்
பரந்து விரிந்துள்ள ஓரங்களில் நிரவியுள்ள
நிர்வாணத்தில் தென்படும் கிளிஞ்சல்களைத்தான்.
ஆஹா அன்பே -ஒருவர்க்கொருவர்
உண்மையாய் இருப்போம் -இவ்வுலகமோ
நம்முன் கனவு தேசம்போல் -
பற்பலவையாய் ,அழகுமிகுந்தும் ,புதியதாயும்
தோற்றமளித்தாலும் , உண்மையில்
இன்பமேதுமற்ற ,இரக்கமற்ற இருட்டே-
இங்கு ஸ்திரமானதேதுமில்லை ,அமைதியுமில்லை-
வலிக்கு எவ்வித மருந்துமில்லை-
வெளிச்சமற்ற சமவெளியில் நின்று
குழப்பமும் அபாய உணர்வும் சண்டையும்
அறியாமையில் போரிடும் இரவுப்படைகளாய்
வாழ்ந்து வருகிறோம்!
உண்மையாய் இருப்போம் -இவ்வுலகமோ
நம்முன் கனவு தேசம்போல் -
பற்பலவையாய் ,அழகுமிகுந்தும் ,புதியதாயும்
தோற்றமளித்தாலும் , உண்மையில்
இன்பமேதுமற்ற ,இரக்கமற்ற இருட்டே-
இங்கு ஸ்திரமானதேதுமில்லை ,அமைதியுமில்லை-
வலிக்கு எவ்வித மருந்துமில்லை-
வெளிச்சமற்ற சமவெளியில் நின்று
குழப்பமும் அபாய உணர்வும் சண்டையும்
அறியாமையில் போரிடும் இரவுப்படைகளாய்
வாழ்ந்து வருகிறோம்!
Based on The Dover Beach by Matthew Arnold .
Comments
Post a Comment