Posts

Showing posts from October, 2017
அதோ அவளைப் பார்-ஒற்றையாக வயல்காட்டில்- தன்னந் தனியே பணிபுரியும் மேட்டுநில மங்கை- அறுவடை செய்துகொண்டு -தனக்குளே பாடிக்கொண்டும் ! சற்றேபொறு-அன்றி மெல்ல மெல்ல நடக்கலாம் ஒரு ஆளாகவே கதிரறுத்தும்-கட்டி வைத்தும் ... சோகப்பாட்டு ஒன்றை ஏகாந்தமாய்ப் பாடியும்! ஓ கவனி-இவ்வகன்ற பள்ளத்தாக்கு முழுவதும் அவளது பாட்டுதான் நிரம்பி வழிகிறதே! அராபியப் பாலைவனத்தின் நிழல் தரும்சோலைகளில் தங்கவரும் பயணியரிடை இப்படி ஓர் பாட்டை எந்த ஒரு இரவுப் பறவையும் இசைத்திருக்குமா? உலுக்கவைக்கும் இக்குரலினிமைபோல் - ஹெப்ராய்ட்ஸ் தொலைத்தீவுகள் கடலோசையை விஞ்சி - வசந்த காலத்திலும் எந்தக் குயிலும் கூடப் பாடியிருக்க இயலாது! எவரேனும் சொல்லமுடியுமா என்ன அந்தப்பாட்டு என? கடந்தகால பழமையான நிகழ்வுகளா? யுத்தங்களா--அவளது துன்பகீதம் ? இன்றும்கூட நடக்கும் நமக்குத் தெரிந்த சங்கதிகளை சிறு பாட்டாக இசைக்கிறாளோ? ஏதேனும் இயற்கைப்பேரிடரோ-துன்பமோ,வலியோ? ஒருகாலத்தில் நடந்ததோ-மீண்டும் நடக்க இருப்பதோ? என்ன கருப்பொருளோ-அக்கன்னியின் பாட்டில்? அவள் பாடப் பாட முடிவற்றே ஒலித்தது- பணியினிடையும் கதிரறுக்கையிலும் பாடிய அவள் பா
Image
எது உனக்குத் துன்பம் தந்தது -குதிரைவீரா! தனியே சுற்றிச் சுற்றி வருகிறாயே! ஏரியும் வற்றியது-செடிகளும் வாடின- ஒரு பறவையும் பாடுவதில்லை! ... எதனால் உனக்கு கேடு-குதிரைவீரா! ஏன் இப்படி ஓய்ந்துபோய்-சோகமாய்? அணில்கள் களஞ்சியம் நிரம்பியுள்ளது- அறுவடையும் நன்கு முடிவுற்றது. உன் முகம் ஏன் லில்லி மலராய் வெளுத்திருக்கு- முத்து முத்தாய் வியர்வை பூத்திருக்கு - சோகையில் சோர்ந்து மங்கியிருக்கு- உன் பளபளக்கும் கன்னமெல்லாம்! குதிரைவீரன்: வயலருகே ஒருகன்னிப்பெண்! அழகு அவள் அழகு -தேவதையைப் பார்த்தேன்-நீள்குழலும் சிற்றடியும் கூடி- ஆனால் கண்கள் இரண்டிலும் கடுமை! அவள் தலையில் சூட மலர்வளையம் செய்தேன் கரங்களுக்கும் இடைக்கும் அணிவித்தேன்-- பார்த்தாள் என்னை-மையலுற்றாள்மனமுவந்து- கலந்தோம்-உவகையில்-களித்தே மகிழ்ந்தோம்! எனது குதிரையில் அவளை அமர்த்தி விரைந்தோம் பயணித்தோம்-நாள் முழுவதும்-சென்றோம்- ஓரக்கண்ணால் பார்த்தவாறே என்னை மயக்கினாள்- கதைகளில்வரும் ரதியைப்போல் பாடிப்பாடி ! ருசிமிக்க கிழங்குகளும் இனிப்பு ரசமும் உண்ணவும் பருகவும் தந்தாள்-அமிர்தமே! புரியா மொழியில் விசும்பினாள்-உரை
Srikrishnan Ku · 23 September at 13:1 மலைகள்-பள்ளத்தாக்குகள் மேல் அலைந்து திரிகிறேன் தனிமையில் மேகத்தைப்போல்- அப்போதுதான் பொன்னிற டாபோடில்ல்ஸ் மலர்களை கொத்து கொத்தாய் பார்த்தேன்- ஏரிக்கரைக்கருகே- மரங்களடியில் ... அசைந்து அசைந்து அவை ஆடிக்கொண்டிருந்தன! பால்வீதியில் கண்கள் சிமிட்டி என்றுமே ஒளிரும் விண்மீன்களை போல் டாபோடில்ஸ் பரந்து படர்ந்து கிடந்தன- ஏரியின் வளைகுடா ஓரத்தில் - அடடா-பத்தாயிரம் மலர்களைக் கண்டேன்- தத்தம் தலைகளை குதித்துக் கூத்தாடின! ஏரியின் அலைகளும் ஆடின -ஆயினும் மலர்கள் ஆட்டமோ மேலும் அழகுடன் இருந்தன எந்தக் கவி இதுபோன்ற மலர்களின் கூட்டத்தில் களித்திருக்கமாட்டான்? பார்த்தேன் உற்று உற்றுப் பார்த்தேன்-சிறு சிந்தனை- இக்காட்சி எனக்கு என்ன இன்பம் கொடுத்தது? பலமுறை என் சாய்வு நாற்காலியில் ஓய்வெடுக்கையில் வெறுமையான-அல்லது வருந்திய மனநிலையில்- அம்மலர்கள் பளீரென அகக்கண்ணில் பளிச்சிட்டன! அதுவல்லவா தனிமையின் பேரினிமை எனப்புரிந்தது இதயம் மகிழ்ச்சியில் ததும்பித் திளைத்தது- மலர்களோடு அசைந்து ஆடி இன்புற்றது! From Wordsworth's Daffodils