எங்கே அச்சமற்ற மனதும் நிமிர்ந்து உயர்ந்த தலையும் உளதோ-
எங்கே அறிவு சுதந்திரமாய்ச் சுடர் விடுகிறதோ
எங்கே உலகில் நான்,எனது என்ற குறுகிய சிந்தனைகள் துண்டு துண்டாய்
இல்லாமலிருக்கிறதோ
எங்கே சொற்கள் உண்மையின் ஆழத்திலிருந்து வெளிப்படுகிறதோ
எங்கே செழுமையை நோக்கிச் சோர்விலா முயற்சிக்கரங்கள் நீள்கின்றனவோ
எங்கே தூய்மையான ஓடைநீர் போன்ற பகுத்தறிவு தனது வழியை பாலைவனமான உதவாக்கரைப் பழக்கத்தில்
தொலையவில்லையோ
எங்கே உள்ளம் உங்களால் முற்போக்காக என்றென்றும் விசாலமான சிந்தனைகளாகவும்
செயலாகவும் நடத்தமுடிகிறதோ-
அந்தச் சொர்க்கமாகிய விடுதலையில் தந்தையே-
எமது தேசம் விழித்தெழட்டும்!
Based on Gurudev Rabindranath Tagore's--Where the mind is without fear..
தமிழில் ஜான் கீட்ஸின் அழகு கவிதை!
Based on John Keats' Ode to a nightingale--
என் இதயம் வலிக்கிறது-என் உணர்வுகள்
மரத்துவிட்டன -ஏதோ விஷம் குடித்தாற்போல்
அல்லது அபினை அருந்தியது போலவும் -
இல்லை லித்தி நதியில் மூழ்கியதுபோலவா?
இப்படி இருப்பது உன் மகிழ்ச்சியில் பொறாமை கொண்டா-
குயிலே-உனது களிப்பில் நானும் மகிழ்ந்திருந்ததாலா?
மென்மையான சிறகுகள் கொண்ட தேவதையே !
ஓ பச்சைப்பசேல் பீச்சென் மரங்களில் அமர்ந்து
இக்கோடையில் முழு வீச்சில் நீ பாடுவதைக் கேட்பதாலா?
நெடுநாள் பூமிக்கடியில் குளிர்விக்கப்பட்ட
மதுரசம் ஓர் கிண்ணத்தில் ஏத்திப் பருக ஆசை
அதுதான் பூக்களின் -நாட்டுப்புறச் செடிகளின்
வாசத்தோடு சுவைக்கும்-ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம்!
கதகதப்பான தென் பிரெஞ்சு மது ஓர் பாட்டில் நிறைய -
ஆஹா-ஹிப்போக்ரின் நிறத்தில் -கிறங்குகிறேன்!-
முத்துமுத்தாய் உருண்டு திரண்டு நிரம்பி வழியும் !
இதழ்களெல்லாம் சிவப்பு நிறமாகி -நான் குடிப்பேன்
இவ்வுலகிடமிருந்து வெகு தொலைவு செல்வேன்-
உன்னோடு மறைந்துவிடுவேன்-காட்டுக்குள்ளே!
மறைவேன் வெகுதொலைவில்-கரைவேன்-மறப்பேன்
நீ இலைகளுக்கு நடுவே என்றும் அறியாததெல்லாம்-
தளர்வும், காய்ச்சலும்-உறுத்தலும் இப்புவியில்
மானிடர்களிடையே-அருகருகே அமர்ந்து புலம்பலும்!
பாரிசம் தாக்கி சிலர் துயருற்று , தலையெல்லாம் நரைத்து-
ஏன் இளைஞர்கள் கூட ஒளி இழந்து சோகைபிடித்து மரிக்க-
இங்கே பூமிதனில் சிந்திப்பதெல்லாம் சோகமயமாக-
கண்ணிமைகள் கனத்து அழகெல்லாம்இழந்தும்-
அன்பெல்லாம் வறண்டும் -வாழ்வே இப்படித்தான்!
பறந்து செல்,பறந்து செல்-உன்னிடம் நான் வருகிறேன் -
மதுவின் போதையில்-மதுக்கடவுள் பாக்கஸுடன் அல்ல-
ஆனால் எனது கவிதைச் சிறகுகளை விரித்துவைத்து-
என் சித்தம் குழம்புகிறது-வேகமும் சற்றே குறைகிறது,
அட-ஏற்கனவே நான் உன்னோடு!இவ்விரவு மிக மென்மையே!
நிலா அரசி தனது தோழியருடன் சூழ்ந்து அரியணையில்-
ஆயினும் இந்தக்கரிய இருளும்கூட வானவீதியில் வரும்
சிற்றொளி மரங்களூடே பாய்ந்துவர பசுமையும்மங்கிட
சிறிதே இடைவெளியில் வரும் காற்றும் இங்கே உலா வரும்
இவ்விருளில் உன் இடத்தில் இங்கு பல வகை மலர்கள் என் காலடியில்
அத்துடன் நறுமணம் மிக்க கிளைகள்-என்னால் அவைகளைக் காணமுடியாது
ஆயினும் வாசம் மிகு இவ்விரவில் இனியவை அனைத்தையும் உணர்வேன்-
இப்பருவத்தில் செழிக்கும் புற்கள் புதர்கள் பழங்கள் சுமக்கும் மரங்கள்
வெண்ணிற ஹாதார்ன்,மண்ணுக்கே உரிய எக்லன்டின் பூக்கள் --
விரைந்து வெளுக்கும்-மே மாத வயலட் அங்கே-இலைகளால் மூடப்பட்டு-
இவைகளோடு மதுத்தேன்வழியும் மஸ்க்ரோஜாக்களும் -என்னே மணம்!
கோடைமாலையில் பண்ணிசை ரீங்காரமிடும் தேனீக்களின் ராகங்களும்-
கரிய இருளையே கவனிக்கிறேன்-ஏனெனில் பலப்பல நேரங்களில்
இனிமைமிகு இறப்புடன் பாதி மையலில் விழுந்திருக்கிறேன்!
எத்தனைமுறை மென்மையான பெயர்களில் சாவை அழைத்திருக்கிறேன்-
என்னுயிரைக் காற்றுடன் அமைதியாகக் கலந்துவிடு என்றே-
எப்போதையும்விட இக்கணமே உயிரைவிடச் சரியான தருணம்!
இந்நள்ளிரவில் உடலைக்கிடத்தி வலியற்று உயிர்பிரிதல்-அடடா-
அதுவும் நீ உன் ஆன்மாவையே உச்சத்தில் இசையோடு பாடுகையில்-
மேன்மேலும் பாடுக குயிலே-இதைக் கேட்காத செவிகள் இருந்தென்ன?
நீ பாடப்பாட-உன் இரங்கற்பாக்களுக்கு நான் புதை மண்ணாய் இருப்பேன்!
இருப்பதற்காக நீ பிறக்கவில்லை என்றுமுளப் பறவையே !
புசிக்கவரும் பசிமிக்க தலைமுறைகள் உன்னை வெல்ல இயலாது-
இன்றிரவு நான் கேட்ட ஓசையெல்லாம் அந்நாளில்
பேரரசர்களும் விகடகவிகளும் கேட்டு மகிழ்ந்திருப்பர்-
அதற்குப்பின் வந்த எண்ணற்றோர் உன்னைக்கேட்டிருப்பர்-
விவிலிய ரூத் கண்ணீர் மல்க வீடு திரும்புகையில் உன் பாக்களை
தனிமையில் சோகமுடன் சோளக்காட்டில் கேட்டு ஆறுலதலடைவாள்!
பலமுறை அவை ஒலித்துஒலித்து -அபாயமிகு ஆழ்கடல்களில்
தேவதைகள் வாழும் இடங்களில்-மந்திர பேழைகளையும்
திறந்திருப்பாய்-இக்காட்டிலிருந்து சென்று தனிமையில் கூவியிருப்பாய்!
தனித்துவிடப்படுவது-ஓ அது அபாய ஒலி எழுப்பும் மணிபோன்றது-
என்னை என்னுடைய முழுமையான ஆன்மாவில் இணைப்பதுபோல்!
சென்று வாறேன் குயிலே!என் கற்பனையால் உனை ஏமாற்றுவதா என்ன?
அது நடக்கலாம் ஜீனிகளிடம்-உன்னிடமன்று-வருகிறேன் வருகிறேன்-
அதோ உன் சோக கீதமும் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது-
இதோ இங்கே புல்வெளியில்-அங்கெ அமைதியான ஓடை அருகே-
இப்போது அம்மலையினருகே-அந்த பள்ளத்தாக்கில் ஆழ்ந்து மறைகிறது-
இதெல்லாம் தோற்றமா அன்று விழிப்புநிலைக் கனவா?
குயிலின் இசை போயிற்று-போயிற்று-விழிப்பா? உறக்கமா?
Ode to a Nightingale" is a personal poem that describes Keats's journey into the state of negative capability. The tone of the poem rejects the optimistic pursuit of pleasure found within Keats's earlier poems and, rather, explores the themes of nature, transience and mortality, the latter being particularly personal to Keats.
The nightingale described within the poem experiences a type of death but does not actually die. Instead, the songbird is capable of living through its song, which is a fate that humans cannot expect. The poem ends with an acceptance that pleasure cannot last and that death is an inevitable part of life. In the poem, Keats imagines the loss of the physical world and sees himself dead—as a "sod" over which the nightingale sings. The contrast between the immortal nightingale and mortal man sitting in his garden, is made all the more acute by an effort of the imagination. The presence of weather is noticeable in the poem, as spring came early in 1819, bringing nightingales all over the heath.--WIKI.).


Comments

Popular posts from this blog