Posts

Showing posts from August, 2018
ஒரு தேவதையின் அரவணைப்பில்... அஞ்சாமைக்குப் பழக்கப்படாததால் ஆனந்தத்திற்கு அந்நியராய் தனிமைக்கூடுகளில் சுருண்டுப்போய் வசித்தோம்- உயர்ந்த புனித ஆலயத்தை விட்டு வெளியேறி அன்பு எம் பார்வையில் பட்டு வாழ்க்கையில் விடுபட்டு வாழலானோம் அன்பு வந்ததே- அதனுடன் பரவசங்கள் பலவும் பழைய இனியநினைவுகளும் அந்தக்கால வலிமிகு வரலாறுகளும் வந்தனவே. எனினும் அச்சம் தவிர்த்து - அன்பால் பயத்தின் சங்கிலிகளை எங்கள் ஆத்மாக்களிலிருந்து விடுவித்தோம். எமது அச்ச உணர்வினை வெறுக்கத்துவங்கினோம் பீறிட்டு வந்த அன்பெனும் ஜோதியின்வெளிப்பாட்டில் அஞ்சாமையை எதிர்கொண்டோம் - அப்போதே பார்த்தோம் - அன்புதான் நாங்கள் தரும் விலை இன்றும் , என்றும் என- ஏனெனில்- அதுவே எங்களுக்கு பூரண விடுதலை அளிக்கும். Adapted from MAYA ANGELOU'S TOUCHED BY AN ANGEL
" நரைகூடிக் கிழப்பருவம் எய்தி.." வயதாகிக் கிழவனாவது என்னவெனில்? உன் உருவம் அதன் வடிவழகை இழப்பதா, கண்கள் தம் ஒளியைக் களைவதா? அழகு தன் மலர்க்ரீடத்தை மறப்பதா? ஆம், ஆனால் இவைகள் மட்டுமே அன்று- நம் வலிமையை நமக்கு உணர்த்துவதா நம் மலர்ச்சிமட்டுமல்ல-திண்மை -தளர்ச்சியும் - வாழ்க்கையே சாந்தமாயும் அமைதியாயும் ஆகவனின் மறையும் காட்சியாய் இருக்கவும் - பொன்போன்ற நாளின் வீழ்ச்சியாமோ உலகை உச்சியிலிருந்து பார்க்கவோ ஞான திருஷ்டி கூடி நடப்பதை நவில்வதோ அல்ல இதயமெலாம் அதிர்ந்து மயங்கவோ மற்றும் அழுது, சென்றநாட்களின் பூரணத்தை உணர்வதோ தொலைந்துபோன வருடங்களால் வருந்துவதோ? முடிவற்றுச் செல்லும் நாட்களைக் கழிப்பதா யவ்வனம் எப்படியென கணமும் அறியாததா வெப்பமிகு சரியான நிகழ்கால வயோதிகத்தில் ஒவ்வோர் மாதமும் அயர்ச்சிமிகு வலியில் வாடித் தவிப்பதோ இந்த முதுமை? இப்படியெல்லாம் துன்புற்றிருப்பதா என்று உணர்வதே-அதில்பாதியாவதுப் புரிந்தால்- இதயத்தின் இடுக்குகளில் எஞ்சியுள்ள காயங்களூடே மாறிவிட்ட நினைவுகளால் உணர்ந்ததுமட்டுமல்ல புலப்படுதுவதே முதுமை கட்டக் கடைசிக் காலத்தில் -- உள்ளுக்
சொல்லாதே என்னிடம் சோக கீதங்களில் வாழ்க்கை ஒரு வெற்றுக்கனவு என்று- சோம்பி இருப்பான் வாழ்வு என்றோ மடிந்திடும் வாழ்க்கை என்பது தோன்றி மறைவதா என்ன. வாழ்வு என்றும் நிஜமானது-நிலைத்திருப்பது கல்லறை ஒன்றும் அதன் குறிக்கோள் அன்று மண் தான் நீ, மண்ணுக்கே திரும்பி விடுவாய் என்று சொல்லப்படுவது உன் ஆத்மாவிற்கு அல்ல கலந்திருப்பது, துக்கப்படுவதுமே மட்டும் இல்லை வாழ்வு ,முடிவான விதியோ, வழியோ மட்டும் இல்லை செயல்பட்டுக்கொண்டே இருப்பதே - நாளை என்பதெல்லாம் - இன்றிலிருந்துக் கற்று உயர்ந்து போவதே என்றுணர். கலைகள் முடிவற்றவை, காலமோ கடந்து செல்வது நம் இதயமோ வலிமையுடன், அச்சமற்று இருப்பினும் அவ்வப்போது அதில் இறுதிப்பறை ஒலியும் கேட்கிறதே - கடைசிப்பயணம் எனும் இடுகாட்டு ஊர்வலச் சத்தமாய் உலகமே பரந்த போர்க்களம் என்பதே உண்மை தற்சமயம் வந்து போகும் வெற்றிடம் இல்லை அது ஊமையராய் வாழ்ந்து, மந்தையராய்த் திரிய வேண்டாம்! வீரனாய்க் களத்தில் என்றும்போராடு எந்நாளும்! வருங்காலம் ஏதுமில்லை- அது மிக இனிமையாய் இருந்தாலும் இறந்த காலமெல்லாம் மண்ணோடு மண்ணாய் மடியட்டும் செயல்படு ,செயல் படு ,ஒவ்வொரு
Shakespeare's Sonnet 18.-Shall I compare thee to a summer's day? உனை நான் கோடை# நாளுடன் ஒப்பிடவோ,,அன்பே? நீ இன்னும்கூட அழகானவள்,பதமானவள் , பலத்த காற்று வீசி மே மாத ஆசை மொட்டுக்களை உதிர்க்கும் கோடையின் வனப்பு சிலகாலம் இருக்கும் சொர்க்கத்துக்கண்- சூரியன் கூட சில நாள் தான் ஒளிர்வான் அவன் பொன்னிற வடிவம் மேகங்களால் கறுத்துவிடும் அழகின் எவ்வடிவமும் சிலநாள் தான் நிலைக்கும் சூழ்நிலையாலோ-இயற்கையாலோ மெல்ல மங்கிவிடும் ஆனால் உந்தன் சுடர்விடும் வனப்பு என்றும் உன்னோடு இருக்கும் சாவு கூட தனது நிழலால் உன்னைத் தீண்டமுடியாது எக்காலமும் ஒளிரும் எனது வரிகளில் நீ துலங்குவதால் மனிதர்கள் மூச்சு உள்ளவரை பார்வை இருக்கும்வரை இக்கவிதையில் வாழ்ந்திடுவாய் என்றும் இவ்வரிகளில் உயிர்த்திருப்பாய் # English summer
ஜூலியஸ் சீசர் ----அங்கம் 2 ,காட்சி 1 : ப்ருடஸ்: சீசரைக் கொல்லுதல் சரியே.இதற்கானத் தனிப்பட்டக் காரணம் எனக்கு ஏதுமில்லை-ஆயினும் பொதுநலன் கருதி...அவன் முடி சூட்டிக்கொள்ள விரும்புகிறான்.எப்படியெல்லாம் அவன் குணம் மாறும் என்பதே என் கேள்வி.கோடைக்காலச் சூரிய சூட்டில்தான் பாம்புக்குட்டிகள் வெளியே வரும்--நாம்தான் பார்த்து நடக்கவேண்டும்.அவன் விருப்பத்திற்கு விட்டுவிட்டால் தீமையே அவன் செய்வான்.அதிகாரத்திற்குச் செல்லும் ஆட்சியாளர்கள் பலவீனமே-கருணையும் இரக்கமும் இல்லாமல்- மாறிவிடுவதுதான் .சீசரைப்பற்றிச் சொல்லவேண்டுமெனில்,அவன் என்றுமே அறிவை உணர்ச்சிகளுக்குமேலாக வைத்திருந்ததில்லை.வழக்கமாகப் பார்ப்பதுதான் இது. ஏணியைப்போல் அடங்கி இருப்பர் மேலே செல்லும்வரை-அதன்பின் தன்னை உயர்த்தியவர்களுக்கு முதுகுப்புறத்தைக்காட்டி புறந்தள்ளுவரே.. அவர்கள் மென்மேலும் உயரத்திற்குச் செல்வர்.,அங்கிருந்து மேகக்கூட்டங்களில் உலாவி,கடந்துவந்த படிகளை உதைத்துவிட்டு ,மேலும் முன்னேறிச் செல்வர்.சீஸரும் அப்படித்தான்.எனவே இதுவே அவனைத் தடுப்பதற்கானத் தருணம்.என்னுடைய பிரச்சினை அவனது வருங்காலமே-இப்படித்தான் நான் சிந்திக்கிறேன்: த
மரங்களிடையே பனிமழை பொழியும் மாலை வேளையில் நின்று .. .....ராபர்ட் பிரோஸ்ட் எவருடைய காடு இது -எனக்குத் தெரியுமென்றெண்ணுகிறேன் அவரது வீடு அந்த கிராமத்தில் இருக்கிறது நான் இங்கு நின்றிருப்பதை அவரால் பார்க்க இயலாது அவர் இடம் பூரா பனியில் மூடி இருப்பதை பார்க்கிறேன் என் குதிரைக்கு கூட இது விநோதமாகத் தோன்றும்- நான் பண்ணைவீட்டருகே நிற்காமல் இங்கே இருப்பது இக்காட்டுக்கும் உறைபனிசூழ் ஏரிக்கும் இடையே - இவ்வருடத்தின் மிகக் கரிய இம்மாலையில் இங்கிருப்பது குதிரையோ தன் கழுத்துக் கயிற்று மணிகளை ஆட்டுகிறது- ஏதேனும் தவறு நிகழ்ந்ததோ என்று கேட்பது போல் வேறு வரும் ஒரே ஓசை காற்றின் ஓசையே மெல்ல மெல்ல வருகிறது, கூடவே பொழியும் பனித்துகள்கள் ! இக்காடுகள்தான் அழகானவை ,கரியவை, அடர்த்தியானவை நானுமே பலப்பல வாக்குறுதிகள் நிறைவேற்றவேண்டும் இன்னும் செல்லவேண்டிய தொலைவோ அதிகம்-உறங்குமுன் இன்னும் செல்லவேண்டிய தொலைவோ அதிகம்-உறங்குமுன் From Robert Frost...
ஹாம்லெட் -அங்கம்-3, காட்சி 2, ஹாம்லெட் சிலநடிகர்களுடன் வருகிறார். ஹாம்லெட்:நான் கற்றுக் கொடுத்தவாறே வசனங்களை ஓசை நயத்துடனும் ,மெல்லவே உச்சரியுங்கள்.சில நடிகர்களை போன்று சொற்களை :மிகையாகப் பேசினால் , எவனாவது செய்தி அறிவிப்பவனைக் கூட்டிவந்து பேச வைப்பேன்! கைகளினால் அளவுக்கு அதிகமாக சைகைகளைச் செய்யாதீர்கள் - ஓரிரண்டு மட்டுமே--இதுபோல்.உணர்ச்சிக் குவியலாக மேடையில் நடிக்க முற்படுகையில் ,உணர்ச்சிகளைக் கட்டுக்குள்ளும் -அடக்கியும் வெளிப்படுத்துங்கள்.புயலைப்போல் வசனத்தை வரிவரியாகக் கொட்டிக் கேட்பவர்களது செவிப்பறைகளைக் கிழித்து ,விசிலடிக்கும் கூட்டத்திற்கு வெறியூட்டும்' டோபா' நடிகர்களை நான் வெறுக்கிறேன்- அந்த ரசிகர்கள் எல்லாம் காட்டுக்கூச்சல்களையும், அதீதக்கூத்துக் காட்சிகளையுமே ரசிக்கவல்லவர்கள்.அவையெல்லாம் அன்று ஜெராட் அரசன் கூக்குரலிட்டதுபோல் தான் இருக்கும்.தயைசெய்து அவைகளைத் தவிர்த்துவிடுங்கள். நடிகர் 1 ; அப்படியே அய்யா! ஹாம்லெட் :அதற்காக ரொம்ப அடக்கியும் நடிப்பைக் காட்டவேண்டாம்.உங்கள் நற்சிந்தனை இதில் நன்கு வழி நடத்தட்டும்.செயலைச் சொற்களுடனும் ,சொற்களை செயல்களுடன்
ஸ்டிபன் க்ரேன் இதயம் பாலைவனத்தில் ஓர் நிர்வாணப் பிராணி தரையில் குந்தியமர்ந்துகொண்டு தனது இதயத்தைக் கையில் வைத்திருந்தான் நான் கேட்டேன்:"நண்பா இது நன்றாயுளதா ?" "ஒரே கசப்பு-கசப்பு"-அவன் சொன்னான் "ஆனால் இது எனக்குப் பிடிக்கிறது- ஏனெனில் இது கசப்பு தான்-அனால் இது என்னுடைய இதயமல்லவா?'' ஸ்டிவ் ஸ்மித் இந்த ஆங்கிலேய பெண் நேர்த்தியாக இருக்கிறாள் இவளுக்குமுன்புறமும் இல்லை. பின்புறமும் இல்லை. தாமஸ் கன் அவர்கள் உறவு எப்படியெனில் அது இருப்பதாக அவர்கள் விவாதிப்பதுதான் ஹீலர் பெல்லேக் களைப்பு காதல் என்னைக் களைப்படையச் செய்கிறது கவிதையோ இன்னும் என்னைக் களைப்படைய வைக்கிறது அனால் காசு ஒன்றுதான் எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தருகிறது மார்ஷல் வாசிப்போரும் கவனிப்போரும் என் நூலைப் புகழ்கிறார்கள் அனால் நீயோ அடித்துச் சொல்லுகிறாய் அது புதிதாக எழுதுபவனைவிட மோசமென்று - அதுபற்றி யார் கவலைப் படுவர்?எனது விருந்தை நான் திட்டமிட்டுச் செய்வது சாப்பிடுவர்களைத் திருப்தி படுத்தவே அன்றி சமையல்காரர்களை அல்ல
பிரான்சிஸ் கார்ன்போர்ட் அனைத்து ஆத்மாக்கள் இரவு என் காதலன் என்னிடம் திரும்பிவந்தான் நவம்பரில் மரத்தடியே தங்க இடமின்றி -ஒளியின்றி என் தோள்கள்மீது கை வைத்தான் என்னை விந்தையாகவோ வயகானவளாகவோ நினைக்கவில்லை- நானும் அவ்விதமே அவனை எண்ணினேன் ஆன் ஸ்தீவன்சன் நினைக்காதே எனக்குத் தெரியாதென்று நீ என்னுடன்பேசும்போது உன் மனதுக் கை தெரியாததுபோல் என்மீது ஏறி வருகிறது நினைக்காதே அது எனக்குத் தெரியாதென்று உனக்கே தெரியும் நான் சொல்வதெல்லாம் நெய்யும் ஆடையைப் பற்றி from Hamlet of Shakespeare.. ஹேம்லட் : சொற்கள், சொற்கள், சொற்கள் பொலோனியஸ்:எதைப்பற்றி, பிரபுவே? ஹேம்லட்:யார் யாருக்கிடையே? பொலோ:நீங்கள் சொன்ன சொற்கள் எதை பற்றி? ஹேம்லட்:பொய்கள் அய்யா ...வம்புப்பிடித்த எழுத்தாளன் சொல்கிறான்;வயதானால் வெள்ளைத் தாடி இருக்குமாம்,அவர்கள் முகங்கள் சுருங்கியும் ,கண்கள் பீளையைச் சொரிந்தும் ;எந்த ஞானமும் இன்றியும் ,பலவீன தொடைகளும் கொண்டும்-இதையெல்லாம் நம்பினாலும் ,இப்படியெல்லாம் எழுதுவது நேர்மையற்ற செயல் -நீங்களே ஒருநாள் மூப்படைவீர்-ஒரு நண்டு பின்நோக்கிச் செய்வதுபோல் பயணிப்
Tintern Abbey -Lines-Wordsworth...தழுவல் ... ஐந்து ஆண்டுகள் போயின-ஐந்து கோடை களும் ஐந்து நீண்ட குளிர்காலமும்-மீண்டும் நான் கேட்கிறேன் இந்நதியின் ஓசையை-மலைகளின் ஊற்றுக்களிலிருந்து புரண்டு ஓடுது-மெல்லிய உள்ளூர் இரைச்சலுடன்-மறுபடியும் உயர்ந்த கூர்மைமிகு மலை உச்சிகளைப் பார்க்கிறேன்- தனிமையின் காட்சிப்பொருளாய் விளங்கும் இவைகள் இன்னும் கொடிய தனிமை உணர்வை மனதில் ஏற்படுத்துகின்றன, இவ்வரிய படத்தோடு வானத்தின் மோனமும் புலப்படுகிறது, மீண்டும் நான் ஓய்வெடுக்கும் தருணமிது -இங்கிருந்து சிக்கமோர் மரங்களையும் கண்டு-அருகே காட்டு வெளியினில் ஆங்காங்கே குடிசைகளை ,,ஆப்பிள் தோப்புக்களை-காய்த்துக்குலுங்கும் கனிகளையும் -அனைத்தும் பச்சை வண்ணத்தில் கொத்துக் கொத்தாக பார்க்கிறேன் -இவைகளோடு சுருள் சுருளாகப் புகையும் வருகின்றன- எந்த நாடோடியின் எளிய இல்லத்திலிருந்தோ-சாமியாரின் குகையிலிருந்தோ அவை வரலாம்-எந்த யோகி தனியே அங்கு சமாதியிலிருக்கிறாரோ! இவ்வழகிய காட்சிகளை நான் பல ஆண்டுகள் கழித்தே கண்டாலும் பெருநகரங்களில் தனி அறையினுள் -பார்வையற்றோனுக்கு கிடைத்த காட்சிபோல் அல்ல- சந்தடிகளுக்கும் கூச்சல்
(based on )Ode on Grecian Urn by John Keats நீதான் நிசப்தத்தின் கன்னிகழியா மணமகள் மெல்லநகரும் காலத்திற்கும் மௌனத்திற்கும் வளர்ப்புச் சிசு- பசுமையின் வரலாற்றாசானே உனைவிடவும் அழகிய கதை சொல்லி எக்கவிதை இசைக்கும்? உன் வடிவம்தாங்கிஇருக்கும் காவிய ஏடுகள்தாம் என்ன? ஆங்கே தென்படுவோர் தேவர்களா மனிதர்களா-இருவருமா? ஆற்கடிப் பள்ளத்தாக்கா -டெம்பிளுள்ளோரா? எவரே அந்த மனிதர்கள்-கடவுளர்கள்?கன்னியரின் நடமாட்டங்கள்? எத்தகைய காம லீலைகள் ? எப்படியான போராட்டத் தவிப்புகள்? என்னென்ன ஊதுகுழல்கள்?,மத்தளங்கள்?அடடா-என்ன களியாட்டங்கள்? கேட்ட பாடல்கள் இனிமையானவையே-ஆயினும் கேளாததோ மிகமிக இனிமைதான்-எனவே மென் குழல்களே ஊதுங்கள் இவ்வுணர்ச்சிமிகுச் செவிகட்கு அன்று-இன்னும் மனதுக்கு உவந்த ஊதுகுழலே வடித்திடுவீர் வரம்பற்ற காற்றில்கலக்கும் கீதங்களை- கவர்ச்சிமிகு இளைஞர்காள் மரங்களடியைவிட்டு எங்கு செல்வீர் உம் பாடல்களை விடுத்து?அம்மரங்களும் உதிரா இலைகளுடன் என்றும்! வீரமிகு காதலர்காள்-முடியாது முடியாது உம்மால் முத்தமிட- வெல்வதுபோல் தோன்றிடினும் -முடியாது-ஆயினும் வருந்தற்க- உன் காதலி ஒருநாளும் மூப்ப
எங்கே அச்சமற்ற மனதும் நிமிர்ந்து உயர்ந்த தலையும் உளதோ- எங்கே அறிவு சுதந்திரமாய்ச் சுடர் விடுகிறதோ எங்கே உலகில் நான்,எனது என்ற குறுகிய சிந்தனைகள் துண்டு துண்டாய் இல்லாமலிருக்கிறதோ எங்கே சொற்கள் உண்மையின் ஆழத்திலிருந்து வெளிப்படுகிறதோ எங்கே செழுமையை நோக்கிச் சோர்விலா முயற்சிக்கரங்கள் நீள்கின்றனவோ எங்கே தூய்மையான ஓடைநீர் போன்ற பகுத்தறிவு தனது வழியை பாலைவனமான உதவாக்கரைப் பழக்கத்தில் தொலையவில்லையோ எங்கே உள்ளம் உங்களால் முற்போக்காக என்றென்றும் விசாலமான சிந்தனைகளாகவும் செயலாகவும் நடத்தமுடிகிறதோ- அந்தச் சொர்க்கமாகிய விடுதலையில் தந்தையே- எமது தேசம் விழித்தெழட்டும்! Based on Gurudev Rabindranath Tagore's--Where the mind is without fear.. தமிழில் ஜான் கீட்ஸின் அழகு கவிதை! Based on John Keats' Ode to a nightingale-- என் இதயம் வலிக்கிறது-என் உணர்வுகள் மரத்துவிட்டன -ஏதோ விஷம் குடித்தாற்போல் அல்லத ு அபினை அருந்தியது போலவும் - இல்லை லித்தி நதியில் மூழ்கியதுபோலவா? இப்படி இருப்பது உன் மகிழ்ச்சியில் பொறாமை கொண்டா- குயிலே-உனது களிப்பில் நானும் மகிழ்ந்திருந்ததாலா? மென
மலைகள்-பள்ளத்தாக்குகள் மேல் அலைந்து திரிகிறேன் தனிமையில் மேகத்தைப்போல்- அப்போதுதான் பொன்னிற டாபோடில்ல்ஸ் மலர்களை கொத்து கொத்தாய் பார்த்தேன்- ஏரிக்கரைக்கருகே- மரங்களடியில் அசைந்து அசைந்து அவை ஆடிக்கொண்டிருந்தன! பால்வீதியில் கண்கள் சிமிட்டி என்றுமே ஒளிரும் விண்மீன்களை போல் டாபோடில்ஸ் பரந்து படர்ந்து கிடந்தன- ஏரியின் வளைகுடா ஓரத்தில் - அடடா-பத்தாயிரம் மலர்களைக் கண்டேன்- தத்தம் தலைகளை குதித்துக் கூத்தாடின! ஏரியின் அலைகளும் ஆடின -ஆயினும் மலர்கள் ஆட்டமோ மேலும் அழகுடன் இருந்தன எந்தக் கவி இதுபோன்ற மலர்களின் கூட்டத்தில் களித்திருக்கமாட்டான்? பார்த்தேன் உற்று உற்றுப் பார்த்தேன்-சிறு சிந்தனை- இக்காட்சி எனக்கு என்ன இன்பம் கொடுத்தது? பலமுறை என் சாய்வு நாற்காலியில் ஓய்வெடுக்கையில் வெறுமையான-அல்லது வருந்திய மனநிலையில்- அம்மலர்கள் பளீரென அகக்கண்ணில் பளிச்சிட்டன! அதுவல்லவா தனிமையின் பேரினிமை எனப்புரிந்தது இதயம் மகிழ்ச்சியில் ததும்பித் திளைத்தது- மலர்களோடு அசைந்து ஆடி இன்புற்றது! From Wordsworth's Daffodils..
ஜூலியட் மேலே ஜன்னல் அருகேத் தோன்றுகிறாள்- ஆ-மெல்ல மெல்ல-அந்த ஜன்னலருகே என்ன ஒளி வெள்ளம் பார்க்கிறேன்! ஓ அதுவே கீழ்த்திசை-ஜூலியட் தான் சூரியன்! உதித்துவிடு ஆதவனே-கொன்றுவிடு நிலவை, ஏற்கனவே நிலா நோயுற்று-வெளுத்து-வருத்தத்தில்- ஏனெனில் நீயோ ஜூலியட் ,அவளது தாதி-ஆனால் அவளைவிடவும் அழகு மிக்கவள்-ஆகவேதான் உன் மீது பொறாமை அவளுக்கு! அவளது நெடுநாள் கன்னித்தன்மையே அவளை இவ்வாறு மெலியவைத்தும் உடல்நலம் குன்றியும் காட்டுகிறது- மூடர்களூக்கு உரித்தான குணம் அது! தூர அதை எறிந்துவிடு- ஆஹா-என் கண்ணே!-என் காதலியே! அவளுக்கு மட்டும் நான் இங்கிருப்பது புலப்படுமானால்! அவள் பேசுகிறாள்-எனினும் ஒன்றும் சொல்லாதிருக்கிறாளே! அதனாலென்ன? அவளது கண்கள்தான் பேசுகின்றனவே!-நான் பதிலளிப்பேன்- என் தைரியத்திற்கு என்ன குறை? என்னிடம் அவள் பேசவில்லையே- வானத்தின் இரு ஒளிமிக்க விண்மீன்கள் ஏதோ பணியில் சிக்கி-ஜூலியட்டின் கண்களை சற்றே வான வீதியில் உலவ வைத்தார்களோ-அவைகள் திரும்பிவரும்வரை! விண்மீன்கள் அவள் முகத்திலும்- அவளது கண்கள் வானத்திலும் இருந்தாலென்ன? அவளது கன்னங்களின் செவ்வண்ணம் அவ்விண்மீன்களை வெட
உலகமே ஓர் நாடகமேடை-ஆண்,பெண் -அனைவரும் நல்ல நடிகர்களே! அனைவரும் சென்றுகொண்டும் வந்துகொண்டும் இருப்பார்கள் - ஒவ்வொருவரும் பலபலப்பாத்திரங்களில் நடிப்பவர்கள்தாம்! ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஏழு பகுதிகளாக இருக்கும்- முதன் முதலில்-குழந்தையாக-அழுதும் சிணுங்கியும் செவிலியர் கரங்களில்-அடுத்து அடம்பிடிக்கும் பள்ளிச் சிறுவனாக- கையில் புத்தகப் பையுடன் பால்வடியும் முகத்துடன்- பள்ளிக்கு வேண்டாவெறுப்புடன் நத்தைபோல் ஊர்ந்து செல்வான், அடுத்துக் காதலனாக-ஊது உலைபோன்று பெருமூச்சுக்களை விட்டுக்கொண்டும்-காதலியின் முக எழிலைக் குறித்துக் கவிதை எழுதியும் - நான்காம் பகுதியில் வீரனாகப் பரிணமித்து-வாய் நிறைய வீர வசனத்துடன்- சிறுத்தையின் தாடியோடு-எப்போதும் தனது மானத்தைக் காப்பதில் குறியாக- குமிழ்போல் உடையும் புகழுக்காகப் போர்க்களத்தில் பீரங்கிகளுக்குமுன் தனது வாழ்க்கையையே பணயம் வைக்கும் நிலையில்! ஐந்தாவது பகுதியில் ஒரு நீதிபதி நிலையில்-லஞ்சலாவண்யத்தை அடையாளம் காட்டும் தொந்தி தொப்பையுடனும்-கண்களில் கடுமையை வரவழைத்தும்-நன்கு வெட்டிய தாடியுடனும்- அறிவாழம் மிக்கச் சொற்களுடனும்-சமீபத்திய சம்பவங்களை சுட்
அதோ அவளைப் பார்-ஒற்றையாக வயல்காட்டில்- தன்னந் தனியே பணிபுரியும் மேட்டுநில மங்கை- அறுவடை செய்துகொண்டு -தனக்குளே பாடிக்கொண்டும் ! சற்றேபொறு-அன்றி மெல்ல மெல்ல நடக்கலாம் ஒரு ஆளாகவே கதிரறுத்தும்-கட்டி வைத்தும் சோகப்பாட்டு ஒன்றை ஏகாந்தமாய்ப் பாடியும்! ஓ கவனி-இவ்வகன்ற பள்ளத்தாக்கு முழுவதும் அவளது பாட்டுதான் நிரம்பி வழிகிறதே! அராபியப் பாலைவனத்தின் நிழல் தரும்சோலைகளில் தங்கவரும் பயணியரிடை இப்படி ஓர் பாட்டை எந்த ஒரு இரவுப் பறவையும் இசைத்திருக்குமா? உலுக்கவைக்கும் இக்குரலினிமைபோல் - ஹெப்ராய்ட்ஸ் தொலைத்தீவுகள் கடலோசையை விஞ்சி - வசந்த காலத்திலும் எந்தக் குயிலும் கூடப் பாடியிருக்க இயலாது! எவரேனும் சொல்லமுடியுமா என்ன அந்தப்பாட்டு என? கடந்தகால பழமையான நிகழ்வுகளா? யுத்தங்களா--அவளது துன்பகீதம் ? இன்றும்கூட நடக்கும் நமக்குத் தெரிந்த சங்கதிகளை சிறு பாட்டாக இசைக்கிறாளோ? ஏதேனும் இயற்கைப்பேரிடரோ-துன்பமோ,வலியோ? ஒருகாலத்தில் நடந்ததோ-மீண்டும் நடக்க இருப்பதோ? என்ன கருப்பொருளோ-அக்கன்னியின் பாட்டில்? அவள் பாடப் பாட முடிவற்றே ஒலித்தது- பணியினிடையும் கதிரறுக்கையிலும் பாடிய அவள் பாட்டில
அதோ சுவரில் ஓவியமாய் நிற்பவள்தான் என் முந்தைய சீமாட்டி - உயிரோடு இருப்பதுபோலில்லை? அற்புதமான படைப்பு-பிரா பண்டாலின் கரங்கள் ஒருநாள் முழுவதும் கடுமையாய் உழைத்தன-அவள் நிற்கிறாள்- இங்கே அமர்ந்து அதைக் கவனி- திட்டமிட்டே அந்த ஓவியனை வரச்செய்தேன்: அம்முகத்தின் அழகை உன்னைப்போன்றோர் புரிவது இயலாது-அவனால் மட்டுமே முடியும்- அந்தமுகத்தின் ஆழத்தையும் அதீத உணர்ச்சிகளையும் அவனாலேயே கொணர்ந்திடல் கூடும்- என்னைப்போன்ற சீமானின் அண்மையாலே அந்த உணர்ச்சி அவளால் கொடுக்கமுடியும்-அல்லது ஓவியரே அவளணிந்த ஆடையைத் திருத்தச் சொன்ன வெட்கத்திலோ-அல்லது அவள் அழகைப் புகழ்ந்ததாலோ- "வண்ணமெல்லாம் உன் ஏழிலைக் காட்டுவது கடினமென்று"சொல்லியிருப்பார்- அதுவே அவள் கன்னத்தின் சிவப்பைக் கூட்டியிருக்கலாம்! அவளுக்கு இருந்த இதயம்--என்ன சொல்வேன் அதுகுறித்து? எளிதில் மகிழ்ச்சிவயப்படும், விரைவில் த்ருப்தியுறும்- அவள் பார்த்திருப்பாள்-அவள் பார்வை எங்கணுமிருக்கும்- அந்திமயங்கி வெளிச்சம் மேற்கே குன்றுகையில் , கொத்தாக செரிப்பழத்தை தோட்டத்தில் புகுந்து தன் விவாசத்தைக் காட்டும் ஒருவேலையாளிடமும் அவள் ச