துன்பங்கள்தந்த ஆண்டு காற்றோடு போயிற்று
துவண்ட இதயத்தோரே, எழுமின் எழுமின் -அன்பு பிரபு
தன் மந்தையைப் புயல் இல்லா இல்லத்திற்கு அழைக்கிறார்
ஓசைமிகுக்கடலும்தொடா நிம்மதிதரும் இடம் அதுவே
அங்கே ஒளிவிடும் மணலும் பால்தரும் மலையும் உண்டு
துன்புறுவோர் சூரியனில் காய்ந்து, பாலையும் குடிப்பர்
நிழலும் பனித்துளியும் புற்களும் முழங்கால்வரை உண்டு
ஓசைமிகுக் கடலும் தொடா நிம்மதிதரும் இடம் அதுவே
அவர் காயங்களுக்கு மருந்திட்டு அழுவோர் கண்ணீர் துடைப்பார்
அவர்கள் துயிலிலாழ மிருதுவான தலையணை-படுக்கை தருவார்
"வாருங்கள் , வாருங்கள் எம் பிள்ளைகாள்" என்றே அழைப்பார்
உங்கள் அனைவர்க்கும் ஓசைமிகுக்கடல் தொடா இடம் தருவார்
புத்தாண்டின் முதல்நாள் மறைந்தோர் கடலில் மறைவார்
எழுமின் எழுமின் -துவண்ட இதயத்தோரே , தலை குனிந்தோரே
உமது பிரபு நீரில் நடக்கிறார் ,அவரே நம் அனைவர்க்கும் மேய்ப்பர் -
நம் எல்லோருக்கும் ஆழ்கடல் தொடா இடம் தரும் தேவன் அவரே!
Based on Katherine Tynan's A song for the New year

Comments

Popular posts from this blog