Posts

Showing posts from April, 2017
குண்டக்க  மண்டக்க ... மதுரைக்காரர்களோடு பல ஆண்டுகள் பழகி வந்ததால் நம்மவர்கள் பேசும் விதம் பற்றியும் வேறு என்னைக் குலுக்கிய சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து  கொள்ள விழைகிறேன். பாம்பென்றும் சொல்லமுடியாது..பழுதென்றும் எடுத்துக்கொள்ளமுடியாது சிலரின் சொற்ப்ரயோகங்களை வைத்து..கலெக்டர்  அலுவலகத்திலிருந்து-ராஜாஜி மருத்துவமனை வந்துவிட்டு, ஷெனாய்நகர் ,மதிச்சியம் வழியாகத் திரும்பிப் போகும்-ஒரு பெரிய பாத்திரத்தில் சுண்டல் விற்றுப் பிழைப்பை நடத்தும் ஒரு டிபிக்கல் மதுரை ஆசாமி எங்கள் நண்பர் குழாத்துக்குப் பரிச்சயமானார்-அடிக்கடி எங்களுக்கு சுண்டல் விற்கப்போய் . அவர் பூணூல் அணிந்திருப்பார் -அந்தக் கால வழக்கப்படி-விற்பதற்கு அந்த அடையாளமெல்லாம் தேவைப்பட்டதே!அவரை அடிக்கடி சீண்டிப் பார்ப்பதில் எனது நண்பர் ஒருவர்க்கு வழக்கம்-கும்பலாகப் பழகினால் இந்தமாதிரியெல்லாம் ரகளை பண்ணுவது இன்றும் உண்டே..ஒருநாள் அவரிடம் எனதுநண்பர்-'ஆமாம் ஓய் -கயிறு  போட்டிருக்கிறீரே -இதன் அர்த்தமெல்லாம் தெரியுமா?' என்று சீண்ட அன்று இருந்த கடுப்பில் அந்த சுண்டல் விற்கிறவர்-"  "ஒய்-உமக்கு உங்க அப்பா தான் அப்பான்னு த
Image
நான்மாடக் கூடல் நகரின் மையத்தில் மீனாட்சி கோயில் மட்டுமல்ல --அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் கூடலழகர் கோயிலும் இருப்பது சிறப்பல்லவா?பெரிய கோயில் என்றும் சொல்லமுடியாது-சிறிய கோயில் என்றும் கூறமுடியாது-பெருமாள் இங்கு உறையும்  அழகுமிகு கூடலழகர் ஆலயத்தை.  எதிரே மண்டபமும் ஸ்ரீ ஹயக்ரீவருக்கான சிறிய ஆலயமும்.எந்நேரமும் விஷ்ணு பக்தர்கள் ஏராளமான வடநாட்டு யாத்திரிகர்கள் வந்த வண்ணம் இருக்கும் சிறப்புமிகு ஆலயம்.  வாயிலில் யானையைச் சேவித்துவிட்டு உள்ளே நுழைந்தவுடன்-துவிஜஸ்தம்பம்-தரையில் விழுந்து சேவித்துவிட்டு-அருகே இருக்கும் தும்பிக்கை ஆழ்வார் தரிசனம். பெருமாள்கோயிலாதலால் முதலில் தாயாரைத் தரிசிக்க இடப்புறம் வாயிலைக் கடந்து ஸ்ரீ சக்கரத் தாழ்வார் சன்னதியில் மனமுருகப் பிரார்த்தனை-" சஹ்ராதித்ய  சங்காஸம் சஹஸ்ர வதனம் ப்ரபும்" -அப்படியே அவருடன் இணைந்த ஸ்ரீ யோக நரசிம்மரய்த் துதித்த வண்ணம் வலம் வருகிறோம்-எப்படிப்பட்ட எதிரிகளும் நமக்குத் தீமை செய்யாவண்ணம் இவர்கள் உபாசனை உதவுவதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்-எதிரிகள் எனில்-காரணமே இல்லாமல் நம்மை பயமுறுத்தும் எண்ணங்களைத் தான் குறிப்பிடுகிறேன்! அடு
Image
ஒருமுறை மதுரைக்கு  கிழக்கே வரிச்சூர் என்ற கிராமத்திற்கு பள்ளி ஸ்கவுட்ஸ் கேம்ப் -க்காகச் சென்றிருந்தோம்.மாலை ஐந்தாகி விட்டது.சிறிய அழகிய கிராமம்.மெல்ல நடந்து ஒரு சிறிய குளத்தை அடைந்தோம்.நிறைய மரங்கள் சூழ்ந்து மறையும் சூரிய ஒளியில் குளத்துத் தண்ணீர் வர்ணஜாலங்களை வாரி இறைத்த காட்சியில் மனதை பறிகொடுத்தோம்.கூட்டுக்குத் திரும்பிய பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி ஆயிரக் கணக்கில் கூடி பல்வேறு ஒலி வகைகளை எழுப்பி எங்களால் வேறு எதன்மீதும் கவனம் வைக்க முடியாமல் மெய் மறந்து நின்றோம்.பல நாட்கள் அந்த சூழலும் பறவைகளின் இன்னிசையும் எங்கள் நெஞ்சில் பல காலம் பண் இசைத்துப் பரவசப் படுத்தியது.மதுரைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை இப்படித்தான் சிற்றூர்களுக்கும்.வைகை அணைக்கட்டுக்கும் ,கும்பக்கரைக்கும் எக்ஸ்கர்ஷன்  அழைத்துச் செல்வார்கள்.கொஞ்சம் பெரிய மாணவர்கள் ஆனால் கொடைக்கானல் என்ற சொர்க்கபுரியே கூட்டிச்செல்வர்.குற்றாலம், கன்னியாகுமாரியும்அப்படித்தான்.எழுபதுக்களுக்குப்பிறகே பெங்களூரு, மைசூர்,திருவநந்தபுரம் ..எல்லாம் பொருளாதார அடிப்படையை வைத்தே!இன்றைக்கு எல்லோரும் எல்லா ஊர்களும் சென்று  வருகின்றனர். அமெரிக்
ஏறக்குறைய 40 ஆண்டுகள் மதுரையில் வாழ்ந்தது --இன்னும் அங்கே வசிப்பதுபோல் இருக்கிறது.'மதுரையைச் சுற்றிய கழுதையும் போகாது' என்பது ஏதோ  பொறாமைபிடித்த ஜீவன் சொன்னது. 'குதிரை' என்றுதான் அது இருக்கவேண்டும்.எந்தஊரிலும் சிறப்புகள் உண்டு-மனம் பக்குவப் பட்டுவிட்டால்.   மதுரையில் ஆலய தரிசனங்கள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.சற்றே வித்தியாசமாக-- நான் படித்த சில நூல்களும் என்னைச் சுற்றிய மதுரைக் காட்சிகளுடன் விவரிக்க எண்ணுகிறேன். மனம் விசித்திரமானதே. திரைப்படமாக பலவும். பின்னணி இசையோடு சிலவும் எல்லாநேரங்களிலும் மனம் விளையாடிக் கொண்டே இருக்கிறது.ரமண மகரிஷி குறிப்பிட்டதுபோல் -"நடராஜப் பெருமானது தூக்கியாடும் திருவடிக் கருணைச்  சிறப்பின் தத்துவமானது தமது அடியார்களை ஆன்ம விசாரமாகிய நடனத்தின் மூலமாக இதயம் அடையும்படிக் கொஞ்சி விளையாடும் அருளாட்டமே ஆகும்".எனது தந்தையாரின் நீண்ட நாள் நண்பர்  ஒருவரது புதல்வர் பரிக்ஷை எழுத மதுரைக்கு வந்திருந்தார்.அவர் பார்வையற்றவர்.ஆறு நாட்கள் மதுரைக் கல்லூரிக்கு அவரை எக்ஸாம்   எழுதவும் திரும்பிக் கூட்டி வரும் பணி  எனக்குக் கிடைத்தது.அப்போதுதான் ஆங்கில
Image
Madurai O madurai-(13). அன்னை அங்கயற்கண்ணியை துதித்துத் துவங்குகிறேன்-கடவுள் வழிபாடு இல்லாமல் நானில்லை.'ஆலயம் செல்வது என் தந்தையர் காட்டிய வழி. பலநூறு முறை ஆலயங்கள் சென்றிருப்பேன் இதோ மதுரையின் மணியாய், மணியின் ஒளியாய் விளங்கும் ஆலவாய் அழகன் கைப்பற்றிய அன்னை மீனாட்சி கோயிலுக்குள் நுழைகிறோம். கிழக்கு கோபுரம் வழியே செல்வதே மரபு."பாலும் தெளிதேனும்" சொல்லி விநாயகனை-நின்ற கோலத்தில் நிற்கும் முழுமுதற்பொருளை-வணங்கி ,வலப்புறம் மயில்வாகனனாய் பன்னிரு கரங்களுடன் சுடர் முகம் கொண்டு அன்புருவம் தாங்கி நிற்கும் முருகனை வணங்கி மேலே நடக்கிறோம்-'சண்முகக் கடவுள் போற்றி' எனத்தொழுத்தவாறே.குறுகிய முகப்பு வாயிலைக் கடந்தால் சற்று விசாலமான இடத்தில -ஒரு பக்கம் பொம்மைக்கடைகள் ,இடப்பக்கம் நறுமணப் பூக்கள் கடைகளும்--அழகிய மாலைகள் வாங்கிக்கொண்டு-மீண்டும் குறுகிய வாயிலைத் தாண்டி சிறிதே இருபுறம் கண்களை சுழற்றி கடவுளர் சிலைகளை பார்த்தவாறே,மீண்டும் இடப்பக்கம் பிள்ளையாரையும்,வலப்புறம் சுப்ரமணியரையும் வணங்கி -சற்றே பெரிய பொற்றாமரைக்குளத்தையே அடக்கிய இடத்தில் இடப்புறம் திரும்பி, கர்ப்பகிரஹ விமான
Image
மதுரை ஓ மதுரை.-3 --கல்லூரியில் பயின்றதிலே ... அமெரிக்கன் கல்லூரியின் பெயரிலேயே அமெரிக்கா இருப்பதனால் நாங்கள் பயின்ற காலத்தில் (1967 -'71 )மெய்யாகவே சுதந்தரத்தோடும் சுயமரியாதையுடனும் கல்வி பயின்றோம்.இப்போதெல்லாம் கேள்விப்படுகின்ற கல்விச்சாலை இல்லை அது.ஆசிரியர்கள் மிகுந்த நட்புடனும் அன்புடனும் மாணவர்களுடன் பழகிய பொற்காலம் அது.'ஜென்டில்மேன்' என்றுதான் ஆசிரியர்கள் மாணவரை விளித்த நேரமது.முதல்நாள் அன்றே பியுசி சேர்ந்த மாணவர்கட்கு 'அறிமுக விழா.' ஒவ்வொரு துறையாக சுற்றிக்காண்பித்து  -மிகப்பெரிய நூலகத்தையும் காண்பித்து -ஆசிரியர்களுடன் பழகவைத்து இனிதே தொடங்கும் கல்லூரி நாட்கள்.அழகான சோலைகள் போன்ற அமைப்புகள் நடுவே வானுயர்ந்த வகுப்பறைகள் ! சிறிய சர்ச் -பெரிய காண்டா மணிக்கோபுரம், பறந்து விரிந்த மைதானம் -அடடா சொற்களில்லைநயமுற எம் கல்லூரியை விவரிப்பதுற்கு!பிரம்மாண்டமான மெயின் ஹால் -சிவாஜி ஆரம்பித்த ஆடிட்டோரியம் ,நிழல் தரு நெடிய மரங்கள் -சில்லென்ற காற்று -இங்கே தான் ஆங்கில இலக்கியம் படித்தேன் மூன்று ஆண்டுகள் -கூடவே எனது ஆருயிர் சகோதரன் சிவாவும்..ஏசி ஹை ஸ்கூலில் இருந்தே தொடர
மதுரை ஓ மதுரை! 4 மயக்கும் மதுரையும். சினிமாக்களும்! மதுரையில் நான் என்னுடைய ஆறு வயதிலிருந்து -1957இலிருந்து 2000 வரை வளர்ந்தேன், பயின்றேன்,-வாழ்க்கையின் வளங்களை உணர்ந்தேன்.'போர்க்குணம்' என்னோடு பிறந்தது-சிறு வயதில் மஹாபாரதக் கதையில் எனக்குப் பிடித்தவர்- கண்ணனைத் தவிர -பீமன் தான்.அப்போதெல்லாம் மதுரையில் பத்து பதினைந்து தியேட்டர்கள்தான் இருந்தன.சினிமா பார்க்கும் பழக்கம் நிறைய குடும்பங்களில் இல்லை.நான் ஆறாவது படிக்கும் போது 'அப்போதைய தினமணியில் 'உத்தமபுத்திரன்' பார்த்து மகிழ்ந்தேன்!சற்று இடைவெளிக்குப் பிறகு 'காதலிக்க நேரமில்லை' சென்ட்ரலில் பார்த்துவிட்டு அசந்துவிட்டேன்-காதலும் புரியாது கத்தரிக்காயும் புரியாத பருவம் அது. பிறகு நினைவுக்கு வருகிறது 'அன்பே வா' தான்--சிந்தாமணியில் அண்ணன் மணியோடு பார்த்துவிட்டு மயங்கிப்போனேன். இதெல்லாம் நடப்பது ஏசி ஹை ஸ்கூலில் படிக்கும்போது., பாட்டுக்கள் கேட்டுக்கேட்டு வளர்த்த காலம் அது.எம்ஜியார் மற்றும் சிவாஜி , டி எம் எஸ் பாடல்கள் மனதை ஊடுருவி நாளெல்லாம் நெஞ்சில் உலவிவந்து பரவசம் அடையும் காலமது. ஏதாவது பாட்டை இரைந்து
Image
மதுரை ஓ மதுரை-5.--ஏசி ஹை ஸ்கூல் ---பள்ளியில் படிக்கையிலே.. "சிங்கநாதம் வருகுது,,சீன நாகம் ஓடுது' என்ற பாட்டுடன்தான் எங்கள் பள்ளி பிரேயருடன் துவங்கும்.கள்ளம் இல்லா பிள்ளைகள் நாங்கள்.உலகத்தின் நஞ்சு துளிக்கூட படா அரும்புகள்-செய்த குறும்புகளோ ஆயிரம்-ஆனால் வில்லங்கமோ வில்லத்தனமோ எள்ளளவும் இல்லை-உண்மை .என்னால் எனக்கு வகுப்பு எடுத்த அத்துணை ஆசிரியர் பெயரையம் இன்றும் சொல்லமுடியும்-அது குறித்து எனக்குப் பெருமையே-ஆனால் என்னை இன்னார்தான் உருவாக்கினார் என்று மட்டும் சொல்லமாட்டேன்.அது வடி கட்டின பொய்.அப்படியிருப்பின் நான் இன்னும் சிறப்பாகவே என்னை உருவாக்கியிருந்திருப்பேன்.இன்று குழந்தைகளுக்கு இருக்கும் எந்த வசதியும் என் காலத்தில் எங்களுக்கு இல்லை-அது குறித்த ஏக்கமும் ஒரு போதும் இல்லை.நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியுடன் பள்ளிக்கூடம் போனோம்-படித்தோம்-விளையாடினோம்,வேடிக்கையாகவே எங்கள் காலம் கழிந்தது.தல்லாகுளம், பெருமாள் கோயில் அருகே அமைந்த அப்பள்ளிக்கூடம் எங்களுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்தது.அது ஓர் கிறித்தவப் பள்ளி என்று இன்று பேசுவோர் பேசட்டும்.-எங்களுக்கு ஜாதியும் இனமும் மொழியும் -வேறு
Madurai O madurai-7 எழுதுவது தான் என் வேலை-யார் படித்தால் என்ன-படிக்காவிட்டால் என்ன என்றெல்லாம் நினைத்து எழுதுபவன் பெரிய எழுத்தாளர்..பத்திரிக்கையில் எழுதுகிறவன் தான் எழுத்தாளர் என்று ரொம்ப பேர் நினைக்கிஎறோம்-'புகழ்' இல்லாமல் வெறும் எண்ணங்கள் சொற்களாக இருக்கமுடியாது என்று முடிவு கட்டுகிறோம்.விருப்பும் வெறுப்பும் நம்மை ரொம்பவே வழி நடத்துகின்றன.தவறில்லை. எழுத எழுத எல்லோரிடமும் தொடர்பு இருக்கிறதாக ஒரு பாவனை வருகிறது-அதனால் தொடர்ந்து எழுதுகிறோம்--யார் படிக்காவிடினும். மதுரையின் தமிழ்தான் தமிழ் என்று ரொம்பநாள் பெருமைப்பட்டேன்-பிறகே மெட்ராஸ் தமிழும் தமிழ்தான் என்று புரிந்து கொண்டேன்-'எல்லா மொழியும் எச்சிலில் பிறந்த கொச்சை' என்று ஜேகே சொன்னது நினைவுக்கு வரும்-அதிரடியாகப் பேசத்தெரியாமல் வருந்தி இருக்கிறேன்-இப்போது பேசாமல் இருப்பதை மிக சௌகர்யமாக எடுத்துக்கொள்கிறேன். மதுரையில் பெயர்கள் வைத்திருக்கும் பாங்கு வேடிக்கையாக இருக்கும்-மண்டையன் ஆசாரி தெருவும் உண்டு-சுண்ணாம்புக்கரத்தெருவும் உண்டு.சித்திரக்காரத்தெரு-என்ன அழகான பெயர். மதிச்சியம் என்றால் என்ன? நரிமேடு-
Image
Madurai O Madurai -8. A.C high school Days... எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே'-கோரிப்பாளையம் வழியாக ,தமுக்கம் தாண்டி, கருப்பண சாமி கோயில் அருகே இந்தப் பாட்டையும் கேட்டுக்கொண்டு நானும் எனது அண்ணனும் ஏசி ஹைஸ்கூல் உள்ளே நுழைவோம்-லேட் ஆகப்போனதே கிடையாது .பலநாட்கள் காலை வகுப்புகளை முடித்துவீட்டு -ஷெனாய்நகர் போய் மதிய உணவு சாப்பிட்டு வந்துவிடுவோம்.காலை அசெம்பிளி யின் போது 'நியூஸ்' எல்லாம்கூட நானும் மணியும் வாசித்திருக்கிறோம்.ஒருமுறை ஹெச்,எம் கட்டுரைப்போட்டி முடிவு ஒன்றை அறிவிக் கிறார்-ரெஜினோல்ட் விக்டர் முதல் பரிசு..சிவாவுக்கு இரண்டாம் பரிசு!-'எங்கள் ஊர்' என்று கும்பகோணம் பற்றி அவன் எழுதியதற்கு! ரெஜி பின்னாளில் மணிக்கு சகலையானார்! எங்கள் பள்ளி மாடல் லோக்சபா ,மாடல் யு என் ஓ எல்லாம் நடத்தும் .தலைசிறந்த எழுத்தாளர்களை கூட்டிவந்து உரை ஆற்ற வைப்பர். அகிலன், நா. பார்த்தசாரதி, எல்லோரையும் இப்படித் தான் சந்தித்திருக்கிறோம் .பண்ட் ட்ராமா ஒன்று -சாணக்கிய சபதம்' என்றபெயரில் தமுக்கம் கலையரங்கில் போடப்பட்டது-இயக்கம் எங்கள் உள்ளம் கவர் அரசு ஆசிரியர்.எனக்குப்பெருமை-ஒரு நல்ல ர
Image
Srikrishnan Ku 5 March  ·  நெஞ்சில் நிற்கும் காவியம் போல் சில கட்டிடங்களும் வாழ்க்கையில் நம்மோடு ஒன்றிவிடும்-அந்த வகையில்தான் நமது மதுரையின் காந்தி நினைவுக்கூடமும். .அந்தக் கம்பீரக் கட்டிடத்துக்கு அருகே வலப்புறம் ஓர் ஏழைகள் விடுதியைத் தாண்டி கால்நடை மருத்துவமனையினுள்இருந்த வீட்டில்தான் நாங்கள் மூன்று ஆண்டுகள் இருந்தோம்-எனது தந்தையார் அங்கெ மருத்துவர். நான் மூன்றாவது, மணி ஐந்தாவது படித்தான் தல்லாகுளம் பள்ளியில். எங்களுக்கு பொழுது பள்ளிக்கூட நேரம் தவிர இந்த காந்தி நினைவுக்கூடத்தில் தான்.காம்பௌண்ட் சு வரை ஏறிக்குதித்தே குழந்தைகள் பகுதி காந்தி நினைவக நூலகத்திற்குச் சென்று விடுவோம் -மணிக்கணக்கில் சிறுவர் புத்தகங்கள் -அம்புலிமாமா, கண்ணன் படித்து இன்புறுவோம்.மேலே காந்தியின் வாழ்க்கை வரலாறு வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படக் கண்காட்சியிலிருந்து இந்தியா உலக வரலாறு எல்லாம் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.காந்தி அடிகள் ஹே ராம் என்று கூவி உயிரை விடுகின்ற காட்சி அழக்கூட வைக்கும்.வெளியே நினைவகத்தினுள் அவரது ஆசிரமக்குடிசை மாதிரி அமைப்பில் அவர் பயன் படுத்திய தட்டு, காலணி,பாய் எ
Image
மாந்தருக்கு அழகு சிந்தனை-ஊருக்கு அழகு ஆறு. மதுரைக்கு வைகை ஆறு அணி செய்யவில்லை ஏனெனில் எப்போதும் வறண்ட வைகையைத் தான் நாம் பார்த்திருக்கிறோம்,நானறிந்த வரை இந்த நிலை. ஆனால் நாங்கள் சிறு வயதில் ஆற்றில் குளித்த காலமும் இருந்தது. மழைக் காலங்களில் ஓடும் . வைகை கரை புரண்டு ஓடியதில்லை. 4 வருடங்களுக்கு ஒரு முறை - நான்கு முறை நாற்பது வருடத்தில் வெள்ளத்தைப்பார்த்து மிரண்டிருக்கிறேன் .அறுபதுகளில் வந்த வெள்ளம் காரணமாக நான் படித்த முனிசிபல் பள்ளி -ராம ராயர் மண்டபம் அருகில் உள்ளது-பத்து நாட்கள் மூடிவிட்டனர்.இப்போதல்லாம் இருபுறமும் கற்கள் வைத்து நல்ல சாலைகளெல்லாம் போட்டு இருப்பது மிக பயனுள்ளதாக இருக்கிறது. எழுபத்து இரண்டோ-மூன்றோ- ஒரு வெள்ளம் வந்தது-ஆடிப்போய் விட்டது மதுரை.கீழ்பாலம் (அப்படி ஒன்றே ஒன்றுதான் இருந்தது) மூழ்கி விட்டது-மேல்பாலத்திலும் செல்லத்தடை.பெரும் போராட்டமாகப்போய்விட்டது-ஆற்றில் மாட்டிக்கொண்டவர்களைக் காப்பாற்றுவது.ஒரு ஹெலிகாப்டர் வைத்து மாவட்ட நிர்வாகம் சிக்கியவர்களை ஆற்றிலிருந்து அமெரிக்கன் கல்லூரி மைதானம் வரைக் கொண்டு இறங்கிவிட்டது.ஆற்றின் இருபுறமும் ஆயிரக்கணணக்கான மக்கள் வெள்ள
SMILE Day too is born each dawn,grows bright only to become dimmer to die at dusk - Who is there to mourn for its passing away? even the old are resigned to their fate. Each day our life-time grows yet loses a day, we are getting nearer to grave yet do not give up the zest for life , thirst for knowledge. Love for fun, likes and passion extend always, we are as though in a merry-go-round, enjoy the daily round, smiling and smiling at things For it is the way of life to make us more wise. By seeing the panorama of life, like the Sun- that incomparable saviour, watching us all to protect each minute in splendour- let us reach the end, weep never, but smile away- leave the world that revolves ever in all glee. Srikrishnan.Ku From Poetry.com
Image
நான் சிறுவனாய் இருந்த காலத்திலிருந்தே கலெக்டர்'ஸ் ஆபிஸ் டு திருப்பரங்குன்றம் பஸ்ஸில் ஏறி முருகப்பெருமானைத் தரிசித்து வந்திருக்கிறேன்.பின்னாளில் மூட்டா தோட்டத்திலுருந்தபோது பல நாட்கள் சென்று முருகன் அருளைப்பெற விழைந்திருக்கிறேன்.பெரிய ' ஓ 'வடிவத்தில், வெண்ணீறணிந்து தூரத்திலிருந்து பார்க்கையிலே கூட மனம் கவரும் மருகன் அவன்.இன்னும் சொல்லவேண்டுமானால் நாற்பத்து எட்டு நாட்கள் மலையைச் சுற்றி வந்துதான் மூட்டா தோட்டத்து இடமே எங்களுக்கு கிடைத்தது.கோவினுள் நுழையும்போது கருப்பண்ண சாமியை க ும்பிட்டுவிட்டு -விநாயகரை வணங்கி-நெடிய இரண்டாம் கட்ட நிலையைக் கடந்து மேலே சென்று பரந்துபட்ட நிலைக்கு வருவோம். இடதுபுறம் கோயில் குளத்தில் இறங்கி, உப்பு,மிளகு, வெல்லம் பொட்டலங்கள் வாங்கி தோஷ நிவர்த்தி செய்துவிட்டு,.அடுத்த கட்ட நிலைக்கு பல படிகள் ஏறி வந்து-கொடிமரத்தின்முன் விழுந்து வணங்கி பிரார்த்தனை செய்வோம்.கூட்டமில்லாப்பொழுதில் மிகப் பேரமைதியை நாம் அங்கெ உணரமுடியும்.இன்னும் மேலே சென்றால் -வலதுபுறம் கோவர்தனாம்பிகையை வணங்கிவிட்டு-மெயின் சன்னதிக்கு ஏறி வருகிறோம்.ஐந்து அற்புத மூலவர் விக்ரகங்களை ஒன்றன்