புயல்
-SHAKESPEARE'S TEMPEST
Act-1 scene 1
பலத்த இடியோசையுடன் காற்றும் மின்னலும் ---கடலில்-
கப்பலின் மேற்தளத்திற்கு மாலுமியுடன் தலைவன் வருகிறான் --
தலைவன்-மாலுமி!
மாலுமி -இங்கேதான் தலைவா -என்ன வேண்டும்?
நல்லது-மற்ற மாலுமிகளை உற்சாகப்படுத்து-நம் கப்பல் கவிழுமுன்!
சீக்கிரம் ! சீக்கிரம்!-- வெளியேறுகிறார்.
மாலுமிகள் வருகை
மாலுமி !: வாங்க வாங்க --அப்படித்தான் அப்படிதான் கயிற்றை இழுங்க..மேற்தளத்துப்பாய்மரத்தையும் பாருங்க..விரைவாக விரைவாக!
தலைவர் உத்தரவைக் கேளுங்க -நல்லா வீசுங்க கயிற்றை -காற்றை மடக்கும் அளவுக்கு -தரையைத் தட்டாமல் கப்பலைச் செலுத்துங்கள் !
அலான்சோ,செபாஸ்டின் ,அன்டோனியோ,பெர்டினாண்ட் ,கொன்சலோ மற்றும் பலர் வருகை-
அலான்சோ:தம்பி-மாலுமி- பத்திரம்ஒங்க தலைவர் எங்கே? இந்த ஆட்களை நல்லா வேலை வாங்கு-
மாலுமி 1 :அய்யா -தயைகூர்ந்து உங்க கீழ்தளத்திற்குப் போங்க--
அலான்சோ-உங்கே தலைவன் எங்கேடா..
மாலுமி 2 :அந்த ஆள் சொன்னதைக் கேட்கலை?என்ன புயலுக்கு உதவி செய்ய வந்தீங்களா?
கொன்சலோ:இல்லை இல்லை-பொறுமையாய் இருப்பா!
மாலுமி 2 :கடலே பொறுத்துப்போனால்! இப்போது கீழே போய்விடுங்கள்!இந்தக் கடுமையான காற்றுக்கு அரசன்னா புரியுமா?
அவங்கவங்க அறைகளுக்குள் கீழே போங்க-அமைதி-அமைதி-எங்களைத் தொந்தரவு செய்யாதீங்க!
கொன்சலோ:இருந்தாலும்--நினைவிருக்கட்டும், கப்பலில் யார் பயணிக்கிறார் என்று!
மாலுமி 2 :என்னைவிடவும் எவருக்காக நான் கவலைப்படுவேன்?நீங்கள் அரசனுக்கு ஆலோசகர் தானே?எங்கே இந்தப்புயலின் சீற்றத்தைத் தணித்து-அமைதிப்படுத்துங்கள்!-நாங்கள் இந்தக் கயிரை இழுப்பதை நிறுத்திவிடுகிறோம் -உங்கள் அதிகாரத்தைக் காண்பியுங்கள்!--முடியாவிட்டால் --நன்றி சொல்லுங்கள் இவ்வளவுநாள் வாழ்ந்ததற்கு!உங்கள் அறைகளுக்குச் செல்லுங்கள்!-அவ்வளவுதான்! -இந்தாப்பா -இன்னும் பலமாய் விழுங்க ---அய்யா நீங்க எங்க வழியிலே நிற்கவேண்டாம் நான் மீண்டும் சொல்கிறேன்( -மாலுமி மறைகிறான் ).
கொன்சலோ:இவன் சரியான மாலுமிதான்!ஆனால் கடலில் மூழ்கி இறக்கும் அறிகுறி இல்லை இவனிடம்-தரையில் தூக்கிலிட்டுத் தான் சாவு!தூக்குகயிறே இவனுக்கு நன்மை செய்யும்!இக்கப்பலின் கனமான கயிறெல்லாம் தீங்கு செய்யாது.புயலைக்கடந்து அவன் வாழட்டும்!அப்படியில்லையெனில் நாம் இந்தப்புயல் ஆபத்திலிருந்து தப்பமுடியாது!
மாலுமி 2 வருகை
மாலுமி 2 :அந்த உச்சிக்கம்பத்தின் பாய்மரத்தை இறக்குங்கள் --இன்னும் கீழே-கப்பலைக் காற்றின் போக்கில் ஓட விடுங்கள்..(ஒரே கூக்குரல்கள்-பின்னாலிருந்து)நாசமாய்ப்போக கூச்சலிடுவோர்! நம்மை விடவும் காற்றை விடவும் அல்லவா கூச்சலிடுகிறார்கள்!
(செபாஸ்டியன் ,அன்டோனியோ, கொன்சலோ வருகை)
மறுபடியும் நீங்களா!என்னதான் வேண்டும் உங்களுக்கு?நாங்கள் செய்வதையெல்லாம் விட்டுவிட்டுக் கப்பலோடு மூழ்கிவிடவா?நீங்களும் மூழ்கிவிட ஆசையா?சொல்லுங்கள்!
செபாஸ்டியன் :நரகத்திற்குப்போ --தே....மகனே!அதிகப்பிரசாங்கம் செய்யும் அற்பனே!
மாலுமி: அப்படியானால் நீங்களே வேலை செய்யுங்கள் !
அன்டோனியோ:நாயே-தூக்கிலே தொங்கு! வே-மகனே!என்ன துணிச்சல்!கூப்பாடா போடுகிறாய்!உன்னைவிட நாங்கள் அஞ்சவில்லை கடலில் மூழ்குவதற்கு!
கொன்சலோ: இந்தப்பயலும் மூழ்க மாட்டான்! உறுதியாய் நான் சொல்வேன்-முட்டையைவிடப் பலவீனமாய் இக்கப்பல் இருந்தாலும்-
அல்லது மாதவிடாய்ப்பெண்போல் சிந்திக்கொண்டிருந்தாலும்,கப்பல் மூழ்காது!
மாலுமி: கப்பலைக் காற்றின் திசைக்கு இழுங்க! கடலினுள் செல்லட்டும் மீண்டும் ..(நனைந்த மாலுமிகள் வருகை)--இனிப்புண்ணியமில்லை-பிரார்த்தனை செய்யுங்கள்!கதை முடிந்தது!(மறைகிறார்கள் மாலுமிகள்)
மாலுமி 1 : என்ன அவ்வளவுதானா! முடிந்தது எல்லாம்..
கொன்சலோ:அரசனும் இளவரசனும் பிரார்த்தனையில்-நாமும் சேர்ந்துகொள்வோம் அவர்களுடன்!எல்லாம் ஒரே கதைதான்--
செபாஸ்டியன் :எனக்குப்பொறுமை போச்சு!
அல்போன்சா:நம்ம வாழ்க்கையெல்லாம் இந்தக்குடிகார மாலுமிகளால் வஞ்சிக்கப்பட்ட உள்ளது!இந்த லொட லொட வாயன் பத்துமுறை மூழ்கவேண்டியவன்தான்!
கொன்சலோ:அப்படியும் அவன் தரையில் தூக்கிலிட்டுத்தான் மறைவான்!-எல்லாச்சொட்டுத் தண்ணீரும் அவனை மூழ்கடித்தாலும்!
குரல்கள்!கூக்குரல்கள்!குழப்பமான சத்தங்கள்!
மாலுமி: இரக்கங் காட்டுங்கள் கடவுளே!நாம இப்ப பிரிவோம்-நம்ம பெண்டு பிள்ளைகளே!அண்ணே!வரோம்-பிரிஞ்சுப்போறோம்!
அய்யகோ!
அன்டோனியோ: அரசனோடு எல்லோரும் மூழ்குவோம்!
செபாஸ்டியன்:அவருக்கும் பிரியா விடை கொடுப்போம்!
அன்டோனியோ, செபாஸ்டியன் மறைக்கிறார்கள் ..
கொன்சலோ:ஒரு ஏக்கர் பாழ் நிலத்துக்கு கூட ஆயிரம் மைல் கடலையே இப்ப தருவோம்!கட்டாந்தரை-கள்ளிச்செடி இருந்தாலும் போதுமே!எதுவேண்டுமானாலும்-நடப்பதுதான் நடக்கும்!அனால் எனக்கு நீரில் அல்ல -நிலத்தில்தான் உயிர் பிரிய வேண்டும்!
(to be continued)

Comments

Popular posts from this blog