1. Srikrishnan Ku1 March at 20:37.
  1. நேரு ஆலால சுந்தர விநாயகர்...

  2. எழில்மிகு மதுரையில் வடக்குமாசி-மேற்குமாசி சந்திப்பில் அருள்பாலிக்கிறவரே நம் நேரு ஆலால சுந்தர விநாயகர் .எத்தனையோ கூட்டங்களை பார்த்த இடம் அது.மகத்தான சிந்தனையாளர்களை , பேச்சாளர்களை ,பட்டிமன்றங்களை தலைவர்களை ஆயிரக்கணக்கானவர்களைக் கட்டிப் போட்ட இடம் அது-ஏன் அதற்கு 'நேரு' பெயரும் வந்தது ?ஒருவேளை நேரு அவ்வழியில் செல்லும்போது கோவிலில் நிறுத்தி அவருக்குப் பிள்ளையாரின் துண்ணுறு கொடுத்திருக்கலாம்-அவரும்-ஒரு மரியாதைநிமித்தம் வாங்கிக்கொண்டிருக்கலாம்-அவருக்க...ுத்தான் 'பக்தி'எல்லாம் கிடையாதே.வருவோரும் போவோரும் ஜேஜே என்று காட்சி அளிக்கும் இடமே இது.பெரிய தேர் ஆண்டுக்கு ஒருமுறை வரும் -அப்போது பார்க்க வேண்டுமே கூட்டத்தை-பிளக்கும் வெயிலில் -ஆலவாய் அழகனுக்கும் அங்கயர்க் கண்ணிக்கும் வாழ்த்தொலிகள் எழுப்பி கூட்டத்தில் தேர் வரும் சமயம் உள்ளமே அதிருமே..அழகிய மதுரையின் அசத்தும் கன்னியரும் காளையரும் கண்களால் கதைபேசும் காவிய நிகழ்ச்சிகளும் அங்கே நிறைவேறும்!பல்லாயிரக்கணக்கான உழைக்கும் வர்க்கத்து வீரர்கள் கூடி உரிமைக்குரல் எழுப்பிய உன்னத இடம் இது ஆனால் எந்த நேரத்திலும் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாது -அந்த நேரு விநாயகரே சாட்சி! கூட்டங்கள் நடக்கும்போது மதுரைக் காரர்களுக்கு சுண்டலும் அப்பமும் கடலையும் சளைக்காமல் விற்று அவர்கள் பசியைப் போக்கும் விற்பனையாளர்கள் என்ன-கோடையில் நீர்மோர் கொடுத்து தாகம் தீர்க்கும் நல்ல உள்ளங்கள் என்ன, அக்காலத்தில் எம்ஜியார் சிவாஜி போன்ற வர்களை வைத்துப் பெருங்கூட்டங்கள் காட்டிய விசிறிகள் சங்க அடியார்கள் தியாகம் என்ன ?-இப்படி மேல மாசி வடக்கு மாசி சந்திப்பைச் சொல்லிக் கொண்டே போகலாம்.இப்போதெல்லாம் அத்தகைய கூட்டங்கள் நடக்கிறதா என மதுரைக்கார நண்பர்கள்தான் சொல்லவேண்டும்.அப்போதெல்லாம் அருகில் சிறிய பரோட்டா , இட்லிக்கடைகளும் மணம் பரப்பி பசிபோக்கும் இடமாக இருந்தது.நிற்க நேரமோ இடமோ இல்லாத சூழ்நிலைமை அந்த இடத்திற்கு இப்போதும் உள்ளதே அதன் பரபரப்பான தன்மைக்கு சான்று. மதுரை மதுரை தான்!

Comments

Popular posts from this blog