ஆன்மாவிலிருந்து இசைக்கும்
நம்பிக்கை ஓர் பறவை
சொற்களே இன்றிப் பண்ணிசைக்கும்
ஒருபோதும் பாட்டை நிறுத்தியதில்லை
மிகமிக இனிமையான அப்பாட்டு
கடுங்காற்றிலும் ஒலிக்கிறது
அந்த இசை நம்மைக் கதகதப்பாக்கிறது
கடுங்காற்றையும்கூட வலியில் ஆழ்த்தும்
கடுங்குளிர்ப் பிரதேசத்திலும் கேட்டேன்
மிக வினோதமான கடலிலும்கூட -
எந்த உச்சநிலைப் பருவத்திலும்
என்னிடம் ஓர் ரொட்டித்துண்டையும்
கேட்டதில்லையே.
--Emily Dickinson.
The Waste Land 2. A Game of Chess
நான் களைப்பாகத் தளர்ச்சியடைந்து இருக்கிறேன் இன்று
ஆம் மோசமாக . என்னோடு இரு.பேசு.
ஏன் இப்போது அதிகம் பேசுவதில்லை?என்ன யோசனை?
என்ன நீ என்ன யோசிக்கிறாய் என்பதே எனக்குத் தெரிவதில்லை -யோசி.
நாம் எலி வளையில் இருக்கிறோம் இப்போது
இறந்துபோனவர் எலும்பும் அங்கே மிஞ்சாது
என்ன சத்தம் அது? கதவுக்கடியே வரும் காற்று
இப்போதென்ன சத்தம் அது?காற்றுதான் அப்படி
ஒன்றுமில்லை மீண்டும் ஒன்றுமில்லை
உனக்கு ஒன்றுமே தெரியாதா ?நீ ஒன்றுமே பார்க்கவில்லையா?
நீ நினைவிலும் ஒன்றையும் வைக்கவில்லை?
நான் நினைவில் வைத்திருக்கிறேன்
அந்த முத்துக்களான அவன் கண்கள்
"நீ உயிருடனா? இல்லையா?உன் தலையில் ஒன்றுமில்லையா?
ஓ ஓ ஓ ஓ அந்த ஷேக்ஸ்பியரின் கந்தல் வரி
கம்பீரமானது
அறிவுபூர்வமானது
"இப்போது என்ன செய்வேன்?என்னதான் செய்வேன்?
வேகமாக வெளியில் சென்று நடப்பேன் என் தலையைத் தொங்கப்போட்டு
நாளை என்ன செய்வேன் ?
இனி எப்போதும் நாம் என்ன செய்வோம்?
பத்துமணிக்கு வெந்நீர்
மழையாய் இருப்பின் கதவை அடைத்துக் காருக்குள்
ஒரு சதுரங்க ஆட்டம் ஆடுவோம்
இமைகளற்ற கண்களை அழுத்தி கதவு தட்டப்படுவதற்காக காத்திருப்போம்
வில்லுடைய கணவனைக் கும்பல் சூழ்ந்தபோது நான் சொன்னேன்
என்சொற்களைக் கலக்கவில்லை -எனக்கே சொல்லிக்கொண்டேன்
சீக்கிரம் தயவுசெய்து நேரமாகிவிட்டது
ஆல்பர்ட் வருகிறான் உற்சாகமாக இரு
உன்னிடம் பல் செட்டுக்காகக் கொடுத்த பணத்தை
நீ என்ன செய்தாய் என்று கேட்க விரும்புவான்
நானும் இருந்தேன் அவன் கொடுத்தான்
உன்னுடையது வெளியில் வந்துவிட்டன
நல்லதாய் ஒரு செட் வாங்கிவிடு
அவன் சொன்னான் உன்னைப்பார்க்கப் பிடிக்கவில்லை சத்தியமாக
என்னாலும்தான் நானும் சொன்னேன் பாவம் ஆல்பர்ட்
நான்கு ஆண்டுகள் ராணுவத்தில் இப்போது நன்றாக இருக்க விரும்புகிறான்
நீ அதைக்கொடுக்கவில்லையெனில் மற்றவர்கள் உண்டு நான் சொன்னேன்
ஓ அப்படியா அவள் சொன்னாள் அதுமாதிரித்தான் நான் சொன்னேன்
எவருக்கு நான் நன்றி சொல்லவேண்டும் என்று எனக்குத் தெரியும்
நேர்பார்வையை என்மீது செலுத்தினாள்
சீக்கிரம் தயவுசெய்து நேரமாகிவிட்டது

Comments

Popular posts from this blog