இரவின் அமைதியில் என்னிடம் வா:
நிசப்தக் கனவுகள் பேசும்போது வா:
மிருதுவான கொழுகொழு கன்னங்களுடன்
சுடர்விழிகளுடன் வா ஓடைமீது ஒளிரும் சூரியன் போல்:
கண்ணீருடன் திரும்பி வா
நிசப்தக் கனவுகள் பேசும்போது வா:
மிருதுவான கொழுகொழு கன்னங்களுடன்
சுடர்விழிகளுடன் வா ஓடைமீது ஒளிரும் சூரியன் போல்:
கண்ணீருடன் திரும்பி வா
ஓ கனவே என்ன இனிமை ,மிக இனிமை
கசப்புடன் கூடிய இனிமை
அதன் விழிப்போ சொர்க்கத்தில்தான்
அங்கே காதலில் நிரம்பி வழிந்துகொண்டு
என்றென்றும் சந்தித்துக்கொண்டும் -
அங்கே தாகத்தோடு ஏக்கமுறும் விழிகள்
கவனிக்கின்றன வாயிற்கதவை
திறப்பதும் அனுமதிப்பதும் அனுப்புவதும்
ஒருபோதும் இல்லை
கசப்புடன் கூடிய இனிமை
அதன் விழிப்போ சொர்க்கத்தில்தான்
அங்கே காதலில் நிரம்பி வழிந்துகொண்டு
என்றென்றும் சந்தித்துக்கொண்டும் -
அங்கே தாகத்தோடு ஏக்கமுறும் விழிகள்
கவனிக்கின்றன வாயிற்கதவை
திறப்பதும் அனுமதிப்பதும் அனுப்புவதும்
ஒருபோதும் இல்லை
என் கனவுகளில் நீ வந்தாய் நானும்கூட வாழ
மரணத்தில் உறையும் வாழ்க்கையை உணர
கனவுகளில் என்னிடம் வா :நான் உனக்கு
துடிக்கும் நாடிக்கு ஒலியும் ,மூச்சுக்கு மூச்சும் தர :
மெல்லப்பேசு,மெல்லவே சாய்ந்திடு
அந்தக் காலம் ,என் அன்பே, எவ்வளவு ஆண்டுகளுக்கு முன் .
மரணத்தில் உறையும் வாழ்க்கையை உணர
கனவுகளில் என்னிடம் வா :நான் உனக்கு
துடிக்கும் நாடிக்கு ஒலியும் ,மூச்சுக்கு மூச்சும் தர :
மெல்லப்பேசு,மெல்லவே சாய்ந்திடு
அந்தக் காலம் ,என் அன்பே, எவ்வளவு ஆண்டுகளுக்கு முன் .
Based on C.G.Rosetti's Echo in Ravivarma's pic.
Comments
Post a Comment