ased on TO HIS COY MISTRESS BY ANDREW MARVELL
நாணுகின்ற நங்கைக்கு
நமக்குப் போதிய இடமும் நேரமும் இருப்பின்
இந்த நாணம் பெண்ணே குற்றமாகாது .
அருகருகே அமர்ந்து யோசிக்கலாம் -
எவ்வழியில் நடப்பது ,நம் நெடிய அன்பின் நாளைக் கடப்பதெப்படியென-
நீ இந்தியாவில் கங்கை
க்கரைத் தோட்டத்தில் பவளம் பொறுக்கலாம்,
நான் ஹம்பர்நதியோரம் சோகப்பாடல்பாடிவரலாம்-
பெருவெள்ளத்திற்குமுன்பே நான் உன்னை நேசித்துவரவும்
நீயோ-தயவாக யூதர்கள் மாற்றம் நிகழும்வரை என்னை மறுக்கலாம்-
எனது பொங்கிவரும் காதல் வளரும்-சாம்ராஜ்யங்களைவிடவும்
பெரியதாகவும் மெதுவாகவும்-நூறாண்டுகள் உன் கண்களையும்
உன் நேர்கொண்ட பார்வையையும் புகழ்ந்திருக்கவும்
இருநூறு ஆண்டுகள் உன் நெஞ்சத்தையும்
முப்பதாயிரம் ஆண்டுகள் மீதி இருக்கும் உன் அங்கங்களையும் !-
ஒவ்வோர் பகுதிக்கும் ஒவ்வோர் யுகமும் -கடைசியில் உன் இதயத்தைக்
காட்டிடுக,அன்பே!இந்நிலைக்கு நீ தகுதி வாய்ந்தவள்!
இதைவிடவும் குறைவாக உன்னை நான் மதிக்கலாகாதே!
ஆனால் எனக்குப்பின்னாலே-எப்போதும் கேட்கிறேன்
இறக்கையுடன்கூடிய காலதேவனின் விமான ஒலியை-
நமக்குமுன்னர் அங்கே பரந்து விரிந்திருக்கிறது -
நிலையாமையாகிய பாலைவனம்!--அங்கு உன் அழகு
ஒருபோதும் காணப்படுவது சாத்தியமன்று!
உனது பளிங்குக் கல்லறையில் , எனது பாட்டின்
எதிரொலியும் கேட்கவே கேட்காது!
வெகுநாள் சேமித்துவைத்த உன் கன்னித்தன்மையை
சாதாரணப் புழுக்களே ருசிபார்க்கும்-
உன் புராதனக் கற்பெனும் திண்மை மண்ணுக்கே இரையாகும்!
எனது காமமும்கூடச் சாம்பலாகிவிடும்-
இடுகாடு என்னவோ அருமையான தனியிடம்தான்-
ஆனால்,நான் நினைக்கிறேன் எவரும் அங்கே தழுவுவதில்லையே!
எனவே , இப்போது உன் இளமையெனும் அழகு
மேனியில் செழிப்பாய் பனித்துளியாய் விகாசிக்க
வலிய எழும் உன் ஜீவாத்ம இன்பம் அன்புக்கலையை
நேசித்து யாக்கையில் குதித்துவர -இன்புற்றிருப்போமா?
காதல் வயப்பட்ட பறவைகளாய் -காலத்தை விழுங்கியும்-
அல்லாது அக்காலமே மெதுவாக நம்மை வஞ்சிக்கமுற்படும்-
நம் சக்தி முழுவதையும் திரட்டி ஓருயிராய் மாறலாம் வா!
வாழ்க்கையின் இரும்புச் சங்கிலியைத் தகர்த்திடலாம்-
சூரிய தேவனை நம்மால் நிறுத்துதல் முடியாது-ஆயினும்
காலத்தைக்கட்டிப்போட்டு-சூரியனை ஓடஓட விரட்டலாம்!
The speaker of the poem starts by addressing a woman who has been slow to respond to his romantic advances. In the first stanza he describes how he would love her if he were to be unencumbered by the constraints of a normal lifespan. He could spend centuries admiring each part of her body and her resistance to his advances (i.e., coyness) would not discourage him. In the second stanza, he laments how short human life is. Once life is over, the speaker contends, the opportunity to enjoy one another is gone, as no one embraces in death. In the last stanza, the speaker urges the woman to requite his efforts, and argues that in loving one another with passion they will both make the most of the brief time they have to live.--WIKI.

Comments

Popular posts from this blog