உன்னோடு நின்றவர்கள் தலையைத் தொங்கவிட்டு ,அனைத்திற்கும்
உன்னையே காரணமாக்கும்போது உன்னால் தலை நிமிர்ந்து நிற்க முடியுமானால்
அனைவரும் உன்னைச் சந்தேகிக்கையில் உன்னால் உன்னைநம்பமுடியுமானால்
அதே சமயம் அவர்கள் அவநம்பிக்கையையும் சற்றே புரிய முடியுமானால்
உன்னால் காத்திருக்கமுடிந்து அதனால் களைப்படைய முடியாமல் இருந்தால்
உன்னைப் பற்றி பொய்கள் மலிய - நீ அப்போதும் பொய்களில் ஈடுபடாமல் இருந்தால்
உன்மீது வெ...றுப்பு உமிழப்பட்டும் நீ வெறுப்புக்கிடம்கொடாமல் இருந்தால்
நல்லவனாகக் காட்டிக்கொள்ளாமல் அறிவாளிபோல் பேசாமல் இருந்தால்

உன்னால் கனவு காணமுடிந்தால் அனால் கனவே உன்னை ஆளாமலிருந்தால்
நீ சிந்திக்க முடிந்தாலும் சிந்தனைகளே இலக்காகக் கொள்ளாமலிருந்தால்
வெற்றி தோல்வியைச் சந்திக்கையில் அம்மோசடிப்பேர்வழிகளைச் சமமாக எதிர்கொண்டால்
பேசிய உண்மை போக்கிரிகளால் திரிக்கப்பட்டு முட்டாள்கள் பொறியில் சிக்கக் கதைக்கப்பட்டால்
வாழ்வுகொடுத்த லட்சியங்கள் சிதறுபட்டுத் துண்டு துண்டாக நீ வைத்துக்கொண்டு தொடங்க நேரிட்டால்
நீ ஈட்டிய வெற்றிகளைப் பணயம் வைத்து இழந்து மீண்டும் துவங்க நேர்ந்தால்
அந்த சமயத்திலும் உன் இழப்புகளை பற்றி மூச்சு விடாமல் இருக்க முடிந்தால்
எல்லாம் போனபின்பும் 'விடாதே பிடி' என்ற லட்சியமே உன்னிடம் எஞ்சியிருந்தால்

நீ கும்பலுடன் பேசிப்பழகினாலும் உண்குண நலன்கள் பாதுகாக்கமுடியுமென்றால்
அரசர்களுடன் நடந்தாலும் சாமானியர்களின் உறவை இழக்காமலிருந்தால்
பகைவர்கள் நண்பர்கள் சொற்கள் உன்னைப் புண்படுத்த முடியாமலிருந்தால்
அனைவருடன் நெருங்கிப்பழகினாலும் எவருடனும் அதிகம் பழகாமலிருந்தால்
மன்னிக்காத இயல்புடைய காலத்தின் ஒருமணித்துளியையும்
சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் சக்தி உனக்கிருந்தால்
உன்னுடையது இந்தப்பூமி என் மகனே ! இதனுள் உறையும் அனைத்தும் !
அதுமட்டுமல்லவே-நீ தான் மனிதன்!

Based on ' IF' by Rudyard Kipling... .

Comments

Popular posts from this blog