ஹாம்லெட் -அங்கம்-3, காட்சி 2,
ஹாம்லெட் சிலநடிகர்களுடன் வருகிறார்.
ஹாம்லெட்:நான் கற்றுக் கொடுத்தவாறே வசனங்களை ஓசை நயத்துடனும் ,மெல்லவே உச்சரியுங்கள்.சில நடிகர்களை போன்று சொற்களை :மிகையாகப் பேசினால் , எவனாவது செய்தி அறிவிப்பவனைக் கூட்டிவந்து பேச வைப்பேன்!
கைகளினால் அளவுக்கு அதிகமாக சைகைகளைச் செய்யாதீர்கள் - ஓரிரண்டு மட்டுமே--இதுபோல்.உணர்ச்சிக் குவியலாக மேடையில் நடிக்க முற்படுகையில் ,உணர்ச்சிகளைக் கட்டுக்குள்ளும் -அடக்கியும் வெளிப்படுத்துங்கள்.புயலைப்போல் வசனத்தை வரிவரியாகக்கொட்டிக் கேட்பவர்களது செவிப்பறைகளைக் கிழித்து ,விசிலடிக்கும் கூட்டத்திற்கு வெறியூட்டும்' டோபா' நடிகர்களை நான் வெறுக்கிறேன்- அந்த ரசிகர்கள் எல்லாம் காட்டுக்கூச்சல்களையும், அதீதக்கூத்துக் காட்சிகளையுமே ரசிக்கவல்லவர்கள்.அவையெல்லாம் அன்று ஜெராட் அரசன் கூக்குரலிட்டதுபோல் தான் இருக்கும்.தயைசெய்து அவைகளைத் தவிர்த்துவிடுங்கள்.
நடிகர் 1 ; அப்படியே அய்யா!
ஹாம்லெட் :அதற்காக ரொம்ப அடக்கியும் நடிப்பைக் காட்டவேண்டாம்.உங்கள் நற்சிந்தனை இதில் நன்கு வழி நடத்தட்டும்.செயலைச் சொற்களுடனும் ,சொற்களை செயல்களுடன் நன்கு பொருத்துங்கள்.எப்போதும் இயற்கையாக நடியுங்கள்.மிகைப்படுத்தல் மேடைக்கு உதவாது.அங்கெ யதார்த்தத்தை வெளிப்படுத்துவதே முக்கியமானது.நற்குணத்தையும் ,கொடுங்குணத்தையும் கண்ணாடிபோல் சரியாகக் காட்டவேண்டும்.-இதை மோசமாகக் கையாண்டால் ,ஒன்றும் தெரியாதோர் நகைக்கவும் -உண்மை ரசிகர்களை முகம் சுளிக்கவும் வைக்கும்.-ரசனைமிக்கோர்களையே நடிகர்கள் மகிழ்விக்கவேண்டும்

Comments

Popular posts from this blog