ஜூலியட் மேலே ஜன்னல் அருகேத் தோன்றுகிறாள்-
ஆ-மெல்ல மெல்ல-அந்த ஜன்னலருகே என்ன ஒளி வெள்ளம் பார்க்கிறேன்!
ஓ அதுவே கீழ்த்திசை-ஜூலியட் தான் சூரியன்!
உதித்துவிடு ஆதவனே-கொன்றுவிடு நிலவை,
ஏற்கனவே நிலா நோயுற்று-வெளுத்து-வருத்தத்தில்-
ஏனெனில் நீயோ ஜூலியட் ,அவளது தாதி-ஆனால்
அவளைவிடவும் அழகு மிக்கவள்-ஆகவேதான் உன் மீது
பொறாமை அவளுக்கு!
அவளது நெடுநாள் கன்னித்தன்மையே அவளை இவ்வாறு
மெலியவைத்தும் உடல்நலம் குன்றியும் காட்டுகிறது-
மூடர்களூக்கு உரித்தான குணம் அது!
தூர அதை எறிந்துவிடு-
ஆஹா-என் கண்ணே!-என் காதலியே!
அவளுக்கு மட்டும் நான் இங்கிருப்பது புலப்படுமானால்!
அவள் பேசுகிறாள்-எனினும் ஒன்றும் சொல்லாதிருக்கிறாளே!
அதனாலென்ன?
அவளது கண்கள்தான் பேசுகின்றனவே!-நான் பதிலளிப்பேன்-
என் தைரியத்திற்கு என்ன குறை?
என்னிடம் அவள் பேசவில்லையே-
வானத்தின் இரு ஒளிமிக்க விண்மீன்கள்
ஏதோ பணியில் சிக்கி-ஜூலியட்டின் கண்களை
சற்றே வான வீதியில் உலவ வைத்தார்களோ-அவைகள் திரும்பிவரும்வரை!
விண்மீன்கள் அவள் முகத்திலும்- அவளது கண்கள் வானத்திலும் இருந்தாலென்ன?
அவளது கன்னங்களின் செவ்வண்ணம் அவ்விண்மீன்களை வெட்கவைக்கும்-
சூரிய ஒளி சிறுவிளக்கைச் செய்வதுபோல்-
காற்றுவெளியிடை ஒளியோடையாக உலாவரும் அவளது கண்களது வனப்போ
இரவன்று இப்போதெனப் பறவைகளையும் இசைக்கவைக்கும்!
எப்படி அவள் கன்னத்தைக் கையில்தாங்கி நிற்கிறாள்!
அந்தக் கரத்தில் நான் கையுறையாகஇருந்து அவளது
கன்னத்தை தழுவிடுவேனே!

(தனக்குள்)-அவள் பேசுகிறாள்!ஓ! பேசு மீண்டும் -அழகுத் தேவதையே!
இன்றிரவு நீ தான் எப்படி ஒளிர்கிறாய்-சொர்க்கத்து அரம்பையர்போல்!
எனக்குமேல் நின்று மின்னுகிறாய்-இறக்கைகொண்ட கன்னிகையாய்-
கீழே மனிதர்கள் வாய் பிளந்து வானத் தாரகை ஒன்று மேகக்கூட்டத்தினுள்
நடந்து -மிதந்து வருவதைப் பார்ப்பதுபோல்!

based on Shakespeare's Romeo and Juliet -Balcony scene.
Comments
Post a Comment