மலைகள்-பள்ளத்தாக்குகள் மேல் அலைந்து திரிகிறேன்
தனிமையில் மேகத்தைப்போல்-
அப்போதுதான் பொன்னிற டாபோடில்ல்ஸ் மலர்களை
கொத்து கொத்தாய் பார்த்தேன்-
ஏரிக்கரைக்கருகே- மரங்களடியில்
அசைந்து அசைந்து அவை ஆடிக்கொண்டிருந்தன!
பால்வீதியில் கண்கள் சிமிட்டி
என்றுமே ஒளிரும் விண்மீன்களை போல்
டாபோடில்ஸ் பரந்து படர்ந்து கிடந்தன-
ஏரியின் வளைகுடா ஓரத்தில் -
அடடா-பத்தாயிரம் மலர்களைக் கண்டேன்-
தத்தம் தலைகளை குதித்துக் கூத்தாடின!
ஏரியின் அலைகளும் ஆடின
-ஆயினும் மலர்கள் ஆட்டமோ
மேலும் அழகுடன் இருந்தன
எந்தக் கவி இதுபோன்ற மலர்களின்
கூட்டத்தில் களித்திருக்கமாட்டான்?
பார்த்தேன் உற்று உற்றுப் பார்த்தேன்-சிறு சிந்தனை-
இக்காட்சி எனக்கு என்ன இன்பம் கொடுத்தது?
பலமுறை என் சாய்வு நாற்காலியில் ஓய்வெடுக்கையில்
வெறுமையான-அல்லது வருந்திய மனநிலையில்-
அம்மலர்கள் பளீரென அகக்கண்ணில் பளிச்சிட்டன!
அதுவல்லவா தனிமையின் பேரினிமை எனப்புரிந்தது
இதயம் மகிழ்ச்சியில் ததும்பித் திளைத்தது-
மலர்களோடு அசைந்து ஆடி இன்புற்றது!
From Wordsworth's Daffodils..

Comments

Popular posts from this blog