கடவுள் மர்மமான வழிகளில் நடக்கிறார்
தனது அற்புதங்களை நிகழ்த்தவே
தனது காலடிகளைக் கடலின்மீது பதிக்கிறார்
பெரும் புயலின்மீதும் சவாரி செய்கிறார்
அளக்கமுடியா சுரங்கங்களின் அடியினில் ஆழ்ந்து
தோற்கவே முடியா தனது தேர்ச்சிபெற்ற திறனுடன்
தனது ஒளிமிகுத் திட்டங்களை சேமிக்கும் வல்லவர்
தன் ஊடுருவமுடியா சங்கல்பத்தை முடிக்கிறார்
கடவுளுக்கு பயப்படும் முனிவர்காள், புதுதைரியம் பெறுக
நீவிர் நடுங்கும் மேகமெல்லாம் உண்மையில்
அவர்கருணை பெற்றதே,அதுவுமன்றி அவர்தாம்
அவைகளை உன்தலைமீது விழும் ஆசிகளாய் மாற்றுவார்
மதிப்பிடாதீர் ப்ரபுவைத் தங்கள் பலவீனமான குணத்துடன்
நம்புங்கள் அவரை அவரது கருணைக்காக
முறைத்துப்பார்ப்பதுபோல் இருக்கும் மகா சக்தி
அவர் மறைத்துள்ளார் தனது சிரிக்கும் முகத்தை
அவர்தம் குறிக்கோள் விரைவில் பலன் தரும்
ஒவ்வொருமணித்துளியிலும் வெளிப்படும்
மொட்டாக இருப்பது கசப்பாகத்தெரியும்
ஆனால் இனிமையானதுதான் எந்த மலரும்
கண்மூடித்தன நம்பிக்கை தவறுக்கு இடமாகும்
அவர்தம் செயலை ஆராய்வது வீணானது
கடவுளே அவரது பொருளை விளங்குபவர்
அது என்றென்றும் எளிமை மட்டும் உடையது
Based on William Cowper's Light Shining out of Darkness.

Comments

Popular posts from this blog