ஓம் சாய்ராம் ...இன்று முதல் தமிழில் எழுத ஆ ரம்பிக்கிறேன் ,,,,
ஜூலியஸ் சீசர் ----அங்கம் 2 ,காட்சி 1 : ப்ருடஸ்: சீசரைக் கொல்லுதல் சரியே.இதற்கானத் தனிப்பட்டக் காரணம் எனக்கு ஏதுமில்லை-ஆயினும் பொதுநலன் கருதி...அவன் முடி சூட்டிக்கொள்ள விரும்புகிறான்.எப்படியெல்லாம் அவன் குணம் மாறும் என்பதே என் கேள்வி.கோடைக்காலச் சூரிய சூட்டில்தான் பாம்புக்குட்டிகள் வெளியே வரும்--நாம்தான் பார்த்து நடக்கவேண்டும்.அவன் விருப்பத்திற்கு விட்டுவிட்டால் தீமையே அவன் செய்வான்.அதிகாரத்திற்குச் செல்லும் ஆட்சியாளர்கள் பலவீனமே-கருணையும் இரக்கமும் இல்லாமல்- மாறிவிடுவதுதான் .சீசரைப்பற்றிச் சொல்லவேண்டுமெனில்,அவன் என்றுமே அறிவை உணர்ச்சிகளுக்குமேலாக வைத்திருந்ததில்லை.வழக்கமாகப் பார்ப்பதுதான் இது. ஏணியைப்போல் அடங்கி இருப்பர் மேலே செல்லும்வரை-அதன்பின் தன்னை உயர்த்தியவர்களுக்கு முதுகுப்புறத்தைக்காட்டி புறந்தள்ளுவரே.. அவர்கள் மென்மேலும் உயரத்திற்குச் செல்வர்.,அங்கிருந்து மேகக்கூட்டங்களில் உலாவி,கடந்துவந்த படிகளை உதைத்துவிட்டு ,மேலும் முன்னேறிச் செல்வர்.சீஸரும் அப்படித்தான்.எனவே இதுவே அவனைத் தடுப்பதற்கானத் தருணம்.என்னுடைய பிரச்சினை அவனது வருங்காலமே-இப்படித்தான் நான் சிந்திக்கிறேன்: த...
Comments
Post a Comment