JK பாணியில் சொல்ல வேண்டுமானால் 'என் காலில் நகம் முளைத்த காலம் தொட்டே' எங்கள் வீட்டில் ரமணரும், மஹாபெரியவரும்-மிக அருமையான பெரிய சைஸ் படங்களாக உள்ளதைக் கொள்ளை கொள்ள ஆரம்பித்தனர்.அவர்கள் கண்களை பார்த்துக்கொண்ட இன்புறுவதில் நாட்டம் மிகுந்தவனாய் இருந்தேன். ரமணரின் சொக்கப்ப நாய்க்கர் தெரு-மீனாட்சி கோயிலின் தெற்கு கோபுர வாயில் எதிரில்--'50 களின் பிற்பகுதியிலிருந்தே நாங்கள் சென்று வரும் வழிபாட்டுத் தலமாக இருந்தது.அங்கேதான் அவர் தனது 17 ம் வயதில் ' நான் யார்?' எனக் கேட்டு அதன் விடையையும் கிடைக்கப்பட்டுத் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டுச் சென்றார்.மிக நீண்ட-ஆனால் சிறிய அக்காலத்து அக்ரஹார வீடு ஒன்றைக் கற்பனை செய்தால் அந்த அழகிய வீடு மனதில் உருவாகும்.இன்று ரமண கேந்த்ரா பக்தர்களின் முயற்சியில் அழகிய கட்டிடமாகப் பொலிகிறது.ரமணாஸ்ரமத்தின் கட்டுப் பாட்டில் இயங்குகிறது.ரமண பஜன் மற்றும் ரமணர் ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.ரமணரின் வரலாற்று முக்கிய இடம் என்றவகையில் மதுரைக் காரர்களுக்கு மிகவும் பழக்கமான இடமாக இந்த இடத்தைக் குறிப்பிட முடியாது,ஆனால் ரமண பக்தர்களுக்குத் தெரியும் இதன் மகிமை.மந்திரம் வேண்டாம்-யோகா வேண்டாம்-ரமணரின் அழகியபடம் முன் அமர்ந்து வெறுமே உட்கார்ந்திருந்தாலே-அந்த இடத்தின் ஆன்மிக அலைகள் நம்மை சாந்தப்ப படுத்தும்.மேலே சென்று அவர் படுத்து, மூச்சை அடைத்து ' நான் யார்' விசாரணையில் ஈடுபட்டு வெற்றியும்பெற்ற இடத்தில அமர்ந்து நாம்சற்றே நம்மைக் கவனித்தாலும் அலை அலையாய் பெருகிவரும் எண்ணங்கள் 'ஸ்டில்'ஆகும் விந்தை வித்யாசமானதே.'
ரமணரை வழிபடுவது நம்மை நம்மிடமே கொண்டு செல்லும் அருமையான வழி.உலகம் பற்றியோ-உறவு பற்றியோ-போராடவோ-அலட்டிக்கொள்ளவோ தேவையில்லை-எதன்மீதும் வெறுப்போ பகைமையோ கொள்ளாமல் -எல்லா பணிகளையும் செய்துகொண்டே-ஆத்ம விசாரத்தில் அமிழ்வது சுலபமே.ஆலய வழிபாடோ அல்லது கடுமையான யோகப் பயிற்சியோ தேவையில்லை-'தன்னை' உணர்வதற்கு என்பது அரிய வாய்ப்பல்லவா? ஒருமுறை தீவிர இந்து ஒருவரை-என் நண்பர்-சந்திதேன். அவரிடம் சொன்னேன்-'சரியான இடத்துக்கு வந்துவிட்டீர்கள்' என்று.ஆனால் மீண்டும் தீவிரமாகச் சென்று தனது உயிரிழந்தார்.
போராட்டத்திற்கு ரமணர் செவி சாய்க்கமாட்டார்.முழுமையான விடுதலைக்கு வித்திட்டு நம்மைக் கரை சேர்க்கும் மஹான் அவர். இப்போதேபிறவித் தளையில் இருந்து விடுபடும் எண்ணமுடையோர் இங்கே வரலாம்.அவர் அருளாசி பெறலாம்.இந்த எளிய பயிற்சியை எங்கும் நிகழ்த்தலாம்-JK இடம் இவரது நூல் ஒன்றைக் கொடுத்தேன்-ஒரேமணியில் படித்தார்-பாராட்டினார்-"நம்மை இவர் பிடித்துவிடுவார் என்பதால்தான் விலகியிருக்கிறேன்' என்றார் இடிச் சிரிப்புடன். அனால் அவரது கடைசி இரண்டு ஆண்டுகள் அவர் ஒருவித சமாதி நிலையில் இருந்ததாகவே எனக்குப் புலப்படும்.' 'திருவண்ணாமலை கிரிவலம் போனீர்களா?' என்று கேட்கவும் தவறியதில்லை! மதுரைக்குச் சென்றால் சொக்கப்பர் தெருவுக்குச் சென்று ரமண மந்திரம்' சென்று வாருங்கள்-'தன்னை' வென்று வாருங்கள்! Madurai O Madurai!-19.

Comments

Popular posts from this blog