.  ஏனோ அன்றும் இன்றும்கூட நம் மதுரையில் நூலகங்கள் நினைத்த அளவு இல்லையோ என்று தோன்றுகிறது.படிக்கிறவர்கள் படிக்கிறார்கள் -புத்தகத்த திருவிழாக்களுக்கும் பஞ்சமில்லை -ஆனால் மனதெல்லாம் மத்தாப்பாய் விகாசிக்கும் கதைகள் படிக்கும் இளைய தலைமுறையினர் எங்கே?அறுபதுகளில் ஷெனாய்நகர் மூன்றாவது தெருவில் நூலகக் கிளையில் நூல்கள் மணிக்கணக்கில் படிப்போம்-சங்கர்லால் துப்பறிவிதிலிருந்து சாண்டியல்னின் கடல்புறா வரை என்னைப் போன்ற பையன்கள் -இளைஞர்கள் நிறைய பேர் நெஞ்செல்லாம் கன க்கும் இதயங்களுடன்-வீட்டுக்கும் சகோதரியாருக்கும் கொண்டு செல்வோம்-பின்னர் கல்லூரி நூலகங்கள் -எம் கே யு லைப்ரரி எல்லாம் கைகொடுத்தது. சிம்மக்கலில்  உள்ள  மத்திய நூலகமும்கூட. நூலகமும் படிப்பதும் இயக்கமாகிவிடும் என்றும் நம்பினோம்-எத்தனைபேரைப் படிக்கவைத்தோம் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
ஏன் ஆசிரியர்கள் மட்டுமே தான் இதற்கும் காரணமா என்றால் -அது அப்படிதான்-அவர்களில் ஒருவனாக இருப்பதனால் -சுயவிமர்சனத்திற்கு அவர்களையே முதலில் எடுத்துக்கொள்வேன்-அப்புறம் பெற்றோர்களும்தான் .ஒருமுறை ஹார்டியின் டிரம்பெட்  மேஜர் நாவலை வீட்டுக்கு கொண்டுவந்தபோது-எனது தந்தையார் அதை எடுத்துக் படித்தார்கள் (ஐந்தாவது முறையாக!)-அவருக்கே அந்தக் காலத்தில் பிடித்த புத்தகமாம்.வீட்டுச் சூழலும் வாசிப்புப் பழக்கத்தை அதிகப் படுத்தும் என்பதில் ஐயமில்லை.ஆராய்ச்சியோடு நின்றுவிடாமல் மேலைநாட்டு ஆசிரியர்கள் படைப்பிலக்கியம்  நிலை  நமது நாட்டிலும் வர வேண்டும் ஆசிரியர்கள் இன்று எழுதலாமே-கருத்துக்களை நன்கு சமூகத்துக்குப் பரிந்துரைக்கலாம்-முகநூலிலிருதே துவங்கலாம்.படித்ததை பிடித்ததை எழுதட்டும்.மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களே தனித்தனி வாசகர் வட்டங்களையே நடத்தலாம்.அன்று நாங்கள் ymca வாசகர் வட்டம் வைத்திருந்தோம்.மாதாமாதம் புத்தகங்களை விவாதிப்போம்.நவபட்கான தெருவில் பாரதி விழாவில் துவங்கும் வாசிப்பு மற்றும் இலக்கியக் கூட்டங்கள் பொங்கல் வரையில் பல்வேறு எழுத்தாளர்களைப் பார்க்கும் வாய்ப்பையும் கொடுத்தன.தினத்தந்தியில்கூட ஆண்டிப் பண்டாரம் நய்யாண்டி கார்டூனும் ,சிந்துபாத் 'கன்னித்தீவும் எல்லோரையும் பேசவைத்தன.கல்கியின் வீர விஜயனும்-அம்புலிமாமா வின் அற்புதமான கதைகள் மனதை மயக்கின-டி வி வந்தது-நூல்கள் படிப்பது குறைய ஆரம்பித்தது.ஆயினும் படிப்போர் எண்ணிக்கையும் நூல்கள் விற்பனையும் அதிகரித்திருப்பதாகவே சொல்கிறார்கள்.ஒருவேளை நகரெங்கும் நல்ல நூலகங்கள் நாம் முயற்சி எடுத்து அமைக்க நேரிட்டால் மீண்டும் மாணவ சமுதாயம் படிக்கும் நிலை வரும்.இங்கே சான் அன்டோனியோவில் தமிழ் ஆர்வலர்கள் மாதா மாதம் கூடி 'தமிழ் வளர்க்கிறார்கள் இதில் பங்கேற்கும் இளைஞ்ர்கள் திறன் பிரமிக்க வைக்கிறது சிறிய அளவிலாவது அங்கங்கே நம் நாட்டிலும் இத்தகைய நிகழ்வுகள் வரவேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதுகிறேன்.

Comments

Popular posts from this blog