ஏறக்குறைய 40 ஆண்டுகள் மதுரையில் வாழ்ந்தது --இன்னும் அங்கே வசிப்பதுபோல் இருக்கிறது.'மதுரையைச் சுற்றிய கழுதையும் போகாது' என்பது ஏதோ  பொறாமைபிடித்த ஜீவன் சொன்னது. 'குதிரை' என்றுதான் அது இருக்கவேண்டும்.எந்தஊரிலும் சிறப்புகள் உண்டு-மனம் பக்குவப் பட்டுவிட்டால்.   மதுரையில் ஆலய தரிசனங்கள் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.சற்றே வித்தியாசமாக-- நான் படித்த சில நூல்களும் என்னைச் சுற்றிய மதுரைக் காட்சிகளுடன் விவரிக்க எண்ணுகிறேன். மனம் விசித்திரமானதே. திரைப்படமாக பலவும். பின்னணி இசையோடு சிலவும் எல்லாநேரங்களிலும் மனம் விளையாடிக் கொண்டே இருக்கிறது.ரமண மகரிஷி குறிப்பிட்டதுபோல் -"நடராஜப் பெருமானது தூக்கியாடும் திருவடிக் கருணைச்  சிறப்பின் தத்துவமானது தமது அடியார்களை ஆன்ம விசாரமாகிய நடனத்தின் மூலமாக இதயம் அடையும்படிக் கொஞ்சி விளையாடும் அருளாட்டமே ஆகும்".எனது தந்தையாரின் நீண்ட நாள் நண்பர்  ஒருவரது புதல்வர் பரிக்ஷை எழுத மதுரைக்கு வந்திருந்தார்.அவர் பார்வையற்றவர்.ஆறு நாட்கள் மதுரைக் கல்லூரிக்கு அவரை எக்ஸாம்   எழுதவும் திரும்பிக் கூட்டி வரும் பணி  எனக்குக் கிடைத்தது.அப்போதுதான் ஆங்கில நாவல்கள் படிக்கத்தொடங்கிய நாட்கள் -சோமர்செட் மாம் எழுதிய மூன் அண்ட் சிக்ஸ் பென்ஸ் என்ற உன்னதமான நூலை அந்த சமயம் படிக்கத்துவங்கியிருந்தேன்.

அந்த நண்பரைப் பரிட்சை எழுத (ஸ்க்ரைப்  வுடன்) ஹாலுக்குள் அனுப்பிவிட்டு-நான் கல்லூரியின் கிரௌண்ட்க்கு வந்து சிமெண்ட் காலேரியில் அமர்ந்து எனது புத்தகத்தை வாசிக்க ஆரம்பிப்பேன்.
கடுமையான கொடையாயினும்-மர நிழலும் சில்லென்ற காற்றும் அருமையான சூழலைக் கொடுத்தது.

I really felt something of the emotion that had caught him. I was strangely impressed. It was as though I were suddenly transported into a world in which the values were changed. I stood by, at a loss, like a stranger in a land where the reactions of man to familiar things are all different from those he has known. Stroeve tried to talk to me about the picture, but he was incoherent, and I had to guess at what he meant. Strickland had burst the bonds that hitherto had held him. He had found, not himself, as the phrase goes, but a new soul with unsuspected powers. It was not only the bold simplification of the drawing which showed so rich and so singular a personality; it was not only the painting, though the flesh was painted with a passionate sensuality which had in it something miraculous; it was not only the solidity, so that you felt extraordinarily the weight of the body; there was also a spirituality, troubling and new, which led the imagination along unsuspected ways, and suggested dim empty spaces, lit only by the eternal stars, where the soul, all naked, adventured fearful to the discovery of new mysteries.

படிக்கப் படிக்க எனக்குத்தெரியாத வாழ்க்கையின் பல நிகழ்வுகளும் ஏதேதோ புதிய உணர்வுகளும் என்னைப்  புத்தகப் புழுவாகவே மாற்றிவிட்டது.மீண்டும் மீண்டும் படிக்கவும் சில பகுதிகள் வாசிப்பு ரசனையைக் கூட்டியது.கதையின் நாயகன் வசதிபடைத்த லண்டன் வாழ்க்கையை விட்டுவிட்டு மிகுந்த திருப்தி தரும் ஆனால் வறிய ஓவியர் வாழ்க்கையைப் பாரிசுக்கு சென்று வாழ்ந்து மரிக்கிறான் -மனைவி குழந்தைகள் எல்லாம் பணயம்  வைத்து.கதையைவிடவும் கதாசிரியர் பலருடைய வியு பாயிண்டில் தத்துவார்த்தமாக வாழ்க்கையின் பற்பல பரிமாணங்களைப்  புரியவைக்க முயல்வது எனக்கு வியப்பை ஊட்டியது .கலை,இலக்கியம் போன்ற சொற்களும் வாழ்க்கைக்கும் உள்ள தொடர்புகளும் மதுரை மண்ணில்தான் ,மதுரைக் காற்றைச் சுவாசித்துக் கொண்டு தான்  என்னுள் விகாசிக்கத் தொடங்கியது.
அதோ அந்த மைதான மரங்களும் ,காற்றும், எதிரே சிறிது தூரத்தில் தெரியும் பெருமாள் கோயில் கோபுரமும் இன்றும் சற்றே உட்கார்ந்து இளைப்பாறிச் செல்ல அழைக்கிறது. புத்தகங்களை வெறும் வெளிகளிலும் -கடல் மற்றும் ஆற்று ஓரங்களிலும்-மைதான நிழல்களிலும்-வீட்டு மொட்டை மாடிகளிலும் படிக்கின்ற அற்புத அனுபவங்கள் அதன்பின் நான் ஏற்படுத்திக்கொண்டேன்.காந்தி நினைவகம்,ராஜாஜி பார்க்,அமெரிக்கன் கல்லூரி மைதானம், மெடிக்கல் கல்லூரி ஆலமர மைதானம்  -இவை எல்லாம் கதைகள் படிக்கும் இடமாயிற்று என்போல் ஓடித்திரியும் எண்ணற்ற வாலிபர்களுக்கு!

Comments

Popular posts from this blog