அந்தக் காலம் முதல் இன்றுவரை நான் ரசிக்கும் சிலை -மதுரையில்-கட்டபொம்மன் சிலையே!அதன் கம்பீரம் எனக்கு மிகவும் பிடிக்கும்-யு சி ஹை ஸ்கூலுக்கு முன்-பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகே-வாளொடும் வனப்போடும் காட்சி அளிக்கும் கட்டபொம்மன் என்றும் போற்றுதற்கு உரியவர்.இப்போதெல்லாம் சிலைகள் இல்லாத ஊரும் உண்டா என்ன?மதுரையில் எப்போதுமே சரியான இடங்களில் சிலைகள் எழும்பிவிடும்.மரியாதை வரவழைக்கும் தேவர் சிலை கோரிப்பாளையத்திலும், பெரியார் சிலையும் அண்ணா சிலையும், எம் ஜி யார் சிலைகளும் எங்கெங்கு காணினும், காமராசர் சிலை விளக்குத்தூணிலும், ஊரின் நன்றி உணர்ச்சியை வெளிக்காட்டும் விதமாக பார்க்கும் இடங்களிலெல்லாம் நிறைந்து உள்ளன.
.ஒரு பஸ்ட் சைஸ் காந்தி சிலை வெகு நாட்களாகவே மீனாட்சி கோயில் முன் நான் பார்த்து வியந்ததுண்டு.சிம்மக் கல்லும் யானைக்கல்லும் அந்தந்த இடங்களுக்குப் பெயர் சூட்டும் விதத்திலேயே அமைந்துள்ளன.நேதாஜி சிலையும் ஜான்சி ராணி சிலையும் தான் எவ்வளவு அற்புதமாக திண்டுக்கல் சாலை துவக்கத்தில் எழும்பியுள்ளன.இவைகளெல்லாம் போராடுவர்களுக்கு வசதியாக -அவர்கள் கூடிக் கூட்டம் நடத்தவும் ஆர்ப்பாட்டம் செய்ய உந்து சக்தியாகவும் விளங்குவன.சிவாஜிக்கு சிலை இல்லையே என்றே நினைத்திருக்கிறேன்-நடிகர் திலகத்தைத் தான் -Madura கோட்ஸ் முன் பாலத்திற்குக்கீழ் அவரையும் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.கண்ணகி மதுரைக்குத் தொடர்பு உடைய காவிய நாயகி-அவர்களுக்கு எங்கும் சிலை இருப்பதாக என் நினைவில் இல்லை
.பாரதியாருக்கு வெண்மை நிறப்பளிங்கு-மார்பளவுதான்-சேதுபதி ஹை ஸ்கூலில் பார்த்து பரவசம் அடைந்திருக்கிறேன்.மன்னர் திருமலைக்குத் தான் கோவில்களுள் என்ன அருமையான சிலை அமைப்புகள்! எங்கள் மன்னர் கல்லூரியிலும் மன்னர் பிரான் அற்புதமாகக் குடிகொண்டுள்ளார்.ராஜாஜி பார்க்கில் நான் பார்த்த அழகு முருகன் அங்கே கோவிலே கட்டி ,பக்தகோடிகளை அருள்பாலித்துவருகிறார்.தேசத்தந்தைக்குத் தான் காந்தி நினைவகத்தில் சிலை நிறுவியிருக்கிறதே.நேருவுக்கு .இந்திராவுக்கு,ராஜீவுக்கு எல்லாம் கதர் சட்டை நண்பர்கள் சிலை கட்டாமல் இருப்பார்கள்?.முக்கிய இடங்களில் அவை இல்லையே என்று வருந்துவது மடமையே.
ஏராளமான சிலைகள் வந்து சிலைகள் வைப்பதையே மக்களுக்கும் சலிப்பு தோன்ற ஆரம்பித்துவிட்டன போலும்!இருப்பினும் இன்னும் ஓர் நூறாண்டுகள் ஆகும் நம் மக்களுக்கு சிலை வைக்கும் மோகம் தீர.-ஏனெனில் இன்னும் பலருக்கு இன்னார் இன்னாருக்கு சிலை வைக்கவில்லையே என்ற கோபம் இன்னும் இருக்கிறது.நல்லமுறையில் அழகிய சிற்பமாக மக்களுக்கு இடைஞ்சல் இல்லாத இடத்தில் சிலை வைக்கும் கலையை நாம் கற்கவேண்டும் என்ற ஆதங்கம் எழுவதில் தவறில்லையே ! Madurai O Madurai-18.
Comments
Post a Comment