நான் எழுதுவது எல்லாம் நலமே பயக்கும்.ஏனெனில் நம்பிக்கையுடன் வாழ்வதால் என் உள்ளத்திலிருந்து எழும் சொற்கள் நம்பிக்கையே விதைக்கும்.
சீமாட்டி மாக்பத் நுழைகிறாள் கையில் கடிதத்தை வாசித்துக்கொண்டு- சீமாட்டி மாக்பெத் :"சூனியக்காரிகள் நான் யுத்தத்தில் வெற்றிபெற்றபின் என்னைச் சந்தித்தன -அப்போதிலிருந்துதான் அவைகளுக்கு இயற்கைக்கு மீறிய அதீத உணர்வு உண்டு என்று புரிந்துகொண்டேன்-அவைகளிடம் மேன்மேலும் கேள்விகள் கேட்டு துளைத்தேன்-அவை காற்றில் மறைந்துவிட்டன!வியப்பிலிருந்த என்னை மன்னர் அனுப்பிய ஏவலாளிகள் சந்தித்து-" வாழ்க காடர் பிரபு!' என்று வாழ்த்தினர்ஏற்கனவே சூனியக்காரிகள் உரைத்தவாறு! அவைகள் என்னை " வருங்கால அரசன்!' என் று கூப்பிட்டதும் நினைவுக்கு வந்தது.இந்நற்செய்தியை உன்னுடன்-என் அன்பிற்குரிய மனைவியுடன் சொல்லி- அதன்மூலம் ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்ற காலத்தின் மேன்மை குறித்து உணரவுமே இக்கடிதம் . இந்த செய்தியை இதயத்தில் ரகசியமாய் வைத்திரு-விரைவில் நேரில் சந்திக்கிறேன்" கடிதத்திலிருந்து முகத்தை விலக்கி-" நீங்கள் இப்போது கிளாமிஸ் மற்றும் காடருக்கும் பிரபுவாகிவிட்டீர்கள்-மன்னராகவும் ஆளப்போகிறீர்கள்!ஆயினும் தங்கள் உண்மை இயல்பு குறித்தே அச்சமேற்படுகிறது-நீங்களோ மனித அன்பின் ...
Comments
Post a Comment