சிறையென்செய்யும்?-2.

அடுத்தமுறை பத்தே நாட்கள் தான். அதை எதிநோக்கி வீட்டையும் தயார் செய்துவிட்டுக் களமிறங்கி எங்கள் போராட்டத்தின் இறுதிக்கட்டமாக சிறைக்குள் சென்றோம்.ஆசிரியர்கள் போராடலாமா என்றெல்லாம் கேள்விக் கண்டனங்கள் -எதிர்ப்பு மிக அதிகமாகவே இருந்தது.  ஒவ்வொரு கல்லுரிப் போராட்டத்தைப் படித்தாலே இன்று எல்லாவற்றையும் மாற்ற ஆர்வம் கொள்ளும் இளைய சமூகத்தினர் வியப்படைவர்.ஊதிய உயர்வு ,பணிப் பாதுகாப்பு இவைகளைவிட  மோசமான பிற்போக்குக்  குணம்-பல -கல்லூரி நடத்துவோரிடம்  மலிந்திருந்தது.-ஆசிரியர்களை அடிமைகள்போல் நடத்தும் போக்கு.அதுவும் பல ஜாதிகளின் பெயரைச் சொல்லியே அமைந்திருந்தன-பட்டியலிட்டுப் பாருங்கள்-பல கல்லூரிகளும் ஜாதிப்பேரை வைத்தே இயங்கி வரும் இன்றுவ ! ரை! இதில் 'ஜாதி இல்லை, மதம் இல்லை, இனம் இல்லை, மொழி இல்லை-கொள்கை உண்டு கோஷம் உண்டு' என்று சொல்லியே நாங்கள் கொக்கரித்துக்கொண்டு கோஷம் போடுவோம்.அதையெல்லாம் நம்பினோம்- நிச்சயம் மாற்றம் வரும் என்று கனவெல்லாம் கண்டோம். 'இனி என்ன செய்யவேண்டும்' என்று திட்டங்கள் தீட்டினோம்- சிறைச்சாலைகளில் வகுப்புகள் நடந்தன. எங்களுக்கே வகுப்புகள் நடத்திய மிகச் சிறந்த சாதனைகள் படைத்த பேராசிரியர்கள் டீ.வி . சுப்பாராவ் ,கே.ரமனப்பிரசாத், இரா. நெடுமாறன் ,அய்யா தமிழ்க்குடிமகன் போன்றோரும் சிறைக்கு வரவேண்டிய காலகட்டமாக மாறிவிட்டது.அன்றுபோல் இன்று இல்லையே என்று ஏங்கித் திரியவும் 'பெட்டைப் புலம்பல் ' நிகழ்த்தவும் இதையெல்லாம் நான் எழுதவில்லை. இன்று ஆசிரியர் சொல் 'அம்பலம்' ஏறியிருக்கிறது. நிறைய  மாணவர்கள் -இளைஞ்ர்கள் மரினாவிலிருந்து ,நெடுவாசலிலிருந்து ,அலங்காநல்லுரு வரைக் கூடுகிறார்கள் எனில் எவரால் வரும் இத்தகைய நிகழ்வுகள்?விதைக்கும் விதை என்றேனும் முளைக்காதா என்ன? ஆசிரியர்கள் போராட வேண்டாம் இன்று-நன்கு வகுப்பறையில் 'திறமைகளை'க் காண்பித்தாலே  போதும்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியின் நண்பர் முருகேசனை நன்றிகூர்ந்து நினைத்துப் பார்க்கிறேன் -ஏனெனில் அவரே அந்தப் பத்து நாட்களும்  யோகாப் பயிற்சி எடுத்தார்.பல முக்கிய ஆசனங்களும் ,மூச்சுப் பயிற்சியும் முறையாக நடத்தியதில் விளைவாக இன்றும் கூட நாங்கள்பலர் யோகா தினமும் செய்துவருகிறோம்-அநேகமாக யோகா செய்யாத எனக்குத் தெரிந்த இளைய தலைமுறைப் பிள்ளைகள் இல்லை எனலாம். நல்ல பாடல்கள் பாடினோம். இன்றைக்கு காணொளியில் காணும் நீயா நானா விலிருந்து நாங்கள் பல அரிய  வழக்கு மன்றங்களை அன்றே நடத்தினோம்-சிறையிலும் அதற்குப் பின்னர் வெளியே வந்து எங்கள் கல்லூரிகளிலும்.

சிறை செல்லும் அளவுக்குப் பிரச்சினைகளை இழுக்க கொண்டே போகக் காரணம் நாங்கள் நிச்சயமாக இல்லை.எப்படி சுதந்திர போரில் நமது மக்கள் எல்லோரும் நேரடியாகப் பங்கேற்கவில்லையோ-ஆனால் பலனை அனுபவிப்பதில்  தயக்கம் காட்டியதில்லையோ-அதேபோல் அன்றும் ரொம்பப் பேர் கலந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை-இன்னும் எங்களைக்  கரித்துக்கொட்டியவர்களும் சபித்தவர்களும்தான் அதிகம். பின் வந்த காலங்களில் எம்.பில் முதல் டாக்டர் பட்டம் ஆராய்ச்சி செய்ய அதிகம் முயற்சி எடுத்துக் கொடுத்ததும் ஆசிரியர் சங்கங்கள் தான்.'போற்றுவோர் எப்போதும் போற்றுவர்-தூற்றுவோர் இப்போதும் தூற்றுவார்'-அதுதானே வாழ்க்கை

Comments

Popular posts from this blog