" சின்னஞ்சிறு பிஞ்சுகூட கஞ்சிக்காக அலையுது
இன்னும் இந்த நிலைமை இந்தியாவில் இருக்குது "--போன்ற விழிப்புணர்வுப் பாடல்களை கலைஞர்களைக் கொண்டு மதுரை மாவட்டம் முழுவதும் வீதியோர நாடகங்கள் நடத்திச் செல்லும் வாய்ப்பு எனக்குத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கொடுத்தது .Bharat Gyan Vigyan Jaatha (BJVJ ) என்று HRD மினிஸ்ட்ரி ஆல் அகில இந்தியா முழுவதும் எழுத்தறிவுக்கான பிரச்சார அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளனாக நான் தேர்வு செய்யப்பட்டு அறிவொளி இயக்கம் நடத்தவும் உழைக்க நேர்ந்தது-நான் செய்த மிகப் பெரிய தவப் பயனே.அந்த மாபெரும் இயக்கம் -மக்கள் இயக்கம் வெற்றிபெற்று இருந்தால் இந்தத் தேசத்தின் தலைவிதியே மாறியிருக்கும்.என் செய்வது -நல்லன எல்லாம் தான் சிறப்பாக நடக்க முடியாமல் போகும் நிலையை நாம் பார்த்திருக்கிறோம்-எந்த அரசு நடத்தியததோ  அதே அரசு இதை அதிகமாக நடத்தாமல் பார்த்துக்கொண்டது சாபக்  கேடே!டாக்டர்.வி.பி.ஆத்ரேயா  மற்றும் TNSF செயல் வீரர்களால் நடத்தப்பட்ட இந்தத் திட்டம் பசும்பொன்  மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் -ஷீலா ராணி சுங்கத் மற்றும் குத்சியா காந்தி ஆகிய மாவட்ட கலெக்ட்டர்களைக்   கொண்டு ,தமிழ்நாட்டில் துவக்கப்பட்டது.அவ்விரு ஆட் சியர் செய்தது மகத்தான பணி -பேரா. ராஜமாணிக்கம் அவர்களும் .நூற்றுக் கணக்கான  அறிவியல் தொண்டர்களும் சிவகங்கையில் அல்லும்பகலும் உழைத்து அற்புதமான எழுத்தறிவு இயக்கத்தை நடத்தமுடியும் என்று வழிகாட்டினர்.

மதுரையிலும் இதற்காகத் துவக்கப்பட்ட மாவட்ட அறிவொளி இயக்கம்  கலெக்ட்டர் திருமதி.கிரிஜா வைத்தியநாதன் (இந்நாள் முதன்மைக் செயலர் )அவர்களின் மிகச் சிறப்பான தலைமையில் துவங்கியது.  என்னைப்  போன்ற அறிவியல் தொண்டன் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் , நண்பர்கள் பேரா. .கிருஷ்ணமூர்த்தி, ராஜசேகர், மனோகரன் ,சரவணராஜன்  போன்றோர் மத்திய ஒருங்கிணைப்பாளர்கள் ஆகவும் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது . திருமதி கிரிஜாவின் சிறப்பான செயல்திறன் ஓராண்டுகூடக் கிடைத்திருந்தால் மதுரை- நன்கு படித்தவர்களின்  இடமாக மாறி இருக்கும்-அவர்களை மாற்றி திரு.ஆதி சேஷய்யா வந்தார் .நெருப்புபோல் பறந்து பறந்து பணி செய்த அவரும் தொடர்ந்திருந்தால் எங்கேயோ மதுரை மாவட்டம் சென்றிருக்கும்.ஆனால் இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஆளை மாற்றி மாற்றி எங்கள்  உயிரை எடுத்ததுதான் மிச்சம்.வெறும் பிரச்சார இயக்கத்திற்க்கே இந்த நிலை எனில் நாட்டில் எந்த கதியில் பள்ளி,கல்வி நிலையங்கள் நடக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். ஆனால் மிக அருமையான அறிவியல் தொண்டர்கள் மற்றும் அரிதான மாவட்ட ஆட்சியர் களுடன் பணிபுரிந்த அனுபவம் எனக்கு கிடைத்தது.திரு.கிருஷ்ணஸ்வாமி,திரு,சத்ய கோபால்,திரு சம்பத்,திரு.உமா சங்கர் ,திரு.மோகன் ப்யாரே போன்ற ஐ ஏ எஸ் அதிகாரிகள் மற்றும் பேரா . மாடசாமி,  பேரா .சசிதர், பல அற்புதமான ஸ்டேட் TNSF நண்பர்களுடன் நேரம் காலம் தெரியாமல் பணியாற்றியது எல்லோருக்கும் கிடைக்கும் வாய்ப்பு அன்று. அரசையே குறை செய்து, போராடியதுபோக-இன்று அவர்களுடன் -அதிலும் உள்ள நல்ல அரசுப்  பணியாளர்களுடன் பணியாற்றியது அபூர்வமானது.நேரடியாக மக்கள் சேவையில் ஈடுபட்டு நற்பெயர் சம்பாதித்தது மறக்கமுடியாத அனுபவமே. நேர்மை மற்றும் பண விஷயத்தில் நெருப்புபோல் இருந்து நல்ல திட்டங்கள் நண்பர்களுடன் கூடி க் கூடி செயல்வீரர்களாய்ச் செயல்பட்டது நான் பெற்ற  பேறே!

Comments

Popular posts from this blog