மதுரைக்காரனுக்குப் போராட்டம் இயல்பானது.அநீதியைக் கண்டித்து கண்ணகி மதுரையை எரித்ததை வைத்துமட்டும் நான் சொல்லவில்லை,காந்தியார் கூட மதுரை வயல்வெளிகளில் அரை முழம் ஆடையுடன் வியர்க்க விறுவிறுக்க  உழைக்கும் நம் விவசாயிகள் நிலை கண்டு ,தனது ஆடையையும் குறைத்து வாழ்நாள் முழுதும் எளிய வாழ்க்கை  வாழ்ந்த சம்பவமும் மதுரை .மண்ணுக்கே உரியது.மிகவும் சாதுவே  ஆயினும் மிரண்டால் ...நாடு கொள்ளாது.உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை.நியாத்திற்கே கட்டுப்படுவான்.அவனை வென்றுகொள்வது எது?.கொஞ்சம் உசுப்பிவிட்டால் போதும்.இத்தனை பீடிகை எதற்கு என்று கேட்கிறீர்களா? எனது போராட்ட காலங்களுக்கு ஓர் காரணம் வேண்டாமா?கோபமும்,முரட்டுத்தனமும் பள்ளி வாழ்கைக்குப் பின் குணமாயிற்று.உடல்வலிமைக்குத் தான் பயிற்சிகள், கராத்தே -ஓ அந்த கடுமையான நாட்கள்!சினிமாவுக்கும்  அதிலெல்லாம் பங்கு உண்டு.

 திரு.பி.கே. ராஜன் என்பாரும் பி என் நாயர் என்பாரும் நான் பணிபுரியும் கல்லூரிக்கு வந்து ஆசிரியர் மன்றத்தின் ஈடுபாடுகளில் பங்கெடுக்க எங்களையெல்லாம் அழைத்தனர்.எங்களில்  சிலர் தயங்கியதால்  திரு.பார்த்த சாரதி அவர்கள் நியாயங்களை விளக்க-கொஞ்சம் கொஞ்சமாக தொழிற்சங்கம் பணி போல் மூட்டா பணியும் எங்களை கவர்ந்தது.பார்த்தசாரதி அவர்கள் என் சகோதரர் சுந்தர் ராமனுக்கு அமெரிக்கன் கல்லூரி க்ளாஸ்மேட். சிறப்பான வாதத்திறமையும் இன்சொல்லும் கடுமையான லட்சிய நோக்கும் உடையவர்.கல்லூரி நன்கு செயல்பட பணம் வேண்டும்-எங்களை பணியிலமர்த்தியோருக்கு அது இல்லாததால் கல்லூரி வளர்ச்சி இல்லாமல்  இருக்கநேர்ந்தது--ஆஹா இன்று தான் எவ்வளவு சிறப்பாக வளர்ந்திருக்கிறது.!இன்றைக்கு இருக்கும் ஞானம் (?) அன்று இருந்திருந்தால் நிதி திரட்டும் பணியில் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி வேறு விதமாக  வாழ்க்கை திசை திரும்பியிருக்கும்.

ஆனால் ஒட்டுமொத்த கல்லூரி ஆசிரியர் பணி நிலை, ஊதியம் ,பல நிர்வாகங்களின் மெத்தெனப்போக்கு, அரசின் மந்தப் போக்கு 'போராட்டமே வாழ்க்கையாகும் அளவுக்கு மாறிப்போயிற்று.எத்தனை வடிவங்களில் எத்தனை நாள் போராட்டங்கள்?கண்டன ஆர்ப்பாட்டங்கள் ,உண்ணாவிரதம், சிறைச் சாலை -நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் பலப்பல ஆண்டுகள் சொகுசு வாழ்க்கையை இழந்து, சர்வபரித்யாகமும் செய்துதான் இன்றைக்கு பணிப் பாதுகாப்பும் ,நல்ல சம்பளமும் கிடைக்கிறது.ஆனால் இன்னும் செய்யவேண்டிருக்கிறது.ஒருகாலத்து நியாயங்கள் பிறிதோர் காலத்தில் கூர்மழுங்குவதும் வளர்ச்சியில் ஏற்படும் கொடுமையான விபரீதம்.அன்று ஆசிரியர் பிரச்சினை மட்டும் அல்லது விலை வாசி உயர்விலிருந்து பொதுவான அநீதிகளைத் தட்டிக் கேட்கும் போராடக் காரர்களாகவே மாறினோம்.மூட்டா போன்ற அமைப்பு இன்றேல் என்றைக்கோ நாங்கள் கல்லூரியைவிட்டு வீட்டுக்கு அனுப்பப் பட்டிருப்போம்.நியாயம் நீதி பேசுவதோடு நில்லாது செயலிலும் இறங்கியது ஒவ்வொரு ஆசிரியருக்கும் பெரும் அளவுக்கு நட்டமே-வீட்டுப் பெரியவர்கள் திட்டு, சமூகத்தின் ஏளனப் பேச்சு -நல்லவேளை மனைவியும் குழந்தகளும் எதிர்த்துப்  பேசவில்லை.அவர்களை ஓரளவு கன்வின்ஸ் செய்துதான் 'வீரர்களாய் ' இருந்தோம்.இன்றும் இப்படியெல்லாம் எழுதுவதற்கு நன்கு என்னைப் புரிந்தவர்கள்கூட ஏதேதோ பேசுவது வியப்பாகவே இருக்கிறது.மதுரை சிறை எனக்குப் பழக்கமானது,பெரியார் பஸ் நிலையம் முன்,ஆடசியார்  அலுவலகம்முன், தபால் தந்தி  அலுவலகம் முன் ,பல கல்லூரிகள் முன் எத்தனை எத்தனைப் போராட்டங்கள்?  மதுரை ஓ மதுரை 23.

Comments

Popular posts from this blog