BASED ON -ELEGY WRITTEN IN A COUNTRY CHURCHYARD BY THOMAS GRAY முடிகின்ற நாளை அறிவித்து மணி ஒலி எழுப்பியது மேய்ச்சலை முடித்தே கத்தும் ஆவினம் திரும்பின ஏர் உழவர் தம் இல்லம் நோக்கி களைப்புடன் வந்தனர் இருட்டும் உலகமும் என்...னிடம் இப்போது மிஞ்சியது பார்வையிலிருந்து ஒளிர்ந்த காட்சி மெல்ல மறைகிறது எங்கெங்கும் காற்றில் நிரம்பிநின்றது அருள் பேரமைதி தட்டாம்பூச்சியின் கூச்சல்களும் பறத்தலுமே எஞ்சியது மயக்க நிலையே தாலாட்டுது தொலைதூரக் காட்சிகளை ஐவிகொடிபடர்ந்த அந்த ஆலயக்கோபுரஉச்சியில் மட்டும் முணுமுணுத்த ஆந்தை ஒன்று நிலவுக்குப் புகார் செய்தது ஏதோ அதன் ரஹஸ்ய அறையினுள் அத்துமீறியதாம் அதன் அக்காலம்தொட்டுவரும் வீட்டில் கேடு வந்துற்றதாம் அந்தக் கரடுமுரடான எல்ம்ஸ் மரங்கள் கீழ் , யூமர நிழலில் புற்கள் படர்ந்த மண் மேடு மேடாய்க் குவிந்து இருந்தன ஒவ்வொருவரும் தத்தம் இடத்தில் வெகுகாலமாக இருந்தனர் எம் முன்னோர்கள்தாம்-ஊர்நாட்டார் -எம் குடிலிலிருந்து சென்றார் நறுமணம்பரப்பும் இனிய காலைத் தென்றல் காற்று வைக்கோல் கூடுகளிலிருந்து ஒலியெழுப்பும் ஸ்வால்லோ சேவல்களின் கொக்கரக்கோ மற்றும் ...
Popular posts from this blog
நான் சிறுவனாய் இருந்த காலத்திலிருந்தே கலெக்டர்'ஸ் ஆபிஸ் டு திருப்பரங்குன்றம் பஸ்ஸில் ஏறி முருகப்பெருமானைத் தரிசித்து வந்திருக்கிறேன்.பின்னாளில் மூட்டா தோட்டத்திலுருந்தபோது பல நாட்கள் சென்று முருகன் அருளைப்பெற விழைந்திருக்கிறேன்.பெரிய ' ஓ 'வடிவத்தில், வெண்ணீறணிந்து தூரத்திலிருந்து பார்க்கையிலே கூட மனம் கவரும் மருகன் அவன்.இன்னும் சொல்லவேண்டுமானால் நாற்பத்து எட்டு நாட்கள் மலையைச் சுற்றி வந்துதான் மூட்டா தோட்டத்து இடமே எங்களுக்கு கிடைத்தது.கோவினுள் நுழையும்போது கருப்பண்ண சாமியை க ும்பிட்டுவிட்டு -விநாயகரை வணங்கி-நெடிய இரண்டாம் கட்ட நிலையைக் கடந்து மேலே சென்று பரந்துபட்ட நிலைக்கு வருவோம். இடதுபுறம் கோயில் குளத்தில் இறங்கி, உப்பு,மிளகு, வெல்லம் பொட்டலங்கள் வாங்கி தோஷ நிவர்த்தி செய்துவிட்டு,.அடுத்த கட்ட நிலைக்கு பல படிகள் ஏறி வந்து-கொடிமரத்தின்முன் விழுந்து வணங்கி பிரார்த்தனை செய்வோம்.கூட்டமில்லாப்பொழுதில் மிகப் பேரமைதியை நாம் அங்கெ உணரமுடியும்.இன்னும் மேலே சென்றால் -வலதுபுறம் கோவர்தனாம்பிகையை வணங்கிவிட்டு-மெயின் சன்னதிக்கு ஏறி வருகிறோம்.ஐந்து அற்புத மூலவர் விக்ரகங்களை ஒன்றன் ...
கடவுள் மர்மமான வழிகளில் நடக்கிறார் தனது அற்புதங்களை நிகழ்த்தவே தனது காலடிகளைக் கடலின்மீது பதிக்கிறார் பெரும் புயலின்மீதும் சவாரி செய்கிறார் அளக்கமுடியா சுரங்கங்களின் அடியினில் ஆழ்ந்து தோற்கவே முடியா தனது தேர்ச்சிபெற்ற திறனுடன் தனது ஒளிமிகுத் திட்டங்களை சேமிக்கும் வல்லவர் தன் ஊடுருவமுடியா சங்கல்பத்தை முடிக்கிறார் கடவுளுக்கு பயப்படும் முனிவர்காள், புதுதைரியம் பெறுக நீவிர் நடுங்கும் மேகமெல்லாம் உண்மையில் அவர்கருணை பெற்றதே,அதுவுமன்றி அவர்தாம் அவைகளை உன்தலைமீது விழும் ஆசிகளாய் மாற்றுவார் மதிப்பிடாதீர் ப்ரபுவைத் தங்கள் பலவீனமான குணத்துடன் நம்புங்கள் அவரை அவரது கருணைக்காக முறைத்துப்பார்ப்பதுபோல் இருக்கும் மகா சக்தி அவர் மறைத்துள்ளார் தனது சிரிக்கும் முகத்தை அவர்தம் குறிக்கோள் விரைவில் பலன் தரும் ஒவ்வொருமணித்துளியிலும் வெளிப்படும் மொட்டாக இருப்பது கசப்பாகத்தெரியும் ஆனால் இனிமையானதுதான் எந்த மலரும் கண்மூடித்தன நம்பிக்கை தவறுக்கு இடமாகும் அவர்தம் செயலை ஆராய்வது வீணானது கடவுளே அவரது பொருளை விளங்குபவர் அது என்றென்றும் எளிமை மட்டும் உடையது Based on William C...
Comments
Post a Comment