நாணுகின்ற பெண்ணுக்கு....

  ........................................................................................

  ஆனால் எனக்குப் பின்னால்எப்போதும் நான் கேட்கிறேன்
  காலதேவனின் சிறகுமிகு ரதம் விரைந்து வருவதை ;
  நமக்குமுன்னர் அங்கே இருக்கிறது
  நிலையாமை என்ற பரந்த பாலைவனம் .
  உன் அழகைப் பார்க்கவே முடியாது
  உனது பளிங்கு இதய அறையில்
  எனது பாடல்கள் எதிரொலிக்காது ; புழுக்களும்
  உனது சேர்த்துவைக்கப் பட்ட புனிதத்தை ருசிக்கும்,
 நாள்பட்ட கற்பும் மண்ணாகிவிடும்
எனது அனைத்துக் காதலும் சாம்பலாகிவிடும் .
இடுகாடு என்னவோ அழகே,இனிமையே-
 ஆனால் நான் நினைக்கிறேன் எவரும் அங்கே தழுவதில்லையே ...

ஆண்ட்ரு மார்வெல்.

Comments

Popular posts from this blog