Srikrishnan Ku's photo.
Srikrishnan Ku's photo.
நானறிந்த மதுரை என்று என்றோ நடந்ததை எழுதிவருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கிறது .அவரவர்களுக்கு அவரவர் ஊர் அதே மகிழ்ச்சியைக் கொடுக்கும்-இதில் மதுரை ஓர் குறியீடு!
எதிர்காலம் பற்றி நான் சென்றகாலங்களில் சிந்தித்ததே இல்லை-இன்றளவும் கூட.இதற்கும் மதுரை மண்ணும், காற்றும் கூடக் காரணமாயிருக்கலாம்.மதுரையின் மகத்துவம் அத்தகையது என இப்போது பலவற்றிலும் படித்து வருகிறேன்.போராட்டக் காரனாகச் சில காலமே வாழ்த...ேனாகிலும் -உண்மையாகவே நான் அந்த வழிமுறைகளுக்கு இருந்தேன் என்பது என் நண்பர்களுக்குத் தெரியும்.எனினும் மதுரையை விட்டுவிட்டுச் சென்னைக்குச் சென்று செட்டில் ஆனபின் நான் மறைந்துவிட்டேன் என் அனைத்து நண்பர்களிடமிருந்தும்.அதையும் உலகநியதியாகவே பார்க்கிறேன்.

மதுரையின் தலை சிறந்த கல்லூரிகளில் ஒன்றுதான் தியாகராஜர் கல்லூரி.மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு எதிரே அமைந்துள்ள இக்கல்விச்சாலை ஏராளமான நல்ல சிறந்த உள்ளங்களை உருவாகிவிட்டிருக்கிறது.இங்குதான் நான் பட்டப் பின்படிப்பு-எம்.ஏ-படித்தேன் ஆங்கில இலக்கியத்தில்.பேராசிரியர் டீ.வி. சுப்பாராவ் என்றோர் சான்றோரது வகுப்பில்பயின்ற மாணவன் என்று வாழ்நாள் முழுவதும் சொல்லிக்கொண்டிருக்கும் பெருமிதம் எனக்கு கிடைத்தது மதுரை எனக்கு கொடுத்த பெரும் பேறு! ஆங்கிலமோஹம் தலைக்கேறா வண்ணம் நல்ல இந்தியனாகவும் வாழவேண்டிய பண்பாட்டைக் கற்றுக்கொடுத்தார் அம் மாமனிதர்.தமிழின் மேன்மையையும், சமஸ்க்ருதத்தின் உயர்வையும் விளங்கவைத்தார்.திராவிட மாயையில் மூழ்கவிடாமல் உலக இலக்கியங்களை அறிமுகம் செய்துவைத்த மிகப் பெரிய அறிவாளி அவர். படிப்போடு கர்னாடிக் இசை மற்றும் நாட்டியத்தின் பெருமைகளையும் புரியவைத்தார்.நாத்திக வாதத்தைத் தவிடுபொடியாக்கி-எப்படி ரசல் போன்ற அறிவாளிகளை நெருங்கக் கூடாது என்று எச்சரித்தவர். அதே சமயத்தில் கார்ல் மார்க்ஸ் ,காண்ட்.ஹெகெல் போன்ற ஐரோப்பியச் சிந்தனையாளர்களின் மேன்மையையும் தெளியவைத்தார்.இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலையில் பயின்றவர்-வசதியான குடும்பத்தைச் சார்ந்தவர்-பின்னாளில் எங்களுடன் ஆசிரியர் மன்ற போராட்டத்தில் பங்கேற்றுச் சிறைச்சாலைக்கும் வந்தார்! சொல் ஒன்று செயல் ஒன்றாக இருக்கமாட்டார்.சமீபத்தில் ஜனவரி மாதம் பேராசிரியரைச் சந்திக்கும் வாய்ப்பு அருமை நண்பர் ப்ரேம்பாபு அவர்களின் உதவியால் கிடைத்தது.நலமுடன் இருக்கிறார்-எண்பத்துநாலு வயதிலும் கையில் ஓர் லேட்டஸ்ட் மார்க்சிய நூலை வைத்துப் படித்துக்கொண்டு!நீண்டநாள் அவர் இன்னும் நல்ல உடல்நிலையுடன் வாழ இறைவனை வேண்டுவோம்.

.அவருடன் அவரது சகாக்கள்-பேரா. சக்திவேல்.ஹரிஹரன், பத்மநாபன் ,வைத்யநாதன் போன்ற திறமையும் சொல்லாற்றலும் உடைய பேராசிரியர்களிடம் பயின்றது மறக்கமுடியாத அனுபவம். அய்யா சக்திவேலின் வகுப்பு அனுபவங்கள் மிகப் பரந்துபட்ட ,பன்முக வாழ்க்கைப் பரிமாணங்களை அறியவைத்தன.க ல்லூரிக் கிரிக்கெட் டீமுக்கும் இரண்டு ஆண்டுகள் விளையாடினேன்.பற்பல பேச்சுப் போட்டிகளிலும்-நாடகத்திலும்கூட நடித்து என்னை வளர்த்தேன்.உயிர் நண்பர்களாக மோகன்ராம்,பிரான்சிஸ்பால்,எத்திராஜ் போன்ற அருமையான நண்பர்களுடன் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான்

.அந்தக் கல்லூரி தமிழ்த்துறைக்கும் பெயர்போனது.அவ்வை துரைசாமி,அ,கி.பரந்தாமன்.சங்கரநாராயணன் போன்ற தமிழ் அறிஞர்கள் தமிழில் கோலோச்சிக் கொடிகட்டிப் பறந்த காலம்-பல சிறந்த சொற்பொழிவுகளை அங்கு கேட்டு மகிழ்ந்திருக்கிறேன்.என்னுடைய மரியாதைக்குரிய அண்ணா பேராசிரியர் ரமண பிரசாத் அவர்களின் அற்புதமான உரைகளை நிறையக் கேட்டு வளர்ந்தேன்,அவர் அங்கேதான் வரலாற்று ஆசிரியராய்ப் பணிபுரிந்தார்.ஷெனாய்நகரிலிருந்து-மதிச்சியம் .காந்திநகர், குருவிக்காரன் சாலை வழியாக சைக்கிளிலேயே பலநாட்கள் எங்கள் கல்லூரிக்குச் சென்றுவிடுவேன்.கல்லூரியின் இளங்கோ ஹாஸ்டெலில் மோஹன்ராமின் அறையிலும் , மற்ற நண்பர்களோடும் மதுரைக்கு வெளியே உள்ள வைகை அணை வரை சென்று மகிழ்ந்திருக்கும் தருணங்களும் இருந்தன.ஜேசீஸ் யூத் கிளப் மற்றும் YMCA மாணவர் அமைப்புகளிலும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு எப்படியோ படித்துப் பாஸ் செய்தோம்!

அமைதியான இடத்தில இருந்த அழகிய கல்லூரி எங்கள் தியாகராஜர் கல்லூரி.அப்போதெல்லாம் அதிக ஆரவாரம் இருக்காது,எதிரே வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்.பின்புறம் வைகை ஆறு-எழிலுடன் தண்ணீர் ஓடும்-இல்லையேல் மணல்வெளிகளில் நடந்து மானகிரி-மேலமடைக்குச் சென்று விடுவோம்.கட் அடித்து சினிமா பார்க்க வசதியாக கணேஷ் மற்றும் அலங்கார் திரையரங்குகள்.-எப்போதாவது! ஏராளமான நாவல்களும் கவிதைகளும் படிக்கத்துவங்கி -கற்பனையில் மிதந்த ரொமான்டிக் காலகட்டமது. madurai o madurai

Comments

Popular posts from this blog