தமிழில் ஜான் கீட்ஸின் அழகு கவிதை!
Based on John Keats' Ode to a nightingale-- என் இதயம் வலிக்கிறது-என் உணர்வுகள் மரத்துவிட்டன -ஏதோ விஷம் குடித்தாற்போல் அல்லது அபினை அருந்தியது போலவும் - இல்லை லித்தி நதியில் மூழ்கியதுபோலவா? இப்படி இருப்பது உன் மகிழ்ச்சியில் பொறாமை கொண்டா-... குயிலே-உனது களிப்பில் நானும் மகிழ்ந்திருந்ததாலா? மென்மையான சிறகுகள் கொண்ட தேவதையே ! ஓ பச்சைப்பசேல் பீச்சென் மரங்களில் அமர்ந்து இக்கோடையில் முழு வீச்சில் நீ பாடுவதைக் கேட்பதாலா? நெடுநாள் பூமிக்கடியில் குளிர்விக்கப்பட்ட மதுரசம் ஓர் கிண்ணத்தில் ஏத்திப் பருக ஆசை அதுதான் பூக்களின் -நாட்டுப்புறச் செடிகளின் வாசத்தோடு சுவைக்கும்-ஆட்டம்-பாட்டம்-கொண்டாட்டம்! கதகதப்பான தென் பிரெஞ்சு மது ஓர் பாட்டில் நிறைய - ஆஹா-ஹிப்போக்ரின் நிறத்தில் -கிறங்குகிறேன்!- முத்துமுத்தாய் உருண்டு திரண்டு நிரம்பி வழியும் ! இதழ்களெல்லாம் சிவப்பு நிறமாகி -நான் குடிப்பேன் இவ்வுலகிடமிருந்து வெகு தொலைவு செல்வேன்- உன்னோடு மறைந்துவிடுவேன்-காட்டுக்குள்ளே! மறைவேன் வெகுதொலைவில்-கரைவேன்-மறப்பேன் நீ இலைகளுக்கு நடுவே என்றும் அறியாததெல்லாம்- தளர்வும், காய்ச்சலும்-உறுத்தலும் இப்புவியில் மானிடர்களிடையே-அருகருகே அமர்ந்து புலம்பலும்! பாரிசம் தாக்கி சிலர் துயருற்று , தலையெல்லாம் நரைத்து- ஏன் இளைஞர்கள் கூட ஒளி இழந்து சோகைபிடித்து மரிக்க- இங்கே பூமிதனில் சிந்திப்பதெல்லாம் சோகமயமாக- கண்ணிமைகள் கனத்து அழகெல்லாம்இழந்தும்- அன்பெல்லாம் வறண்டும் -வாழ்வே இப்படித்தான்! பறந்து செல்,பறந்து செல்-உன்னிடம் நான் வருகிறேன் - மதுவின் போதையில்-மதுக்கடவுள் பாக்கஸுடன் அல்ல- ஆனால் எனது கவிதைச் சிறகுகளை விரித்துவைத்து- என் சித்தம் குழம்புகிறது-வேகமும் சற்றே குறைகிறது, அட-ஏற்கனவே நான் உன்னோடு!இவ்விரவு மிக மென்மையே! நிலா அரசி தனது தோழியருடன் சூழ்ந்து அரியணையில்- ஆயினும் இந்தக்கரிய இருளும்கூட வானவீதியில் வரும் சிற்றொளி மரங்களூடே பாய்ந்துவர பசுமையும்மங்கிட சிறிதே இடைவெளியில் வரும் காற்றும் இங்கே உலா வரும் இவ்விருளில் உன் இடத்தில் இங்கு பல வகை மலர்கள் என் காலடியில் அத்துடன் நறுமணம் மிக்க கிளைகள்-என்னால் அவைகளைக் காணமுடியாது ஆயினும் வாசம் மிகு இவ்விரவில் இனியவை அனைத்தையும் உணர்வேன்- இப்பருவத்தில் செழிக்கும் புற்கள் புதர்கள் பழங்கள் சுமக்கும் மரங்கள் வெண்ணிற ஹாதார்ன்,மண்ணுக்கே உரிய எக்லன்டின் பூக்கள் -- விரைந்து வெளுக்கும்-மே மாத வயலட் அங்கே-இலைகளால் மூடப்பட்டு- இவைகளோடு மதுத்தேன்வழியும் மஸ்க்ரோஜாக்களும் -என்னே மணம்! கோடைமாலையில் பண்ணிசை ரீங்காரமிடும் தேனீக்களின் ராகங்களும்- கரிய இருளையே கவனிக்கிறேன்-ஏனெனில் பலப்பல நேரங்களில் இனிமைமிகு இறப்புடன் பாதி மையலில் விழுந்திருக்கிறேன்! எத்தனைமுறை மென்மையான பெயர்களில் சாவை அழைத்திருக்கிறேன்- என்னுயிரைக் காற்றுடன் அமைதியாகக் கலந்துவிடு என்றே- எப்போதையும்விட இக்கணமே உயிரைவிடச் சரியான தருணம்! இந்நள்ளிரவில் உடலைக்கிடத்தி வலியற்று உயிர்பிரிதல்-அடடா- அதுவும் நீ உன் ஆன்மாவையே உச்சத்தில் இசையோடு பாடுகையில்- மேன்மேலும் பாடுக குயிலே-இதைக் கேட்காத செவிகள் இருந்தென்ன? நீ பாடப்பாட-உன் இரங்கற்பாக்களுக்கு நான் புதை மண்ணாய் இருப்பேன்! இருப்பதற்காக நீ பிறக்கவில்லை என்றுமுளப் பறவையே ! புசிக்கவரும் பசிமிக்க தலைமுறைகள் உன்னை வெல்ல இயலாது- இன்றிரவு நான் கேட்ட ஓசையெல்லாம் அந்நாளில் பேரரசர்களும் விகடகவிகளும் கேட்டு மகிழ்ந்திருப்பர்- அதற்குப்பின் வந்த எண்ணற்றோர் உன்னைக்கேட்டிருப்பர்- விவிலிய ரூத் கண்ணீர் மல்க வீடு திரும்புகையில் உன் பாக்களை தனிமையில் சோகமுடன் சோளக்காட்டில் கேட்டு ஆறுலதலடைவாள்! பலமுறை அவை ஒலித்துஒலித்து -அபாயமிகு ஆழ்கடல்களில் தேவதைகள் வாழும் இடங்களில்-மந்திர பேழைகளையும் திறந்திருப்பாய்-இக்காட்டிலிருந்து சென்று தனிமையில் கூவியிருப்பாய்! தனித்துவிடப்படுவது-ஓ அது அபாய ஒலி எழுப்பும் மணிபோன்றது- என்னை என்னுடைய முழுமையான ஆன்மாவில் இணைப்பதுபோல்! சென்று வாறேன் குயிலே!என் கற்பனையால் உனை ஏமாற்றுவதா என்ன? அது நடக்கலாம் ஜீனிகளிடம்-உன்னிடமன்று-வருகிறேன் வருகிறேன்- அதோ உன் சோக கீதமும் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது- இதோ இங்கே புல்வெளியில்-அங்கெ அமைதியான ஓடை அருகே- இப்போது அம்மலையினருகே-அந்த பள்ளத்தாக்கில் ஆழ்ந்து மறைகிறது- இதெல்லாம் தோற்றமா அன்று விழிப்புநிலைக் கனவா? குயிலின் இசை போயிற்று-போயிற்று-விழிப்பா? உறக்கமா? Ode to a Nightingale" |
சீமாட்டி மாக்பத் நுழைகிறாள் கையில் கடிதத்தை வாசித்துக்கொண்டு- சீமாட்டி மாக்பெத் :"சூனியக்காரிகள் நான் யுத்தத்தில் வெற்றிபெற்றபின் என்னைச் சந்தித்தன -அப்போதிலிருந்துதான் அவைகளுக்கு இயற்கைக்கு மீறிய அதீத உணர்வு உண்டு என்று புரிந்துகொண்டேன்-அவைகளிடம் மேன்மேலும் கேள்விகள் கேட்டு துளைத்தேன்-அவை காற்றில் மறைந்துவிட்டன!வியப்பிலிருந்த என்னை மன்னர் அனுப்பிய ஏவலாளிகள் சந்தித்து-" வாழ்க காடர் பிரபு!' என்று வாழ்த்தினர்ஏற்கனவே சூனியக்காரிகள் உரைத்தவாறு! அவைகள் என்னை " வருங்கால அரசன்!' என் று கூப்பிட்டதும் நினைவுக்கு வந்தது.இந்நற்செய்தியை உன்னுடன்-என் அன்பிற்குரிய மனைவியுடன் சொல்லி- அதன்மூலம் ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்ற காலத்தின் மேன்மை குறித்து உணரவுமே இக்கடிதம் . இந்த செய்தியை இதயத்தில் ரகசியமாய் வைத்திரு-விரைவில் நேரில் சந்திக்கிறேன்" கடிதத்திலிருந்து முகத்தை விலக்கி-" நீங்கள் இப்போது கிளாமிஸ் மற்றும் காடருக்கும் பிரபுவாகிவிட்டீர்கள்-மன்னராகவும் ஆளப்போகிறீர்கள்!ஆயினும் தங்கள் உண்மை இயல்பு குறித்தே அச்சமேற்படுகிறது-நீங்களோ மனித அன்பின் ...
Comments
Post a Comment