Srikrishnan Ku's photo.
Srikrishnan Ku's photo.
Srikrishnan Ku's photo.
நான்மாடக் கூடல் நகரின் மையத்தில் மீனாட்சி கோயில் மட்டுமல்ல --அங்கிருந்து கூப்பிடு தூரத்தில் கூடலழகர் கோயிலும் இருப்பது சிறப்பல்லவா?பெரிய கோயில் என்றும் சொல்லமுடியாது-சிறிய கோயில் என்றும் கூறமுடியாது---பெருமாள் இங்கு உறையும் அழகுமிகு கூடலழகர் ஆலயத்தை. எதிரே மண்டபமும் ஸ்ரீ ஹயக்ரீவருக்கான சிறிய ஆலயமும்.எந்நேரமும் விஷ்ணு பக்தர்கள் ஏராளமான வடநாட்டு யாத்திரிகர்கள் வந்த வண்ணம் இருக்கும் சிறப்புமிகு ஆலய...ம். வாயிலில் யானையைச் சேவித்துவிட்டு உள்ளே நுழைந்தவுடன்-துவிஜஸ்தம்பம்-தரையில் விழுந்து சேவித்துவிட்டு-அருகே இருக்கும் தும்பிக்கை ஆழ்வார் தரிசனம்.

பெருமாள்கோயிலாதலால் முதலில் தாயாரைத் தரிசிக்க இடப்புறம் வாயிலைக் கடந்து ஸ்ரீ சக்கரத் தாழ்வார் சன்னதியில் மனமுருகப் பிரார்த்தனை-" சஹ்ராதித்ய சங்காஸம் சஹஸ்ர வதனம் ப்ரபும்" -அப்படியே அவருடன் இணைந்த ஸ்ரீ யோக நரசிம்மரய்த் துதித்த வண்ணம் வலம் வருகிறோம்-எப்படிப்பட்ட எதிரிகளும் நமக்குத் தீமை செய்யாவண்ணம் இவர்கள் உபாசனை உதவுவதை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்-எதிரிகள் எனில்-காரணமே இல்லாமல் நம்மை பயமுறுத்தும் எண்ணங்களைத் தான் குறிப்பிடுகிறேன்!

அடுத்து ஸ்ரீ மதுரவல்லித் தாயார் என்ற திவ்வியநாமத்துடன் விளங்கும் மஹாலக்ஷ்மியை வணங்க பெரிய
ஹாலில் நுழைந்து படியேறி கருவறைக்குள் நுழைகிறோம்--அடடா என்ன அழகு ! என்ன அமைதி அந்த இடத்தில்! அழகிய ஆபரணங்கள் தரித்து , சிரித்த முகத்தினராய் -பெரும் பாசத்தோடு நம்மைப் பரவசப் படுத்தும் மஹாசக்தியைக் கண்ணாரக் கண்டு களிக்கிறோம்.ஸ்ரீமஹாலக்ஷ்மி காயத்ரி சொல்லிச் சொல்லி மகிழ்வெய்துகிறோம்.ஆர்த்தி சேவை சாதித்து அம்மன் சடாரியைத்தாங்கி-குங்குமம் கைநிறைய வாங்கி வெளி வருகிறோம். வலமாக வருகிறோம் செபித்தவாறே. சன்னதியில் அமர்ந்து தியானிக்கிறோம்- பொருள்வளம் கூடவும்-கடன் தொல்லை தீரவும்-வேறு எவர் நமக்கு கதி கடவுளரை விட்டால்?

மீண்டும் வந்தவழியே புறப்பட்டு ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் அர்த்தமண்டபம் ஏறி பெரிய திருவடி எனப் போற்றப்படும் ஸ்ரீ கருடாழ்வாரைத் தரிசிக்கும் பாக்கியம்.அருகே இடப்பக்கம் ஸ்ரீ ஆஞ்சநேயர் -மூன்றடி உயரத்தில் -கூப்பிய கரங்களுடன்-நேர் எதிரில் கோதண்ட ராமரும்-விஸ்வக் சேனரும் ! எப்போதுமே அண்ணல் ராமபிரான் -அன்னை சீதா தேவி மற்றும் லக்ஷ்மணர், மாருதி சகிதம் திருக்காட்சி அளிக்கும்கோலம் கண்ணீரை -ஆனந்தக் கண்ணீரை வர வழைக்கும்"

. ஆபதாம பஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோபூயோ நாமம் யஹம்

ஆர்த்தானாமார்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதிநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்

ஸ்ன்னத்த: கவசீ கட்கீகாப பாண தரோயுவா
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ்மண

. நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ஸராயச
கண்டிதாகில தைத்யாய ராமாயபந் நிவாரிணே

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம:

அக்ரத: ப்ருஷ்டை தச்சைவ பார்ச்வதஸ்ச மஹாபலௌ
ஆகர்ண பூர்ணதன்வானௌ ர÷க்ஷதாம் ராம லக்ஷ்மணௌ

என்ற ஸ்தோத்திரத்தை உச்சரித்து அவர்தம் பெருமையை எண்ணி உள்ளே செல்ல தலைப்படுகிறோம்.

ஐம்பது அடிகள் தாண்டி அமர்ந்த மேனியாய் ஆஜானுபாஹுவாய் அண்ணல் கூடலழகர் பெருமான் காட்சி நெஞ்சை அள்ளுகிறது." "பச்சைமால் மலைபோல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்-
இச்சுவை தவிர யான்போய் ,இந்திரன் லோகம் ஆளும்
அச்சுவைப்பெறினும் வேண்டேன்-அரங்கமாநகருளானே' எனவே பாடத்துவங்குகிறது மனது.நெருங்க நெருங்க அண்ணலின் திருமேனி அழகு நம்மை பிரமிக்க வைக்கிறது.வெளியே அகன்று நெடிந்த கோபுரம்-உள்ளே அழகிய உயர்ந்த திருமேனியராய் ஸ்ரீ விஷ்ணு.

பட்டர்கள் கூறும் ஸ்தலபுராணம் கேட்டுவிட்டு தீபாராதனையைக் கண்ணாரச் சேவித்துவிட்டு -எம்பெருமான் சடாரியைத் தோள்களிலும் சிரசிலும் தாங்கும் பேறு பெற்று உள்ளே பிரகாரத்தைச் சுற்றிவருகிறோம் மீண்டும் அய்யனையும் ஸ்ரீதேவி பூதேவியாரையும் உற்றுநோக்கி வணங்கிவிட்டு--
நாம் பார்த்ததிலேயே மிகச் சிறிய பிரகாரம் இதுவாகவே இருக்கும் - பன்னிருமுறை திருவலம் வருகிறோம் ஓம் நமோ நாராயணாய என்று சொல்லிச் சொல்லி.

பின்னர் வெளிப்புறம் பெரிய பிரகாரத்தையும் சுற்றிவருகையில் கோபுர அழகைக் கண்டு வியக்கிறோம்-அதுவும் பௌர்ணமி நிலவுகளில் அந்த இடம் நம்மைப் புராண காலங்களுக்கே கொண்டுவிடும் !

இடப்புறம் வழியாகச் சென்று தனியே சந்நிதிகொண்டிருக்கும் ஆண்டாள் --சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள் -கோதைப்பிராட்டியார் சேவை ..என்ன பொலிவும் யவ்வனமும் இனிமையும் குடிகொண்ட வதனத்தினள் ! திருவலமாக வந்து -கோயிலின் முற்புறம் நவகிரஹ தரிசனம் -நல்ல பெரிய நவகோள் கற்சிலைகள்! தீபமும் ஏற்றிவைத்து நம் ஆலய வழி பாட்டை-கொடிக்கம்பம் அருகே அமர்ந்து நன்கு தியானம் செய்து -நிறைவு செய்கிறோம்.
Madurai O madurai

Comments

Popular posts from this blog