உலகமே ஓர் நாடகமேடை-ஆண்,பெண் -அனைவரும் நல்ல நடிகர்களே!
அனைவரும் சென்றுகொண்டும் வந்துகொண்டும் இருப்பார்கள் - ஒவ்வொருவரும் பலபலப்பாத்திரங்களில் நடிப்பவர்கள்தாம்! ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஏழு பகுதிகளாக இருக்கும்- முதன் முதலில்-குழந்தையாக-அழுதும் சிணுங்கியும் செவிலியர் கரங்களில்-அடுத்து அடம்பிடிக்கும் பள்ளிச் சிறுவனாக- கையில் புத்தகப் பையுடன் பால்வடியும் முகத்துடன்-... பள்ளிக்கு வேண்டாவெறுப்புடன் நத்தைபோல் ஊர்ந்து செல்வான், அடுத்துக் காதலனாக-ஊது உலைபோன்று பெருமூச்சுக்களை விட்டுக்கொண்டும்-காதலியின் முக எழிலைக் குறித்துக் கவிதை எழுதியும் - நான்காம் பகுதியில் வீரனாகப் பரிணமித்து-வாய் நிறைய வீர வசனத்துடன்- சிறுத்தையின் தாடியோடு-எப்போதும் தனது மானத்தைக் காப்பதில் குறியாக- குமிழ்போல் உடையும் புகழுக்காகப் போர்க்களத்தில் பீரங்கிகளுக்குமுன் தனது வாழ்க்கையையே பணயம் வைக்கும் நிலையில்! ஐந்தாவது பகுதியில் ஒரு நீதிபதி நிலையில்-லஞ்சலாவண்யத்தை அடையாளம் காட்டும் தொந்தி தொப்பையுடனும்-கண்களில் கடுமையை வரவழைத்தும்-நன்கு வெட்டிய தாடியுடனும்- அறிவாழம் மிக்கச் சொற்களுடனும்-சமீபத்திய சம்பவங்களை சுட்டிக்காட்டிக்கொண்டும் ஓர் வேஷம்! ஆறாவதாக -வயதானவனாய்--உடல் மெலிந்தும் சாதா செருப்புடன்-- முகத்தில் கண்ணாடியும் அருகே பணப்பையுடனும்- இளமையில் இருந்தகாலுறை தளர்ந்துபோய் -பாவம்- கம்பீரமாய் ஒலித்த அவன் குரல் சிசுவின் கீச்சிடும் குரலாக மாறி! வாழ்க்கை நாடகத்தில்-விந்தையான பல நிகழ்ச்சிகளாலான வரலாற்றில்-கடைசிக் காட்சியில் நம் கதாநாயகன் நுழைவதோ-மறதியில் மயங்கி-இரண்டாம் கைப்பிள்ளைபோல்- பற்களின்றி-பார்வையின்றி-சுவையுமின்றி-ஏது Based on As You Like It-of Shakespeare. See more |
25 September
Comments
Post a Comment