அதோ சுவரில் ஓவியமாய் நிற்பவள்தான்
என் முந்தைய சீமாட்டி -
உயிரோடு இருப்பதுபோலில்லை?
அற்புதமான படைப்பு-பிரா பண்டாலின்
கரங்கள் ஒருநாள் முழுவதும் கடுமையாய்
உழைத்தன-அவள் நிற்கிறாள்-
இங்கே அமர்ந்து அதைக் கவனி- ...
திட்டமிட்டே அந்த ஓவியனை வரச்செய்தேன்:
அம்முகத்தின் அழகை உன்னைப்போன்றோர்
புரிவது இயலாது-அவனால் மட்டுமே முடியும்-
அந்தமுகத்தின் ஆழத்தையும் அதீத உணர்ச்சிகளையும்
அவனாலேயே கொணர்ந்திடல் கூடும்-
என்னைப்போன்ற சீமானின் அண்மையாலே அந்த உணர்ச்சி
அவளால் கொடுக்கமுடியும்-அல்லது ஓவியரே அவளணிந்த ஆடையைத்
திருத்தச் சொன்ன வெட்கத்திலோ-அல்லது அவள் அழகைப் புகழ்ந்ததாலோ-
"வண்ணமெல்லாம் உன் ஏழிலைக் காட்டுவது கடினமென்று"சொல்லியிருப்பார்-
அதுவே அவள் கன்னத்தின் சிவப்பைக் கூட்டியிருக்கலாம்!
அவளுக்கு இருந்த இதயம்--என்ன சொல்வேன் அதுகுறித்து?
எளிதில் மகிழ்ச்சிவயப்படும், விரைவில் த்ருப்தியுறும்-
அவள் பார்த்திருப்பாள்-அவள் பார்வை எங்கணுமிருக்கும்-
அந்திமயங்கி வெளிச்சம் மேற்கே குன்றுகையில் ,
கொத்தாக செரிப்பழத்தை தோட்டத்தில் புகுந்து
தன் விவாசத்தைக் காட்டும் ஒருவேலையாளிடமும்
அவள் சவாரி செய்யும் வெள்ளைக் கோவேறுக்கழுதையுடனும்-
அவளுடைய ஆமோதிக்கும் சொற்களைச்சொல்லவைக்கும்-
அல்லது வெட்கத்தை அவளிடம் காணவைக்கும்-எது எப்படியோ-
எனது பரிசான தொள்ளாயிரம் ஆண்டுகள் பாரம்பரியத்தையும்
பிறிதோர் பரிசையும் எப்படி அவள் ஒன்றாகப் பார்க்கலாம்?-
எவர் குனிந்து இத்தகைய சிறிய செய்கைகளுக்குமுன் தலை குனிவார்?

அனைவர்க்கும் நன்றி சொல்வாள்-நல்லது-யாருக்குதரம் தாழ்ந்திடும்
அவளது இத்தகையைச் செயல்களை குறை சொல்ல?
அவளைத் திருத்தும் அளவிற்கு என்னிடம் திறமை இல்லை-
தனது செயலுக்கு அவள் வருந்தினாளா. என்ன?-
எப்படியெல்லாம் அவள் குறைகளை சுட்டிக் காட்டினாளா?
அப்படியே இறங்கிவந்து அவள் குறைப்பாட்டைச் சுட்டிக்காட்டினாலும்
அப்படியே சிரித்துவிடுவாள்-வேறு எவர் சொல்லியிருந்தாலும்-
இது வளர்ந்தது- நான் கட்டளை பிறப்பித்தேன் -அவள் சிரிக்கவேகூடாதென-அவள் சிரிப்பது அடங்கியது.

அதோ அங்கேஉயிரோடிருப்பதுபோல் ஓவியமாய் நிற்கிறாள்!
சற்றே-எழுந்துவா-கீழே செல்வோம்-நமக்காகக் காத்திருப்பார்

உன் பிரபுவின் செல்வமும் அவரது ஈகைக்குணமும் நன்கு தெரியும்-
ஆயினும் நான் எதிர்பார்ப்பது அவளது மகளையே!,-வரதட்சணை அல்ல!
இந்த ஓவியத்தைப் பார்-நெப்டியூன் எப்படி கடல்குதிரையை அடக்குகிறது!
இன்ஸ்ப்ருக்கின் க்ளாஸ் வரைந்த ஓவியம் இது!

Based on Robert Browning's My last Duchess.

Comments

Popular posts from this blog