Srikrishnan Ku's photo.
லால்குடியில் ஒன்றாவது முடித்துவிட்டு, மதுரை தல்லாகுளம் ஆரம்பப் பள்ளியில் இரண்டாவதும் , மூன்றாவதும் படித்தேன்-1956 -58 களில்.லால்குடியின் வயல்வெளிகளும் ஊரின் நடுவே ஓடும் ஓடைகளும் இன்னும் என் நெஞ்சில் அழகிய ஓவியமாய் அலங்கரிக்கின்றன.தல்லாகுளம் ஏரி, அதையும் தாண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் ,சாலையின் இருபுறமும் நெடிய மரங்களும் -பறவை ஒலிகளும் என்ன சாதாரண இயற்கைச் சித்திரங்களா? அந்த மிகச் சிறிய வயதில் நான் ப...டித்த -

தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, -மருதம் வீற்றிருக்கும் மாதோ.

என்னை மிகவும் கவர்ந்த பாடல்.இலக்கிய உணர்வுகளுக்கு வித்திட்ட இனிய கம்பன் பாடல் அது-அந்தக் காலத்தில் இரைந்து தான் படிப்போம் -எந்த சப்ஜெக்ட் ஆக இருந்தாலும் சரி.சலிக்காமல் வெறுக்காமல் படிப்போம்-அதிகமாக வானொலிப் பாடல்கள்தான் சில சமயங்களில் டிஸ்ட்ராக்ஷன்.

பள்ளிக்குச் செல்வதும் வருவதும் சுகமான அனுபவங்கள். மிகவும் பின்தங்கிய ஏழை எளிய மாணவர்கள் நிறையபேர் எனக்கும், மணிக்கும் வகுப்புத்தோழர்கள்.மதுரைக்கும் மனதுக்கும் பாலமாகவே மதுரைப் பள்ளி நண்பர்கள் அமைந்தனர்.இந்தியா சுதந்திரம் அடைந்து கொஞ்ச காலமே ஆகியிருந்ததால் வறுமையின் நிறம் எல்லோருக்குமே தெரியும்.அப்படி இருந்ததனால்தான் சொற்களின் சிறப்பும்-அவைகளின் பின் பொதிந்திருந்த பொருளும் அவைகளின் அழகும் உண்மையும் எங்களுக்கு எளிதாகப் புரிந்தது.எங்கள்கனவுகளெல்லாம் வானத்தைப் பிடிக்கும் முயற்சியில் இல்லை.எளிமையான வாழ்க்கை முறையும் ,எதற்கும் ஏங்காத உள்ளமும் இருந்ததால் கவலை இல்லாதவர்களாகவே சிரித்துக்கொண்டே வாழ்ந்தோம்.

ஆத்திச்சூடியாகட்டும், திருக்குறளாகட்டும் போட்டிபோட்டுக் கொண்டு படிப்போம், மனப்பாடம் செய்து ஒப்புவிக்கவும் செய்வோம்.

ஏனோ தமிழ்ப்படப்பாடல்கள் .இந்திப்படப்பாடல்கள் மட்டும் சோகப் பாடல்களாகவே ஒலித்து ஒருவித வருத்தமான மூடுக்கே கொண்டு விடும்.-அதுவும் பார்த்த ஒரு சிலப் படங்களும் கண்ணீரை வரவழைத்து சினிமா என்றாலே அலர்ஜி ஆகிவிட்டன.சுகமான தமிழ் பாடல்களே நல்ல கற்பனைத்திறத்தையும் காட்சி இன்பத்தை ரசிக்கும் மனோ பாவத்தை வளர்த்தன..தல்லாகுளம் ஏரியைச் சுற்றி வருவோம்-வயல் வெளிகளைச் சுற்றிவருவோம்-மனதெல்லாம் நல்ல செய்யுள் எதிரொலிக்க!' ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம், ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம், மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம், வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம் "என்றெல்லாம் அடிக்கடி சகோதரர்களுடன் பகிர்ந்துகொள்வோம்.

இன்னும் நாவல்கள் படிக்கth துவங்காத காலம் -ஆனால் 'பஞ்ச தந்திரக் கதைகள் படிக்க ஆரம்பித்த பருவம்-பாரதமும், ராமாயணமும் கேட்டுக் கேட்டு மகிழ்ந்த காலம்.பாசமலர்ப் படப்பாடல்களும் -பித்துக்குளி முருகதாஸ் முருகன் பாடல்களும் ,TMS ன் தெவிட்டாத கிராமத்துப் பாடல்களும் கவி உள்ளதையே ஒவ்வொருவருக்கும் ஏற்படுத்திய நேரமது.வில்லிப்புத்தூர் பாரதமும், கம்பனின் ராமாயணமும் ஆறாவதிலிருந்து விரிவாகப் படிக்க ஆரம்பித்தோம்.தமிழாசிரியர்கள் நல்ல புலமையும், பாடும் திறமை உடையவர்களாகவும் இருந்தது எங்களுக்கு கிடைத்த பேறே!

Madurai O madurai !

Comments

Popular posts from this blog