காஷீஅஸ் :மன்னியுங்கள் சீசர்!மன்னியுங்கள் அவனை!உங்கள் கால்களில் விழுகிறேன்...புபிலிஎஸ் சிம்பருக்கு மீண்டும் குடியுரிமை வழங்கக்கோரி இறைஞ்சுகிறேன்!
சீசர்:நீயாக நான் இருப்பின் அது நடக்கலாம்.அடுத்தவரைக் கெஞ்சி அவர் மனதை மாற்றவிழைவதைவிட இரத்தலேகூட மேல்.நானோ வட துருவம் போன்றவன்-அதன் ஸ்திரமான தன்மைக்கு எந்த விண்மீனும் ஈடாகாது.வானம் எண்ணமுடியா எத்தனையோ விண்மீன்களைக் காட்டலாம்-அவைகள் தீயாலானவை-ஒளிர்பவை-ஒ...ன்றுமட்டுமே நின்று நிலைத்து ஒளிர்கிறது-அதுபோன்றே இப்புவியிலும்-எத்தனை மனிதர்கள் இங்கிருப்பினும் ஒருவனைமட்டும் எவரும் தாக்கமுடியாது-அவன் தனது நிலைப்பாடை விடமாட்டான்-அதுவே நான் என்றறி!சிம்பர் கதையும் அப்படிதான்-அவனை நாடு கடத்தியதில் எந்த மாற்றமும் நான் அனுமதியேன்-அதில் நான் உறுதியாக இருப்பேன்!
சின்னா:(மண்டியிட்டு):ஓ சீசர்!
சீசர்:போதும் ! உன்னால் ஒலிம்பஸ் மலையைத் தூக்கமுடியுமா?
டீஸிஸ்:(மண்டியிட்டு): மாபெரும் சீசர்!
சீசர்:மண்டியிட்ட புரூட்டசுக்குக்கூட நான் அனுமதி மறுத்தேன்!
காஸ்கா:எனது கரங்கள் எனக்காகப் பேசும்-
(காஸ்கா மற்றும் சதிகாரர்கள் சீசரை குறுவாட்களால் குத்துகின்றனர்!-புரூட்டசும் கடைசியாக)
சீசர்:நீயுமா-புரூட்டஸ் -சீசர் வீழ்வான்!

Comments
Post a Comment